எனது நூல்கள்.

புதன், 22 மே, 2019

சில மொக்கைக் குறிப்புகள் :- 13

**இரைக்காகக் கண்டம்விட்டுக் 

கண்டம் தாண்டுகின்றன பறவைகள். 

இறகைக் காயவைக்க தீபகற்பம்

தேடிக்கொண்டிருக்கிறாய் நீ.


**நான் பூமியாய்த் தவழ்கிறேன்.

நீ வானமாய் ஏந்துகிறாய்

நிலவும் சூரியனும் சவலையாகின்றன.


**போகவா போகவா என

எத்தனை முறை அசையாமல் கேட்பாய்

காலை எடுத்துவைத்தால்தானே 

பயணம் நிகழும்.


**முட்களைத் தாண்டியும்

பூத்துக்கொண்டுதான் இருக்கிறது பூ.

வண்ணத்துப் பூச்சிதான்

வழிமாறிவிட்டது. 


**எழுத்துக்களைக் கொட்டிவிட்டு

எப்போது புறப்படுவோம் எனக் 

காத்துக் கொண்டிருக்கிறது உயிர்ப்பறவை.


**எப்பசியையும் கொன்றுவிடலாம்

எழுத்துப்பசியைக் கொல்வதெப்படி

எவ்வளவு புசித்தும் உயிர்த்தெழுகிறதே.


**விடியலில் இருந்து விழித்து

விரிந்து கிடக்கும் கோலம்

இரவுப்பாயில் உறைந்து உறங்குகிறது.


**எப்போதோ ஒருமுறைதான் தேடிவருகிறேன்.

காத்திருக்கும் உன் பார்வையிலிருந்து

புன்னகைக்குழந்தை தாவி வருகிறது என்னிடம்


**மொழிகளை உதறி உதறி

எண்ணங்களை மடித்துவைக்கிறேன்.

சர்க்கரைத் துணுக்குகளாய் பிசுபிசுவென

ஒட்டித்தான் கிடக்கின்றன அவை.


**வண்ணத்துப்பூச்சிகளாய்ப் பறந்து கொண்டிருக்கிறோம்

இதற்கெதற்குப் போட்டி

நீ முந்தி நான் முந்தி என்று. சில மொக்கைக் குறிப்புகள். - 1 

சில மொக்கைக் குறிப்புகள் - 2.

சில மொக்கைக் குறிப்புகள் :- 3. 

சில மொக்கைக் குறிப்புகள் :- 4.

சில மொக்கைக் குறிப்புகள். - 5.

சில மொக்கைக் குறிப்புகள் :- 6

சில மொக்கைக் குறிப்புகள் :- 7

சில மொக்கைக் குறிப்புகள் :- 8

சில மொக்கைக் குறிப்புகள் :- 10

சில மொக்கைக் குறிப்புகள் :- 11

1 கருத்து :

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...