எனது நூல்கள்.

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

தென்காசி சௌந்தர்யாவில் மேக்னெடிக் கீ கார்ட்.

தென்காசி மிக அழகான ஊர். எங்கும் பச்சைப் பசுமை. தூரத்து வயல்கள், பசும் மலைகள். இந்த மேற்குத்தொடர்ச்சி மலைகளைத் தாண்டினால் கேரளாவாம்.

எங்கெங்கு நோக்கினும் அருவிகளில் குளியலாடச் செல்லும் மக்கள். ஜூலை, ஆகஸ்ட் , செப்டம்பர் மாதங்களில் இங்கே ஒரே கூட்டமும் போக்குவரத்து நெரிசலுமாக இருக்கிறது.

ஆடி வெள்ளியும் அதுவுமாக அக்கம் பக்கம் ஊர்களில் இருந்து இங்கே வருபவர்கள் அதிகம்.

உலகம்மன் காசி விசுவநாதர் ஆலயம் ஒன்பது நிலைகளுடன் மிகக் கம்பீரமாக நிற்கிறது. பதிநாலாம் நூற்றாண்டுக் கோயில் . அம்மனுக்கு, பெருமானுக்கு, சோமாஸ் ஸ்கந்தனுக்கு என்று தனித்தனிக் கோவில்களுடன் கூடிய கோவில். மிகப் பெரும் பிரகாரங்கள் கொண்ட பிரகாரங்கள்.

சாப்பாடு எல்லாம் சீப்தான். மீல்ஸ் 70. இட்லி தோசை எல்லாம் இருவருக்கு நூற்றைம்பது ரூபாய்க்குள் வரும். டீ 15 ரூ.

இந்த ஹோட்டல் சௌந்தர்யாவில் ஒன்லி போர்டிங்தான். மீல்ஸ் பஃபே எதுவும் கிடையாது. கேட்டால் ரூம் சர்வீஸில் சொல்லி வாங்கித் தருகிறார்கள்.

அமைதியான ஊர். ஒருவாரம் தங்கி ஒவ்வொரு அருவியாகக் குளிக்கலாம். மெயின் அருவியில் க்யூ, ஐந்தருவி பரவாயில்லை. ஆனால் வீட்டில் வெந்நீரில் குளியலாடியவர்களுக்கு ( அதாவது எனக்கு ) அங்கே அருவியில் நிற்பது சுவாசத்தை நிறுத்தி மூச்சுத் திணறியது.

திருஞான சம்பந்தருக்கும் கோவில் உள்ளது. ஐந்தருவி செல்லும் வழியில் அமைந்த சித்திர சபை பார்த்தோம் அபாரம் !

 குற்றாலம் இங்கிருந்து 4 கிமீ தொலைவில் உள்ளது.
இந்த ஹோட்டல் மூன்றடுக்கு மாளிகை. வைஃபை, கார் பார்க்கிங், ரூம் சர்வீஸ், ஏசி, ஹாட்வாட்டர் அனைத்தும் உண்டு.


3 பெட் உள்ள ரூம் என்பதால் வாடகை ரூ 1, 500/-


டவல்  ப்ளாங்கெட் எல்லாம் சுகந்தம்.

டிவி, இண்டர்காம் உள்ளது. ட்ரெஸ்ஸிங் கண்ணாடி கப்போர்ட் வசதிகள் அருமை. 

மிகப் பெரும் அறை. அங்கே அமர்ந்து சாப்பிட இரு சேர்களும் ஒரு டீப்பாயும் உள்ளது.

ஆனால் பெரும்பாலான ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட டேபிள் இல்லாதது குறையே. டீப்பாயில் குனிந்து சாப்பிடுவது கடினம். இனி ஹோட்டல்காரர்கள் இரண்டு சேர்களோடு இருவர் சாப்பிடும்படியான அளவிலும் உயரத்திலும் ஒரு டைனிங் மேசையையும் போட்டால் நல்லது.

தண்ணீர், சீப்பு, சோப்பு, ஷாம்பு, பேஸ்ட், பிரஷ் எல்லாம் கொடுப்பார்கள்.

தண்ணீர் மட்டும் தினமும் ஒரு பாட்டில் கட்டாயம் உண்டு.

பாத்ரூமில் கொசு வலையோடு எல்லாம் ஓகே.

ரங்க்ஸ் ஷேவிங் செய்ய வசதி.
திரையைத் திறந்தால் ஜன்னல் வழி உலகம் அழகு.
இதுதான் அந்த மேக்னெடிக் கீ கார்ட்.

இதாஇ இந்த சென்ஸார் முன் காட்டினால் கதவைத் திறக்கலாம்.
அந்த கார்டையும் இங்கே செருகினால் லைட் ஃபேன் போன்றவை சென்சார் அனுமதியுடன் எரியும்.


