எனது புது நாவல்.

புதன், 27 ஜூன், 2018

மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்.


மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்.

கருங்கற்களால் ஆன கட்டுமானக் கோவில் பாணி வகையில் மிகப் பழமையான கட்டிடம் முகுந்த நாயனார் கோவில் ஆகும். இதற்குப் பின் வந்தவை முறையே கலங்கரை விளக்குக்கு மேல் தட்டிலும் கடற்கரையிலும் எழுப்பட்டுள்ள கணேச்சுவரர், ராஜசிம்மேச்சுவரர். க்ஷத்திரிய சிம்மேச்சுவரர் முதலியவையும் ஆகும்.


தென்னாட்டுக் கோவில்களின் முழுமையான நிலப்பட அமைப்புக்கு அரிய பழைய எடுத்துக்காட்டாக சுற்றுப் பிரகாரத்துடனும், நுழைவாயில் கோபுரத்துடனும் கடற்கரைக் கோவில் விளங்குகிறது.


மாமல்லபுரத்துப் பல்லவர் கோவில்களில் எல்லாம் முதலாம் பரமேச்சுவர வர்மன் காலம் வரை கருவறையில் உருவச் சிற்பங்களோ லிங்கங்களோ இருந்ததற்குச் சான்றுகள் இல்லை. சுவரில் சுதையிலாவது வண்ணங்களிலாவது உருவம் வரையப்பட்டிருக்கலாம்.

இதன்பின்னர் கருவறையில் சோமாஸ்கந்தர் உருவத்தைக் கல்லில் செதுக்கி வைக்கும் பாணி மிகப் பரவலாகப் பிந்தையப் பல்லவ காலம் வரை புழங்கி வந்தது.

மகாபலிபுரத்தில் பண்டைய கோவில் கட்டிடக் கலையின் நுணுக்கங்களையும் சிற்பக்கலையின் விளக்கமான திரிமூர்த்தி வகைகளும் ஒருங்கே காண்கிறோம். .


--இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறை.

5 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அனைத்து படங்களும் அழகு...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

படங்கள் மிக மிக அழகாக வந்திருக்கின்றன. மகாபலிபுரம் போயிருக்கிறோம். உங்கள் படங்கள் இன்னும் அழகாகவே காட்டுகின்றன.-துளசி, கீதா

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி டிடி சகோ

நன்றி துளசி சகோ & கீத்ஸ்.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

R Muthusamy சொன்னது…

மாமல்லபுரம் கடற்கரைக் கோவில், காஞ்சி கைலாசநாதர் கோவில், பனமலை தலகிரீஸ்வரர் ஆகிய கோவில்கள் பல்லவர்களின் கட்டுமானத்தில் அமைந்த முற்கால கட்டுமானக் கோவில்கள் ஆகும். கடற்கரைக் கோவில் பற்றிய பதிவு சிறப்பு.

Thenammai Lakshmanan சொன்னது…

விபரங்கள் கொடுத்தமைக்கு நன்றி முத்துசாமி சகோ.

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...