எனது பதிமூன்று நூல்கள்

வெள்ளி, 10 ஜூலை, 2020

பிருந்தாவன்.மை க்ளிக்ஸ். BRINDAVAN. MY CLICKS.

பிருந்தாவனத்தில் பூவெடுத்து.. என்ற பாடலைக் கேட்டிருக்கலாம். இன்னும் தமிழ்சினிமாவின் 70 களில் பல்வேறு பாடல்கள் இங்கேதான் எடுக்கப்பட்டுள்ளன. டைரக்டர்களின் டிலைட்டான பிருந்தாவனைச் சுற்றிப் பார்ப்போம் வாங்க. 

கூடவே நடிக நடிகையரும் உங்க மனக்கண்ணில் தட்டுப் படலாம். அதேபோல் அவர்கள் பாடி ஆடிய பாட்டும். மறக்காம பின்னூட்டத்துல அதையெல்லாம் குறிப்பிடணும் சொல்லிட்டேன் :)

மைசூரில் வண்ணமயமான கோடை என்ற தலைப்பில் முன்பே இங்கே மாலையில் ஒலி/ஒளி பரப்பு செய்யப்படும் மியூசிக் ஃபவுண்டன் பற்றி எழுதி இருக்கிறேன். 


இது பிருந்தாவனின் வெளிப்புறம். கீழே பார்ப்பது உட்புறம். வாங்க எண்ட்ரன்ஸ் டிக்கெட் வாங்கிக்கிட்டு உள்ளே போய் உலா வருவோம்.இடதுபுறம் போகும் பாலம்/பாதை மியூசிக் ஃபவுண்டனுக்குப் போகும்.


கிருஷ்ணராஜ உடையார் கட்டிய அணைக்கட்டு. எம்மாம் பெரிசு :)


அணைக்கட்டுக்குப் பக்கவாட்டுகளில் போகும் பாதைகள்.

இது பூங்காவுக்குப் போகும் பாதை.
 ப்ரவுன் கலர் க்ரோட்டன்ஸ்.

அதில் சிவப்புக் கல்வாழைப்பூக்கள்.

இதோ வந்திடுச்சே அணைக்கட்டிலிருந்து துளித்துளியாய்ப் பொங்கி வரும் ஃபவுண்டன்கள்.


இந்த இடத்திலெல்லாம் என்ன பாட்டு வந்திச்சுன்னு சொல்ல முடியுமா. ஜெய்சங்கர், ஜெயலலிதா, போன்ற பலர் நினைவில் ஆடுறாங்க.

2010 களில் இன்னும் மாடர்ன் ஆக்கிட்டாங்க. சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு ஏற்ப மேலும் விரிவாயிடுச்சு இந்தப் பூங்கா.


சின்னதா ஓய்வெடுக்க ஒரு குட்டி இடம்.

முகமதியர்கள் ஆட்சி இருந்த இடம் என்பதால் ஹைதையிலும் , பெங்களூரிலும் இந்த மாதிரி வளைவான ஆர்ச்சுகளையும் , மதில் டிசைன்களையும் , டோம்களையும் மேலே கும்பக் குமிழ்களையும் பார்க்கலாம்.

பூக்காடு.

நீர்க்காடு.

காலார நடக்க புல்வெளிப்பாதைகள்.


பாதையில் கட்டியம் கூறும் க்ரோட்டன்ஸுகள்.

ஆங்காங்கே சின்னச் சின்ன பம்புகள். நீரை ஃபவுண்டன்களாக மேலே வீசி அடிப்பவை இவைதான்.

நீர்ப்பாதையின் பக்கவாட்டில் மலர்ப்பாதை.புகைப்பட செஷன்.

பக்கத்தில் உட்கார்ந்து நீரைக் காலால் அளையலாம். ஆனால் அந்த ஓரத்துச் சாரலில் கூட நாமும் ஈரமாகிவிடுவோம்.
இரவில் இங்கேயும் வர்ண விளக்குகளின் ஜாலங்கள் உண்டு.

விளக்குக் கம்பம் தோறும் அவற்றைச் சுற்றிப் பூக்கள்.


வட்டமாக வீசும் நீர்ச் சாமரம்.


சரி வாங்க மியூசிக் ஃபவுண்டனைப் பார்க்கப்போலாம்.

