எனது பதிநான்கு நூல்கள்

திங்கள், 25 ஜனவரி, 2021

காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை

 திருநெல்வேலியைச் சேர்ந்த நெல்லை உலகம்மை என் அன்புத்தோழி. கல்வி ஆலோசகர், சிறப்புப் பேச்சாளர், தன்னம்பிக்கைப் பயிற்சியாளர், கணேஷ் ஐ ஏ எஸ்ஸின் அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆஃபீசர், இன்னும் சொல்லிக்கொண்டே செல்லலாம். என் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் வெளியானதும் முதலில் வந்து வாங்கிப் பாராட்டியவர். 

காரைக்குடி அழகப்பா பல்கலையின் ஆசியான் கவிஞர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியவர். எப்போதும் உள்ளம் நிறைந்த புன்னகை மலர்ந்த அவர் முகத்தைப் பார்த்தாலே நம் உடலிலும் மனதிலும் எனர்ஜி ஏறிவிடும். 

எனது காதல்வனம் நூல் வெளியீட்டிலும் அவர் கலந்து கொண்டு பொன்னாடை எல்லாம் போர்த்தி வாழ்த்தினார். அந்த அன்பு உள்ளத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள். அவ்விழாவில் சிறப்புவிருந்தினராகக்கலந்து கொண்டு என் நூலை வெளியிட்ட அன்புத்தோழி சாஸ்த்ரி பவன் யூனியன் லீடர், தலித் பெண்கள் நல சங்கத்தலைவி, சாஸ்திரி பவனில் அம்பேத்கார் சிலை அமைக்கக் காரணமானவர், பல்வேறு சங்கங்கள் அமைப்புகள் மூலம் பள்ளி கல்லூரிகளுக்கு உதவிடும் அன்புள்ளம், பறவைகளையும் தன் உயிர்போல் எண்ணி அன்றாடம் உணவிடும் தாயுள்ளம் கொண்ட தோழி மணிமேகலை, பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் என்ற நூலை அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தார். எனது நூலை விழாவுக்கு முன்பே வெளியிட்ட அன்புத் தோழி நெல்லை உலகம்மை. ( வேறொரு விழாவுக்குச் செல்லவேண்டி இருந்ததால் அவர் அப்போதே வெளியிட்டு விட்டுத் தன் உதவியாளருடன் கிளம்பினார் ) 


சிறப்பு விருந்தினர்களுடன் உரையாடல். தோழி நெல்லை உலகம்மை, மணிமேகலை மேடம் பின்னணியில் மதிப்பிற்குரிய தோழர் இளங்கோ சார் & தோழி பத்மா இளங்கோ. அன்பு கொண்ட நெஞ்சள் சூழ என் நூல் வெளியீடு நடந்தது என் புண்ணியமே. இப்போது இருக்கும் சூழலை நினைத்தால் இம்மாதிரி நூல் வெளியீடுகளும் கூட்டங்களும் இனி எப்போது புத்துயிர் பெறுமோ எனத் தோன்றுகிறது. நன்றி தோழிகளே. 

2 கருத்துகள்:

  1. மனம் நிறைந்த வாழ்த்துகள். நூல் வெளியீடுகள் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி வெங்கட் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...