எனது நூல்கள்.

புதன், 1 மே, 2019

கோரமங்களா ஃபோரம் மாலும் மல்லேஸ்வரம் மந்திரி மாலும். FORUM MALL & MANTRI MALL.

ஹோஸூர் ரோட்டில் அமைந்துள்ள  ஃபோரம் மால் பிவிஆர் சினிமாஸுடன் இணைந்தது. ஆங்கிலப் படங்கள் பார்க்க இவையே உகந்தவை.


ஐ மாக்ஸ் தியேட்டர் வசதி என்பதால் கூட்டம் அள்ளும். மிக மிக பிரம்மாண்டமான திரையில் இப்படங்களைக் காண்பது என்பதே அழகான விஷயம்.


இதுவும் மல்லேஸ்வரம் மந்திரி மால் போல் புராதனமானதுதான். பிரஸ்டிஜ் குரூப்பால் நிர்வகிக்கப்படுது. 1999 இல் ஆரம்பிக்கப்பட்டதாம்.
7,80,000 சதுர மீட்டரில் அமைந்துள்ள இந்த மாலில் 12 தியேட்டர்கள் இருக்கு.அப்புறம் ஒரு விஷயம் இங்கெல்லாம் போனா சும்மா சுத்திப் பாத்துட்டு கடலைபோட்டுட்டு வெளியே வந்து இடியாப்பம் கொண்டக்கடலை குருமா வித் காஃபி சாப்பிடுங்க. மால் வாசலிலேயே 50 ரூபாய்க்கு இடியாப்பமும் காஃபியும் கிடைக்குது. செம டேஸ்ட்.

இதே தியேட்டருக்குள்ளே இருக்கும் ஷாப்புகளில் ஒரு ஸ்நாக் விலை 250/- 350/-, 750/-

ஐந்து மாடிக் கட்டிடம். எல்லா இடத்துக்கும் எக்ஸலேட்டர்.

நட்டநடு செண்டர்ல. இது வெண்டிலேஷனுக்காகவா. இல்ல சூரிய ஒளிக்கா ??

வித்யாசமான டிசைன்.

மேக்கப்பிலிருந்து டாட்டூஸ், ட்ரெஸெஸ் வரை எல்லாம் கிடைக்கும்.அம்மா அப்பா தவிர :)


கே எஃப் சி, மெக் டொனால்ட்ஸ் எல்லாம் இருக்கு.

அடிக்கடி புதுப்பிச்சுக்கிட்டே இருப்பாங்களாம் இந்த மாலை.

இது மந்திரி மாலில் ஐ மாக்ஸ் தியேட்டர். இந்த மால் 2010 இல்தான் ஆரம்பிக்கப்பட்டிருக்கு.

ஆனால் அமைப்பில் வித்யாசம் . நடுவே ரவுண்டாக ஓபன் வைத்து இடம் விட்டிருப்பார்கள் எல்லா மாலிலும்.இங்கே அந்த ரவுண்டிலும் கடைகள்.

மற்ற மால்களை செவ்வக ஷேப்பில் சுற்றி ஏறி இறங்கிவந்தால் இங்கே ரவுண்ட் ஷேப்பில் நாம் சுற்றி ஏறி இறங்கி வரலாம்.


அங்கே விற்பதை உப்பு நீர் உள்ளவர்கள் வாங்கிவிட வேண்டாம்.

வெஜ் ரோல்ஸ் ஒரே உப்பு. பேர்தான் வேறு வேறு . பட் வெஜ் ரோல்ஸ், வெஜ் ஸ்க்யூவர்ஸ், ஆலு டிக்கி எல்லாமே உருளைக்கிழங்குதான். லேசா பதப்படுத்திய காயை தூவி இருக்காங்க. ஒன்ரவண்டிஉப்புவேற.ஊர்ப்பட்ட உப்பைத் தின்னதுமாதிரி இருந்துச்சு.


சர்க்குலர் ஷேப் மால்.

பிரம்மாண்ட ஹோர்டிங்க்ஸ் இங்கே ஸ்பெஷல்.

ஃபோரம் மாலில் வெளியேதான் ஹோர்டிங், இங்கே உள்ளேயே ஹோர்டிங்க்ஸ்

ஒரு பக்கம் அவுட்டர் ரவுண்ட் சர்க்கிள்.

இன்னொரு பக்கம் இன்னர் ரவுண்ட் சர்க்கிள்.

ஆறு ஐநாக்ஸ் உள்ள மல்ஃபிளெக்ஸ் இது.  9, 24, 000 சதுர அடி உள்ளது. 1800 கார்களை பார்க்  செய்யும் வசதி !

இங்கேயும் பாண்டலூன், ஸ்பென்சர், ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ், ஷாப்பர்ஸ் ஸ்டாப் எல்லாம் இருக்கு.


2011, 2017 ஆகிய இருவருடங்களில் சில இடர்ப்பாடுகளை சந்திச்சு மீண்டெழுந்திருக்கு இந்த மால்.

a

அப்புறம் முக்கியமான விஷயம். மெட்ரோ ட்ரெயின்ல மந்திரிமால் வரைக்கும் போலாம். இந்த மாலுக்கு மட்டும்தான் மெட்ரோ ட்ரெயின் எண்ட்ரி கேட் இருக்கு. ட்ரெயினில் இருந்து இறங்கி நேரே மாலுக்கு நுழைய வேண்டியதுதான்.


அங்கங்கே செக்யூரிட்டி செக்கிங்தான் இம்சை.

இந்தியாவில் உள்ள மிகப் பெரிய மால்களில் மந்திரி மாலும் ஒன்று !

மொத்தத்தில் பெங்களூர் மால்கள் எல்லாம் அழகான அனுபவங்கள். 

3 கருத்துகள் :

G.M Balasubramaniam சொன்னது…

நீங்கள் ஐக்கடி பெங்களூர் வருவது தெரிகிறது

கரிகாலன் சொன்னது…

வணக்கம் சகோதரி .....

அழகான படங்களுடன் தெளிவான விளக்கங்கள் .நேரில் பார்த்தது மாதிரி ஒரு உணர்வு ,உங்கள் எழுத்தின் ரசிகன் என்றாலும் இன்றுதான் கருத்து இடுகிறேன் என்று நினைக்கிறேன் .இங்கு (கனடா ) மால் கலாச்சாரம் தள்ளாடிக்கொண்டு இருக்கிறது .சில மோல்கள் இடித்து குடியிருப்பூக்களாக மாறி விட்டன.இணைய வழி வர்த்தகத்தின் பலனாக பல பிரமாண்டமான நிறுவனங்களே மறைந்து விட்டன .

Thenammai Lakshmanan சொன்னது…

ஆமாம் பாலா சார். உங்களை சந்திக்க இயலாமல் போகிறது . மன்னிக்க வேண்டுகிறேன். உங்கள் அட்ரஸை மெயிலில் அனுப்ப வேண்டுகிறேன்.

அஹா புது விஷயம் சொல்லி இருக்கீங்க கரிகாலன் சகோ. கருத்திட்டமைக்கும் முதல் வரவுக்கும் நன்றி.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...