யானைமுக ஃபவுண்டன் கட்டியம் கூறுது பாலத்தின் முகப்பில்.

அதோ ஜொலிக்குதுல்ல அந்த இடத்துக்குத்தான் நாம போகணும். எண்ட்ரன்ஸ் டிக்கெட் உண்டு. அரை மணிக்கொருக்கா ஷோ உண்டு. ஜல்தி ஆவோ. பார்த்துட்டு நம்ம பெங்களூரு பஸ்ஸுக்குத் திரும்புவோம்.


போயிட்டு வந்து பஸ்ஸில் உட்கார்ந்தாச்சு. நீரும் ஊரும் கலர் நிழற்படங்களாய் உங்களுடன் உலா வந்தனவா.


சரி சரி நினைவில் வரும் பாடல்களை பின்னூட்டத்துல எழுதுங்க மக்காஸ் :) 


டிஸ்கி:- இவற்றையும் பெங்களூருவில் பாருங்க.

1.  மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.

2.குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)
.
3. லால்பாகில் கோடையைத் தணிக்கும் கீரைகள். 

4. நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. பாகம் 1 

5. இன்னும் சில ஒற்றையர்கள். பாகம் 2

6. மஞ்சள் முகமே வருக. (LAL BAGH )

7. குடியரசு/சுதந்திர தினத்தில் லால்பாக்.

8. இன்னும் சில ஒற்றையர்கள் பாகம் 3

9.  காதல் ரோஜாவே. -- பாகம் 4 

10. காதல் ரோஜாவே..-- பாகம் 5

11. கோடையைக் குளுமையாக்கும் ஒரு கூடைப் பூக்கள்.

12. கழிவுநீரிலும் உயிர்க்கும் கல்வாழைகள்.

13. பிருந்தாவனத்தில் இசை நீரூற்றின் வண்ண நடனம். மைசூரில் வண்ணமயமான கோடை. 

14. பணம் கொழிக்கும் பனசங்கரி – சாகம்பரி. 

15. என் தோட்டத்தில் எத்தனை ரோஜா. இருவர்

16.கொள்ளை லாபம் தரும் கோழிக்கொண்டைப்பூ

17. நான்கு வாயில்கள். லால் பாக். 

18. சந்தனம் பூசும் மஞ்சள் நிலாக்கள்.

19. மனித உருவிலும் பசுமைச் சிற்பங்கள். 

20. மலர்கள் நனைந்தன பனியாலே. 

21. நீர்த்துளியா தேன்துளியா..

22. தேன் உண்ணும் வண்டு.. மாமலரைக் கண்டு. 

23. பெண்ணல்ல பெண்ணல்ல பிங்க்கிப் பூ.. :)

24. லால் பாக் . தும்பிக்கைகளா பூமியின் நம்பிக்கைகளா.  

25.  லால் பாக். அழகு ஆர்க்கிட்ஸ்

26.  லால் பாக். பச்சை நிறமே பச்சை நிறமே .

27. லால் பாக் . என்னைக் கவர்ந்த சில இடங்கள்.

28. லால் பாக். பசுமை வளைவுகள்.

29. அழகழகாப் பூத்திருக்கு. ! 

30. மொக்கும் மலரும்.

31. இலை அலையும் ரோஜாப் படகும் பூ(மி)ப் பந்தும்.

32. மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன. மூவர் அணி.

33. ஸ்ரீ முகுந்தம்மா தேவி கோவில்.

34. வெற்றிலை பூமாலையும் வெல்ல நெய்விளக்கும்.

35.. பனஸ்வாடியில் ஐந்து கோவில்கள்.

36. துறவின் வயலட். பான்ஸியும் பெட்டுனியாவும்.

37. மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில்

38. ஸ்ரீரங்கப்பட்டினா ஸ்ரீரங்கநாதஸ்வாமி கோயில்.

4 கருத்துகள்:

 1. படங்களுடன் பதிவு அருமை. பெங்களூரைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறீர்கள் போல?

  நமது வலைத்திரட்டி: வலை ஓலை

  பதிலளிநீக்கு
 2. நன்றி சீனி சகோ

  நன்றி சிகரம் பாரதி சகோ. ஆம் சகோ

  நன்றி டிடி சகோ

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...