எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 5 நவம்பர், 2012

ரஜனி பற்றி இந்தியா டுடே ரஜனி சிறப்பிதழில்..

சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் ஸ்பெஷல் பதிப்பு ஒன்றை இந்தியா டுடே வெளியிட்டது. அதில் ரஜனி பற்றிய கருத்துக்களைப் பகிரும்படிக் கேட்டிருந்தார்கள். என்னுடைய கருத்து இதோ..


“ ரஜனி என்றால் நம் மனதில் வரும் பிம்பம் என்ன. ஸ்டைல் என்றால் ரஜனி ரஜனி என்றால் ஸ்டைல். என் சகோதரர்கள் முரட்டுக்காளையில் வரும் , ”பொதுவாக என்மனசு தங்கம். ஒரு போட்டி”யின்னு வந்துவிட்டா சிங்கம் என்ற பாடலை பள்ளிப் பருவத்தில் அடிக்கடி பாடி ஆடுவார்கள்.
குப்பத்து ராஜா படம் வந்த போது இனி ரஜனி அவ்வளவுதான் என்றார்கள். ஆனால் ஜெயித்து இன்றும் சிங்கம் சிங்கிளாகத்தான் வரும் என்று முத்தி்ரை பதித்த மாவீரன். “ சிவாஜி” . ”காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்” என்று பாடிய அவரை இன்று ”காதல் அணுக்களிலும் ”ரசிக்க முடிவது அவரின் காந்த சக்தி. அரசியலை விட ஆன்ம சக்தியே பெரிது என உணர்த்திய சுயம்பு.

ரசிகர்கள் தங்களோடு ஒருவராக அடையாளம் காணும் ஒவ்வொரு ஹீரோவும் ஜெயிப்பார். ஸ்டைலாக தலை கோதும் ஆளை ஹேய் என்ன ரஜனின்னு நினைப்பா என்று கேட்போம். ஒரு முறை டெல்லியில் இருக்கும் போது குருதிப் புனல் படத்தை மகாராஷ்ட்ரீய ரங்கீனில் பார்த்தோம்., அப்போது என் சின்ன மகன் ( 7 வயது ) உணர்ச்சி வசப்பட்டு கமலும் ரஜினி மாதிரி வீரனாயிட்டான் என்றான். !

காயத்ரி , மூன்று முடிச்சு, ஜானி, பதினாறு வயதினிலே, அபூர்வராகங்களில் இன்றைய பூச்சுக்கள் இல்லாத வில்லன் ரஜனியையும் ரசிக்கலாம். கேபியின் அறிமுகம், எஸ்பி. முத்துராமன், பஞ்சு அருணாசலம் கே.எஸ். ரவிக்குமாரின் பல படங்கள், மற்றும் சூப்பர் ஸ்டாராக ரசிகர்கள் உச்சியில் வைத்தாலும் இன்றும் ஒரு சாதாரண சிவாஜி ராவாக தன்னை விழாக்களில் பிரகடனப் படுத்திக் கொள்ளும் மன உறுதி இருக்கிறது. ரோபோ, ராணா வரை வந்தபின்னும் மனம் என்னவோ முள்ளும் மலரும்., ஆறிலிருந்து அறுபதுவரை ரஜனியிலிருந்து மீளவே இல்லை. அமிதாப் செய்வது போல எங்களைப் போன்ற ரசிகர்களுக்காக யதார்த்தமான் இன்னொரு படம் செய்யவேண்டும் சின்னக் குழந்தைகளின் செல்ல இயந்திரனான ரஜனி.

 டிஸ்கி:- இந்தக் கருத்து டிசம்பர் 2011 இந்தியா டுடே ரஜனி சிறப்பிதழில் வெளிவந்தது.

8 கருத்துகள்:

  1. வெகு அருமை. எங்க வீட்டிலயும் ரஜினிதான் ஹீரோ.சிடுவேஷன் டயலாகிற்கு மகன் ரஜினி பன்ச்களைத்தான் பயன் படுத்துவான்:)

    பதிலளிநீக்கு
  2. ரஜினி சினிமாவில் மட்டுமல்ல எதார்த்த வாழ்க்கையிலும் மிக எளிமையான நல்லமனதுடைய மனிதர்.. அதனாலேயே அவருக்கு மட்டும் சின்னக்குழந்தை முதல் வயதானவர் வரை ரஜினி ரசிகர்கள் உண்டு..... எங்க ரெண்டு பிள்ளைகளும் பயங்கரமான ரஜினி ரசிகர்கள்.... இங்கு தியேட்டரில் எந்திரன் படம் போட்டபோது எங்க குட்டிப்பிள்ளை சேரில் உட்காராமல் குதித்துக்கொண்டே இருந்தான் ரஜினி வரும்போதெல்லாம்....

    அன்பு வாழ்த்துகளுடன் கூடிய நன்றிகள் தேனம்மை. சௌக்கியமாப்பா?

    பதிலளிநீக்கு
  3. தங்களின் கருத்து அருமை...

    எனக்கு ஞாபகம் வருவது அவரின் பணிவு... எவ்வளவு உயர்ந்தாலும் தொடர வேண்டும்...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  4. //அமிதாப் செய்வது போல எங்களைப் போன்ற ரசிகர்களுக்காக யதார்த்தமான் இன்னொரு படம் செய்யவேண்டும் சின்னக் குழந்தைகளின் செல்ல இயந்திரனான ரஜனி// -இதே இதே!
    வாழ்த்துக்கள் அக்கா.

    பதிலளிநீக்கு
  5. Mam Rajini nu sonna.... ATHIRUM nu solluvanga.... But enakku emotional akuthu.... ala thonuthu.... puriyala enakku avarukkumana anbai.... Nalla erukkanum anna....

    பதிலளிநீக்கு
  6. நன்றி வல்லி சிம்ஹன்

    நன்றி மஞ்சுபாஷிணி

    நன்றி தனபால்

    நன்றி தொழிற்களம் குழு

    நன்றி ஆசியா

    நன்றி சரண் சக்தி

    நன்றி ராஜா

    பதிலளிநீக்கு
  7. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  8. எல்லோரும் நினைக்கும் கருது அருமையாக் சொன்னீர்கள் தோழி

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...