எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 16 மே, 2020

கிருமிகளும் கொரோனா போராளியும்.

2621. கண்கள் புத்தகத்தை வாசிக்கும்போது மனது வேறொன்றை யோசித்துக் கொண்டிருக்கிறது

2622. ஒரு வாரம் முழுக்க லாப்டாப்பையும் செல்ஃபோனையும் மாற்றி மாற்றி முறைத்துப் பார்த்தபடி அசையாமல் எழுதியோ வாசித்தோ வந்திருக்கிறேன். உள்ளே இரு என்றதும் வெளியே குதிக்கத் துடிக்கிறதே இதயம்.

2623. தேன்சிட்டுகள், மைனாக்கள், தும்பிகள், வண்ணத்துப்பூச்சிகள், காகங்கள், கோழிகள் பொன் வெய்யிலில் செம்மாந்து திரிகின்றன. கம்பித் தடுப்புக்குள் வந்து என் கண்ணிமைகளையும் படபடத்துப் பறக்க வைக்கிறது வெய்யில்

2624. நம்மைச் சார்ந்தோரின் துயரம் நம்மையும் தாக்கி விடுகிறதே

2625. பூமி புதிதாகிக் கொண்டிருக்கிறது. மனதுதான் நோய்க்கூடமாகி விட்டது


2626. மிக அருமையான திட்டம். இப்படி வாரா வாரம் கொடுத்தால் கூட நல்லது. தேனி தவிர வேறு எந்த ஊர்களில் எல்லாம் இப்படியான நடைமுறை உள்ளது எனத் தெரியப்படுத்துங்கள். காரைக்குடியில் இந்த நடைமுறை உள்ளதா ? ( திங்கள், வியாழன், சனி என மூன்று சந்தைகள் உள்ளன. )

#காய்கறி பேக்கேஜ். 

2627. கொள்ளை நோய்கள் தாக்கும்போது பிள்ளைகள் கையால் கொள்ளி கொடு எனக் கடவுளிடம் மரணவரம் கேட்கத் தோன்றுகிறது

2628. மன நெருக்கடி மிகுந்த காலகட்டத்தைக் கவனமோடும் முடிந்தவரை அதற்கான திறமையாளர்களைக் கொண்டும் செயலாற்றி நிலைமையை ஓரளவு கட்டுக்குள் வைத்திருக்கும் முதல்வருக்கும், பிரதமருக்கும் சிரம்தாழ்த்தி நன்றியறிவிக்கிறேன்.

2629.தெற்கிலும் மேற்கிலும் வானம் உண்டு. வடக்கு பால்கனியில் தெரியும் துண்டு வானம்தான் என் தனிப்பட்ட சொத்து

260. எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது சீயக்காய் கண்ணுள் செல்லாமலிருக்கக் கண்ணை இறுக்கமூடிக் கொண்டிருப்போம். அரைகுறையாய் சாய்கோணத்தில் மேனியில் விழும் பால்கனி வெய்யில் ஒரு எண்ணெய்க் குளியலின் வெதுவெதுப்புடனிருக்கிறது.

2631. Worth seeing movie <3 .="" amp="" ford="" harrison="" jones="" lee="" span="" tommy="">

# THE FUGITIVE. 

2632. என்னை முதன் முதலா எங்கே பார்த்தீங்க ?

2633. எங்க அபார்ட்மென்ட் செக்யூரிட்டிகளில் ஒருவரான கந்தனுக்கு சென்றவாரம் புதன் போஸ்ட் ஏதும் வந்திருக்கான்னு கேக்க ஃபோன் செய்தேன். அவர் பொண்ணு ஃபோனை எடுத்து அப்பாவுக்கு ஒரே இருமல் நிக்கவேயில்லை என்றாள். திக் கென்றது. நல்ல மனுஷன். ஏதும் வேணும்னா சொல்லுங்க நான் கடைக்குப் போய் வாங்கி வாரேன் என்பார்.

போன வாரம் முத்துமாரிக்குப் பால்குடம் எடுத்து மொட்டை போட்டிருந்தார். காரைக்குடி மட்டுமல்ல சுத்துப்பட்டுப் பதினெட்டுப் பட்டியும் மாரியம்மன் கோவிலில்தான் இருந்துச்சு. கொரோனா பீதி வேற.

