எனது பதிமூன்று நூல்கள்

திங்கள், 27 ஜூலை, 2020

கார்த்திகை பூசையும் மாவிளக்கும்.

கார்த்திகை பூசையன்று முருகனுக்கு மாவிளக்கு வைப்பது காரைக்குடி மக்களின் பழக்கம். மாவிளக்கு மகாத்மியத்தைச் சொல்ல ஆரம்பித்தால் நீண்டுகொண்டே போகும்.

மகர்நோன்பு, திருவிழா காலங்களில், கார்த்திகை சோம வாரங்களில் , அம்மன் கோவில்களில்,  சாமி எழுந்தருளப் பண்ணும்போது,  மாவிளக்கு வைப்பது இங்கே வழக்கம். இதற்கெனவே எல்லார் வீட்டிலும் மாவிளக்குச் சட்டி என்றொரு பாத்திரம் இருக்கும். மாலையில் மாவிளக்கு வைத்துவிட்டு வீட்டுக்கு வந்ததும் திரியும் நெய்யும் பட்டு முருகிய அந்த மாவிளக்குத் துண்டைத் தேங்காய்ச் சில்லோடு உண்ணப் போட்டி நடக்கும்.
கார்த்திகை பூசையில் சாமிக்குப் படையல் இட்டதும் தண்டாயுதபாணியின் முன் அனைத்து மகளிரும் மாவிளக்கு வைத்து வெற்றிலை பாக்கு வைத்துத் தேங்காய் உடைத்துத் தீபம் பார்ப்பார்கள்.


முருகனுக்கு தேங்காய் பழம் கொடுத்து அர்ச்சனையும் செய்வார்கள்.
இதோ தீப தூப ஆராதனைக்குத் தயாராய் அனைத்து மாவிளக்குகளும் பூஜா திரவியங்களும் தயாராய் உள்ளன.


வளவுப் பத்தியில் மக்கள் கூடி நின்று வெற்றிவேல் முருகனைத் தரிசிக்கிறார்கள்.


நிறைவான உணவுப் படையல் வேலாயுதன் முன்னே.

அவன் அருளாட்சிபுரிய ஆராதனைகள் தொடங்குகின்றன. .


பண்டாரத்தார் வந்து மணி அடித்துத் தீபம் காட்ட அனைவரும் விழுந்து வணங்குகிறார்கள்.


சமைத்த அன்னத்துக்கும் தீபம். உணவே கடவுள்.


கறிவகையறா.

விநாயகப் பானைக்கு பூசை.

பெண் ஒருவர் சங்கு ஊதி சேகண்டி அடிக்கிறார்.


பானையைத் தலைப்பாகை கட்டி வணங்கி எடுத்துச் சென்று வைக்கிறார்கள்.

முருகனுக்குத் திரும்பவும் தீபாராதனை நடைபெறுகிறது.தாயாதி பங்காளி ஊர்மக்கள் அனைவரும் வணங்குகிறார்கள்.
தீப தரிசனம்.

ஊனுக்கு உயிர் தரும் ஊண். அதை உண்ண அமர்ந்திருக்கும் மக்கள்.


அம்மா வீட்டின் வளவுப் பத்தியில் பந்திக்கட்டு.

சரி சாப்பிடலாம்.வாங்க மக்காஸ் அனைவரும். மாவிளக்கும் உண்டு. :) 

3 கருத்துகள்:

 1. கண் குளிரக் கண்டேன்
  கார்த்திகைப் பூசையை...

  கந்தா போற்றி.. கடம்பா போற்றி..
  கார்த்திகை மைந்தா போற்றி.. போற்றி..

  பதிலளிநீக்கு
 2. நன்றி துரை செல்வராஜு சார்

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு
 3. கார்த்திகைப் பூசையை நேரில் கண்ட மகிழ்ச்சி

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...