எனது நூல்கள்.

புதன், 1 மே, 2019

சில மொக்கைக் குறிப்புகள் :- 9

**தேடுகிறாயா எனத் தெரிந்துகொள்ளவே
காணாமல் அடிக்கிறேன் என்னை.

**உலகத்து இன்பங்களை
ஒரு தட்டில் வைத்தாலும்
உன் ஒரு பார்வைக்கு ஈடாகுமா


**கோபித்துக் கோபித்துப் போவாய்
கோபத்தில் தத்தளிக்கும் உள்ளம்
பித்தாகும், பித்தாக்கும்
உன் பார்வையின் சுகம் தாங்குமா


**காண எதுவுமில்லை
உன் கையெழுத்துத் தவிர
கண் நிறைந்து மனசு நிறைந்து
பொழுதும் நிறைந்து போகிறது
எழுத்தே நீயானதன் அதிசயம் என்ன


**நீயாகத் தேடிவரும்வரை
உன்னைத் தேடமாட்டேனென
சூரியனிடம் கோபித்துக் கவிழ்ந்திருக்கிறது தாமரை.

**வானத்தின் விசாலம்
நதியின் பிரவாகம்
கடலின் ஆர்ப்பரிப்பு
இவை பயமுறுத்தவில்லை
அடித்து அலசிச் செல்லும் உன் அன்பைப்போல

**தேடுகிறாயா எனத்
தேடிக்கொண்டே இருக்கிறேன்.

**பௌதீகத்தில் இரசாயனத்தில்
ஒன்றில் ஒன்று விழுந்தால்
என்னன்னவோ விளைவுகள் வருகின்றன
உன்னில் விழுந்தேன் நான்
என்னில் விழுந்தாய் நீ
பின் பிரிந்தோம்
எந்த விளைவும் ஏற்படுத்தவில்லையா
கலப்பும் பிரிப்பும். 

**காலம்தான் சிறந்த மருந்தாம்
என்னை மறக்க வைத்துவிட்டதே
நான் என்ன உன்னைப் பீடித்த வியாதியா.

**பெண்டாட்டி ஊருக்குப் போயிட்டா எனப்
புல்லரிக்கும் கணவர்கள் போல
ஃப்ரெண்டு பிரிஞ்சு போயிட்டாலும்
ஃபுல் அடிச்சுக் கொண்டாடுறாங்க.

சில மொக்கைக் குறிப்புகள். - 1 

சில மொக்கைக் குறிப்புகள் - 2.

சில மொக்கைக் குறிப்புகள் :- 3. 

சில மொக்கைக் குறிப்புகள் :- 4.

சில மொக்கைக் குறிப்புகள். - 5.

சில மொக்கைக் குறிப்புகள் :- 6

சில மொக்கைக் குறிப்புகள் :- 7

சில மொக்கைக் குறிப்புகள் :- 8


1 கருத்து :

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...