எனது புது நாவல்.

வியாழன், 8 மார்ச், 2018

பெங்களூரு இஸ்கானில் ஒரு மாலை.

பெங்களூருவில் இருந்து தமிழ்நாடு வரும் முன்பு அங்கே இஸ்கான் கோயில் சென்று வந்தோம். மிக அழகான கோயில் அது.ராதை, கிருஷ்ணர், பலராமர், சைதன்யர் , ஆகியோரோடு பிரபுபாதா அவர்களுக்கும் அழகான உயிர்ச்சிற்பம் அமைந்த இடம்.
இங்கே எதிரில் உள்ள கட்டிடங்கள் இந்நேரம்  கட்டுமானம் முடிந்திருக்கலாம்.

செல்ஃபோன் , காமிரா போன்றவற்றை ஒரு சுருக்குப் பையில் மாட்டி டோக்கன் கொடுத்துடுவாங்க. அப்புறம் நோ க்ளிக்ஸ். :)  அதுக்கு முன்னே எடுத்த சில கிளிக்ஸ் இது.

மக்கள் புழக்கம் அதிகமாக உள்ள கோயில் இது. ரொம்பப் பணக்காரக் கோயிலும் கூட ஜாஜ்வல்யமாக ஜொலிக்கிறது.  இன்னும் வெங்கடாசலபதி , ப்ரஹலாதன் ஆகியோரின் சிற்பங்களும் காட்சி அளித்தன.
எல்லா வட இந்தியக் கோயில்கள்போலவும் நேராகவே மூன்று சந்நிதிகள். வரிசையில் வந்து வணங்கி எல்லாருடனும் அமர்ந்து பஜன்ஸ் பாடலாம்.

வெளியே வந்ததும் இதே சுற்றுப் பாதையில்தான்.
உள்ளே பஜன்ஸ் தொடர்ந்து ஒலிக்க அவ்வப்போது ஹாரத்தி பார்த்துவிட்டு வரலாம். செல்லும் வழியில் ஒரு மாதிரி கறுப்புக் கிரானைட் கல்லில்  சதுரத் திட்டுகள் பதித்து வைத்திருக்காங்க. அதில் நடந்து  செல்வது வித்யாசமாக இருக்கு. சிலர் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா சொல்லியபடி நடக்கிறார்கள்.
அன்னதானம் உண்டு. தேவைப்பட்டால் வாங்கி சாப்பிடலாம். ஆனால் அன்னதானத்துக்கு முன்பு கோயிலை விட்டு வெளியே வரும் ப்ரகாரப் பாதையில் இஸ்கான் கடைகள், இனிப்புக் கடைகள் அதிகம். அதிலும் நூற்றுக்கணக்கான நார்த் இண்டியன் ஸ்வீட்ஸ் & டெலிகெஸிசைத் தாண்டி வருவது கஷ்டம். நாங்களே நாலைந்தை விலைக்கு வாங்கி லபக்கினோம் .  அவ்வளவு ருசி. எல்லாம் நெய்ப்பண்டம்.  ஸ்வீட் பூரி, மன்பசந்த், சந்த்ரகலா, சூர்யகலா, தில்குஷ்..
மூன்று நிலை விமானம்.
இங்கே  இந்தக் கோவிலுக்கு எதிரே ஐந்து நிலை ராஜ கோபுரத்தோடு வெங்கடாசலபதி கோவில். பின்னே பாருங்க பெங்களூருவின் கட்டிடங்களை.

நம் தென் தமிழ்நாட்டில் பொதுவா வேங்கடவனைத்தான் வணங்குவோம். ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள், இவர்கள் சந்நிதி இருக்கும். ஆனால் ராதைக்கென தனி சந்நிதி கிடையாது. ராதா கிருஷ்ணராகவும் வணங்கப்படுவதில்லை.

ஆனால் வட இந்தியக் கோவில்கள் அனைத்துமே அநேகமாக ராதா கிருஷ்ணா மந்திர்தான். ராதை இல்லாமல் கண்ணன் இல்லை.  நிம்பர்கர் சம்பிரதாயத்தின் மூலமே ராதை வழிபாடு கிருஷ்ணனுக்கு நிகராகக் கொண்டுவரப்பட்டது.

ராதா அஷ்டமி என்று கொண்டாடுகின்றார்கள்.  ராதை பிறந்த இடத்திற்கு தீர்த்த யாத்திரை சென்று வரும் பழக்கமும் உள்ளது. கிருஷ்ணருக்கும் ராதைக்கும் சம முக்கியத்துவம் உள்ள  ராதா கிருஷ்ண வழிபாட்டையே இங்கே நாம் காணலாம்.
பன்னிரெண்டாம் நூற்றாண்டிலிருந்துதான் ராதை கிருஷ்ணா பற்றி ஜெயதேவரின் கீத கோவிந்தத்தில் எழுதப்பட்டுள்ளது.

சுடிதார் நமது தேசிய உடையாகிவிட்டதுபோல் வடநாட்டாரின் மற்றும் வெளி நாட்டாரின் ராதைகிருஷ்ண வழிபாடும் நமது வழிபாடாகி விட்டது. ஆனாலும் தென்னகக் கோயில்களில் ராதைக்கென்று தனி சந்நிதி இதுவரை எந்தக் கோயிலிலும் இல்லை.

1896 இல் பிறந்த பிரபுபாத ஸ்வாமிகள் சைதன்யரின் போதனைகளைப் பரப்ப இவ்வமைப்பை உருவாக்கினாராம். எல்லா பிர்லா மந்திர்களும் இஸ்கான்கோயில்களும் ஒன்றுபோலவே தோற்றமளிக்கும். வெண்ணிற கோபுரங்கள் மார்பிள் தரைகள் என.  வைணவக் கோயில்கள்தான் அநேகம் பிர்லா மந்திர்களாகவும் இருக்கின்றன. டெல்லி, ஹைதை, பெங்களூரு ஆகிய இடங்களில் உள்ள இஸ்கான் மந்திர்  & பிர்லா மந்திர்களில்  ராதாகிருஷ்ண வழிபாடு உண்டு.

5 கருத்துகள் :

ஸ்ரீராம். சொன்னது…

சிறப்பு.

KILLERGEE Devakottai சொன்னது…

தல வரலாறு விளக்கியமைக்கு நன்றி சகோ

G.M Balasubramaniam சொன்னது…

இது எப்பவோ பெங்களூர் வந்து போனதை எழுஹியதுஎன்று தோன்றுகிறது இஸ்கான் கோவிலுக்கு ஆண்டுகளாயிற்று போய் வந்து இஸ்கான் கோவிலுக்குஎதிரே இருக்கும் கோவிலை குருவாயூர் கோவில் என்றும் சொல்கிறார்கள்

R Muthusamy சொன்னது…

இஸ்கான் பற்றிய சிறப்பான அறிமுகம்.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஸ்ரீராம்.

நன்றி கில்லர்ஜி சகோ

நன்றி பாலா சார். ஆம் உண்மைதான்

நன்றி முத்துசாமி சார்.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...