நமக்குன்னு இல்ல. எல்லா வீட்டுக்காரங்களுக்கும் காரிலிருந்து பொருட்களை எடுத்து வீட்டுக்கு வந்து கொடுப்பார்.

தனித்திருக்கும் ஓரிருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் பறந்துவிடுவார். அக்கம்பக்கம் வீட்டினருக்கு சொல்லி மருந்து, உணவு எல்லாம் வாங்கிக் கொடுத்து சரியாகும் வரை அவர்கள் வீட்டிற்கு அவ்வப்போது சென்று பார்த்து வருவார்.

திரும்ப ஃபோன் செய்ய நினைத்தபோது காலிங்பெல் சத்தம் காண்டாமணிபோல் ஒலித்தது. பத்து நாளாக லட்சுமண ரேகையை நாங்கள் யாரும் தாண்டவேயில்லை.

யோசனையோடு கதவைத் திறந்தால் கந்தன் நிற்கிறார். என்னாச்சு நலமா எனக் கேட்டால் இருமல்தான் கொன்னுருச்சு. இப்ப சரியாயிடுச்சு என்று சிரிக்கிறார்.

எங்கள் காவலர் கந்தன் உடல்நலம் பெற்று வந்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சியாயிடுச்சு.

2634. நாம் எதை எழுதினாலும் நம் போஸ்டில் குறை காண என்று சிலர் கிளம்புவார்கள். எங்கள் காவலர் கந்தன் பற்றிய போஸ்டிலும் அப்படியே. ஒருவர் காவலர்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி வேலை வாங்குவதாக குறிப்பிட்டுள்ளார். அது அவருடைய எக்ஸ்பீரியன்ஸ் போல. யாரும் வேலை வாங்குவதில்லை. அவருக்கு தனியாக மாதா மாதம் பணம் தருகிறோம், சம்பளம் போக. அதை நான் குறிப்பிட வேண்டாம் என்று சொல்லவில்லை. வேண்டாம் என்றாலும் அவர் வந்து உதவி செய்கிறார் என்றுதான் சொல்லி இருக்கிறேன். இவர்கள் எல்லாம் குற்றம் கண்டுபிடிக்கவே பிறந்தவர்கள்.

இன்னொருவர் என்னை எப்ப பார்த்தீங்க என்ற போஸ்டில் எனக்கு அட்வைஸியிருந்தார். எப்பப் பாத்தாலும் கொரோனா போராளியாகவோ, இல்லை கொரோனா பீதியை பரப்புபவராகவோ இருக்கணும்னு எதிர்பார்க்குறாங்களா

2634. ஒரே நிசப்தமா இருக்கு. யாராவது இருக்கேளா..

2636. Tuxedo, தசாவதாரம், mission impossible மாதிரி ஒரே கிருமி படமா கண்ணுக்குள்ள ஓடுது. அதுவும் கைமேரா மாதிரி கிருமிய நினைச்சா கிலீர்ங்குது. இப்ப இருக்க ஒரே ஆறுதல் Beela Rajeesh தான்.

2637. சென்னையில் இருந்தபோது பசங்க பஞ்சாப் ஆதர்ஷில் படிச்சிட்டிருந்தாங்க. காலையில் சின்னவனை ரிக்‌ஷாக்காரர் கொண்டுபோய் விட்டு விடுவார். மாலையில் பெரியவனை அழைத்து வருவார்.

ஒருவனுக்கு காலை ஷிஃப்ட் இன்னொருவனுக்கு மதிய ஷிஃப்ட் எனவே மதியம் பெரியவனை ஸ்கூலில் விட்டுவிட்டு சின்னவனை அழைக்கச் செல்லுவேன். அப்போது ஓரிரு தோழிகளுடன் பேசிக்கொண்டே வருவோம்.

