எனது புது நாவல்.

திங்கள், 25 ஜூன், 2018

காரைக்குடிக்கருகே சித்திரகுப்தர் கோயில் ( கேது ஸ்தலம் )

காஞ்சீபுரத்தில்தான் சித்திரகுப்தர் கோயில் பார்த்திருக்கிறோம் ஆனால் இங்கே காரைக்குடியில் இருந்து பிள்ளையார்பட்டி போகும் வழியில் லெக்ஷ்மி ( குபேரன் ) ஞான சரஸ்வதி, ஐயப்பன் ஆகிய கோயில்கள் உள்ளன.அதை ஒட்டியே இந்த சித்திரகுப்தர் கோயிலும் உள்ளது. தனியார் நிர்வாகம். காலை 7 மணி முதல் திறந்திருக்கிறது.

உள்புறம் புனரமைப்பு வேலைகள் நடைபெறுவதால் பிரகாரம் வர இயலவில்லை. அங்கேயே விளக்குக்கான எண்ணெய் விற்கிறார்கள். வாங்கி கோயிலுக்குக் கொடுக்கலாம். 7 தீபம் ஏற்றி 7 முறை வணங்கினால் சிறப்பு என்றும் போட்டிருக்கிறார்கள்.

குபேரகணபதியும் சித்திரகுப்தரும் அருள் பாலிக்கும் அழகு ஆலயம். ஆனால் புகைப்படம் எடுக்க அவர்கள் விடவில்லை. எனவே வெளியே வந்து ஒரு க்ளிக்.
காஞ்சியை அடுத்து சித்திர குப்தருக்கு அமைந்துள்ள தனி ஆலயம். ஸ்ரீ சித்திர குப்தர் கேது கிரகத்தின் அதிபதி. ஞானத்தையும் மோட்சத்தையும் அளிப்பவர். சுவாமியின் தீபாராதனைக்குத்தேவையான விளக்கெண்ணெய் கொடுத்து தீபம் பார்க்கவும் என்று போர்டில் எழுதி இருக்கிறார்கள்.

சுவாமியின் பூஜையில் வைத்த புத்தகம், பேனா ஆகியவை ஆலயத்தில் கிடைக்கும். மேலும் இதைப் பயன்படுத்தும் மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை உண்டு. இதை தொழில் செய்பவர்கள் பயன்படுத்தி நல்ல லாபத்தைப் பெறலாம். பொருளாதாரத்தில் வழி இல்லாதவர்கள் ( பணமே இல்லாதவர்கள் மட்டும் காசு வைக்காமல் தீபம் பார்க்கலாம்.

குபேர கணபதி பூஜையில் வைத்த காசுகள் ஆலயத்தில் கிடைக்கும் . இதை பூஜை அறையில் வைத்து வழிபட குபேர சம்பத்துக்கள் நீடித்து இருக்கும்.

அஸ்வினி , மகம், மூலம், சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் , சித்திரை மாதத்தில் பிறந்தவர்களும் தீபம் ஏத்தி வழிபடுவதன் மூலம் கேதுவால் நன்மை உண்டு.

ஆலயத்துக்கு தீபம் ஏத்த விளக்கெண்ணெய் வாங்கிக் கொடுப்பவர்களுக்கு செல்வமும், புகழும் கிட்டும். அக்மார்க் விளக்கெண்ணெய் மற்றும் அக்மார்க் நெய் மட்டும் பக்தர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்படும்.

குபேர ஆஞ்சநேயருக்கு தீபம் ஏற்றுவது மற்றும் வடை மாலை சாற்றுவதால் சனி பகவானின் தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.

ஸ்ரீ சித்திர குப்தரை கறுப்பு உளுந்து, கொள்ளு ஆகியவற்றால் அர்ச்சனை செய்து வழிபடுவது நலம்.கேதுவின் பாதிப்புகள் அகல சீட்டித்துணி சாற்றுவது நன்று.

நாம் எவ்வளவு செல்வத்தைச் சேர்த்தாலும் நம்முடன் வருவது நமது பாவ புண்ணியம் மட்டுமே.எனவே சிந்திப்போம்., செயல்படும்முன்.

7 தீபம் ஏற்றி உளமார வழிபடுபவர்கள் தங்கள் 7 தலைமுறைக்குப் புண்ணியம் சேரும்.

டிஸ்கி:- சர்வயலன்ஸ் காமிரா உள்ளது , கிழிந்த/செல்லாத நோட்டைப் போடாதீர்., வண்டியில் அமர்ந்தபடி தரிசனம் செய்யாதீர் என்றும் எச்சரிக்கை & வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.

எல்லோருடைய பாவ புண்ணியக் கணக்கும் இவர் வசம்தான் உள்ளது என்பதால் ( ஏடு எழுத்தாணியுடன் இருக்கும் திருவுருவம் அழகு )  கோயிலில் சொல்லியுள்ளபடி கேளுங்க. . எல்லாம் நல்லபடி நடக்கும்.  

4 கருத்துகள் :

Palani Chamy சொன்னது…

பத்தாண்டு களுக்குள் வந்த தனியார் கோயில்.ஒருமுறை சென்னை நண்பர்களோடு சென்றேன் மனநிறைவு ஏற்படவில்லை.

Thenammai Lakshmanan சொன்னது…

ஆம் பழனிசாமி சார். நீங்கள் சொன்னது உண்மைதான்.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

R Muthusamy சொன்னது…

நல்ல பதிவு

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி முத்துசாமி சகோ

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...