மிக அருமையான தங்குமிடம்

மூவர் தங்கினால் கொஞ்சம் சீப்..


டிஸ்கி :- இந்த ஹோட்டலுக்கு என்னோட ரேட்டிங். நாலரை ஸ்டார். ****

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு. 

2. மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா.. 

3. பாரடைஸ் ரெஸார்ட். 

4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி) 

5. ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.

6. கேரளா சோழா & ஹைலாண்ட். 

7. கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :- 

8. பார்பக்யூ நேஷன் 

9. மை ப்ளேஸ்.

10. குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :- 

11. பிகேஆரும் இண்டர்காமும். :- 

12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.

13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.

14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS) 

15. சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.

16. வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து. 

17. கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி . 

18. கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.

19. காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்‌ஷனும். 

20. பெஸ்ட் ஃபில்டர் காஃபி.

21. எங்கும் பாரதி எதிலும் பாரதி.

22. உணவுப் பயணங்கள் . நியூ தில்லி. 

23. கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.

24. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

25. ழ வில் வலைப்பூ வடை...

26. அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும்.  

27. ஜெய்னிகா & கார்மெட். 

28. சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு. 

29. சமணர் படுகையும் சாந்தி இன்னும்.

30. பயண உணவுகள். பால் ஜலேபி.

31. பெருந்துறை ராயல் பார்க்கில் இரு நாட்கள். 

32. திருப்பூரில் ஒரு இல்லம். TIRUPUR - THE HOME !

33. லீலா பேலஸில் ஒரு ரிசப்ஷனும் தேன் பூ செடியும்.

34. நிவேதாஸ் இன்னும் நவம்பர் எட்டும்.  

35. தர்மபுரி அதியமான் அரண்மனையில் புத்தர் !

36. பழனியில் சிவா. 

37. ராயல் பார்க்கில் கவர்ந்த சில ஓவியங்கள். 

41. ஹொடெல் ஸ்ரீ சாந்த் ஆ, ஸ்ரி சாந்த, ஷ்ரீ ஸாந்தா. ?! 

42. ஸ்ரீ ஷாந்த். காலை உணவும் கண்கவர் ஓவியமும். 

43.ராதா ப்ரஸாத்தின் லிஜோ ஸ்கைபூல் ரெஸ்டாரெண்டில் சில காலைகள். 


44. திருப்பூர் விநாயகாவில் ஒரு நாள்.  
  
50. குவாலியர் ஸுரபியில் சுவையான ஷாஹி பனீரும், பால் ஜலேபியும் 

51. போபால் ஜி ஷையில் செம்பு விநாயகர். BHOPAL GS G-SHY. 

52. பெல்ஸ் ரோட் ஹோட்டல் நியூ பார்க் & தி பெவிலியன். NEW PARK & THE PAVILION.

53. கோகுல் கிராண்ட் & ஷண்முகா .HOTEL GOKUL GRANDE & SHANMUGA

54. டபிள் ரோட் ஆக்டேவில் இரு நாட்கள். ( OCTAVE )

55. கானாடுகாத்தானில் ஒரு சர்வீஸ் அபார்ட்மெண்ட்.

56. கலைப்பொருட்களைக் காட்சிப்படுத்தியிருக்கும் எம் வி வி ரெஸிடென்ஸி.

57. திருவண்ணாமலை எஸ் டி டி ரெஸிடென்ஸி.

58. ஸீக்வீன் ரெஸிடென்ஸியும் டெல்மாவின் ரோகன்ஜோஷும் ஷவர்மாவும்.

59. திருக்கடையூரில் சதாபிஷேகம்.

60. திருவானைக்காவலில் டெம்பிள் இன்ன்.

61.பாண்டி எம் ஜி ஆர் ரீஜன்ஸியில் அழகோவியங்கள்.

62. திருத்தணி அருள்முருகன் ரெஸிடென்ஸி.

63. சரவணபவனில் ஒரு சூப்பர் டின்னர்.

64. தாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு

65. தென்காசி சௌந்தர்யாவில் மேக்னெடிக் கீ கார்ட்.

3 கருத்துகள் :

Ramesh Ramar சொன்னது…

Great article with excellent idea! I appreciate your post. Thanks so much and let keep on sharing your stuffs.
Tamil News
Latest Tamil News
Tamil Newspaper
Kollywood News
Tamil News Live
Online Tamil News
Tamil Cinema News
Tamil Film News
Tamil Movie News
Latest Tamil Movie News

sarav சொன்னது…

new kind of information will see your other posts as well

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ரமேஷ்.

நன்றி சரவ்.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...