ஒருமுறை ஒரு தோழி தன் மகனுக்கு வீட்டிலேயே முடி வெட்டியதாகச் சொன்னார்.நன்றாகத்தான் இருந்தது. இதென்ன கம்ப சித்திரமா நாமும் ட்ரை செய்வோம் என மறுநாள் பாத்ரூம் வாசலில் சேர் போட்டு உட்கார வைத்து தோளைச் சுற்றித்துண்டைப் போட்டு முடி வெட்ட ஆரம்பித்துவிட்டேன்.

எல்லாம் பால்பாக்கெட் வெட்டுற கத்திரிக்கோலால்தான். அது சரியா வெட்டுறமாதிரி இல்லை. எனவே தையல் மிஷினில் இருந்த பெரிய கத்திரியை எடுத்து வெட்டினேன். சும்மா கன்னாபின்னான்னு வெட்டியாச்சு. ஆனா எப்பிடி சீராக்குறது. கழுத்துக்குக் கீழே, காதோரம், முன்பக்கம் எல்லாம் பிசிறு பிசிறா இருக்கு முடி.

கிராப்பை சரி செய்ய அதற்கான கருவி இல்லை.முதலில் சரி என்று உட்கார்ந்த பசங்க ரெண்டு பேருக்கும் கண்களில் கண்ணீர் அருவி. கண்ணாடியை முன்னே பின்னே காண்பித்து எல்லாம் ஓகேவா இருக்கு அப்பிடின்னு டிசைன் டிசைனாக சமாதானப்படுத்தினேன்.

மாலையில் அப்பா வந்தவுடன் ஓ வென்று ஒரே அழுகை. மறுநாள் விடிந்ததும் சலூனுக்கு அழைத்துச் சென்றார். சலூன்காரர் கேட்டாராம்”வூட்டுலேயே வெட்டிவுட்டாங்களா?”

#நம்மளப்போல நெறைய அம்மாக்கள் இருக்காங்க போலிருக்கு

2638. முகநூலில் படத்துடன் போடாத பதிவுகள் கிடைப்பதில்லை. அதனால் எல்லாவற்றையும் ப்லாகிலும் போட்டுவிடுவேன். கூகுளிலும் தேடினால் சிலசமயம் நம் எல்லா போஸ்டும் கிடைப்பதில்லை. ப்ளாகர் டாஷ்போர்டிலும் 3,800 போஸ்ட் இருப்பதால் கிடைப்பதில்லை. பொறுமையாக லேபிள் போட்ட போஸ்டுகள் மட்டும்தான் எடுக்க முடிகிறது. இங்கேயும் ஹேஷ்டாக் போட்டால் கிடைக்குமென நினைக்கிறேன். வெவ்வேறு வார்த்தைகளைப் போட்டு செர்ச் செய்து பாருங்கள். அல்லது உங்கள் லாப்டாப்பிலேயே நாலைந்து தலைப்புகளில் தனித்தனி வேர்ட் ஃபைல்களாக சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். அது உடனே எடுக்க மிக எளிதான வழி.

2639. பேராசிரியர் அய்க்கண் நேற்றிரவு மாரடைப்பால் காலமானார். அன்னாரது ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.

#நற்கதை நம்பி என புகழப்பட்டவர் இவர். 

2640. வாடிகனில் ஈஸ்டராம். போப்புடன் சேர்த்து பத்து பேர் நிக்கிறாங்க. சென்ற வருடம் எடுத்த ஃபோட்டோவைப் பார்த்தேன், பத்தாயிரம் பேருக்கு மேல நிக்கலாம் போலிருக்கு




டிஸ்கி :-



4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


































121. டியட்ரோ டி மார்செல்லோவும் மெஹ்திப்பட்டினமும்.

122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.

123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.

124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.

125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.

126. செடிக்கன்னியும் சுயமோகமும்.

127. புஸ்தகாவும் ராயல்டியும்.

128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.

129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.

130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.

131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.

132. கிருமிகளும் கொரோனா போராளியும்.

133.செவிலித் தாயருக்கும் வங்கி ஊழியருக்கும் வந்தனங்கள்.




137. 

4 கருத்துகள்:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு
  2. முகநூல் இற்றைகளின் தொகுப்பு சிறப்பு.

    தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  3. Ulagam naalukku oru mathiri irukkuthu. Virumbiyathu nadanthal santhosam. Illanaa muyarchi kidaikum varai.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...