எனது பதிமூன்று நூல்கள்

புதன், 8 ஜூலை, 2020

பலவான்குடி நகரச் சிவன்கோவிலில் தெய்வீகச் சிற்பங்கள்.

பலவான்குடி நகரச் சிவன்கோவில் 150 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இந்த வருடம் ஒன்பதாவது முறையாகக் கும்பாபிஷேகம் நடைபெற்றது.பலவான்குடிப் பெருமக்கள் ஊரோடு உணவிட்டு மகிழ்ந்தனர். கும்பாபிஷேகத்திலும் பல்வேறு சிறப்புகள்.

ஐந்து நிலை ராஜகோபுரம் புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. மீனாக்ஷி சுந்தரேசுவரர் சந்நிதி எதிரே அனைத்துத் தெய்வீகச் சிற்பங்களும் சுதைச் சிற்பங்களாய் இடம்பெற்றுள்ளது சிறப்பு.

நால்வருடன் காரைக்காலம்மையாரும் பட்டினத்தாரும் கூட இடம்பெற்றிருக்கிறார்கள். பள்ளி கொண்ட பெருமாளும் சிவன் சந்நிதியின் முன்புறம் வலப்பக்கமாக எழுந்தருளி இருக்கிறார்.


முந்தி முந்தி விநாயகன் முன்னிருந்து வரவேற்கிறான். சிதம்பரத்தின் ஆடலரசரன் ஓவியமாக ஊழிக் கூத்தில்.


சுவாமி சந்நிதியின் எதிரே இருக்கும் சுதைச் சிற்பங்களில் தாமரையும் தனமும் பொலிய மகாலெக்ஷ்மியும் லெட்சுமி குபேரரும்.

அடுத்து கரும்பு வில் ஏந்தி பெங்களூரு ஸ்ரீ ராஜராஜேஸ்வரி

பெருமைமிகு நந்தி ஈஸ்வரர்.

கனிவோடு காட்சி தரும் காஞ்சி காமாட்சி.

கஞ்சிக் கலயம், கரண்டியுடன் காட்சி தரும் காசி அன்னபூரணி.

மீனாக்ஷி திருமணம்.

மார்க்கண்டேயரைக் காத்துக் காலனைத் தாக்கும் பரமேஸ்வரன்.


அப்பனுக்குப் பாடம் சொன்ன சுவாமிமலை சுப்பையன்.
பக்தியால் கண் பிளந்து அப்பிய கண்ணப்பன்.


திருநாவுக்கரசர்.

அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகருடன் பட்டினத்தாரும், காரைக்காலம்மையும்.

சுந்தரர்.

ஞானப்பால் அருந்திய திருஞான சம்பந்தர்.

திருவடி தீட்சை பெறும் மாணிக்க வாசகர்.

கருவறையில் மீனாக்ஷி சுந்தரேசுவரர்.

வெளியே ராகு கேதுவுடன் விநாயகர் தனிச்சந்நிதியில்.

விதம் விதமாய் விநாயகர்கள்.

ராஜமாதங்கி.

வெளியே கூடியிருக்கும் மக்கள் வெள்ளம்.

யாகசாலை அலங்காரம் வெகு பிரம்மாண்டம்.

கோவில் கோபுரத்தின் கவின்மிகு காட்சி.

முன் மண்டபத்தில் தனிச்சந்நிதியில் ஸ்ரீதேவி சமேதராகப் பள்ளிகொண்ட பெருமாள். 


மொத்தத்தில் பலவான்குடி நகரச் சிவன்கோவிலில் கருவறை எதிரே தூண்களில்  குடிகொண்ட தெய்வீகச் சிற்பங்களைப் பார்த்துப் பரவசமடைந்தோம். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமும்.

திருச்சிற்றம்பலம். 

4 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...