எனது புது நாவல்.

செவ்வாய், 9 ஜனவரி, 2018

நேமம் ஜெயங்கொண்ட சோளீஸ்வரர் சௌந்தரநாயகியம்மன் திருக்கோயில்.

காரைக்குடியில் இருந்து நேமங்கோவில் 13 கிமீ தூரத்தில் உள்ளது. குன்றக்குடி, பிள்ளையார்பட்டி, வைரவன் பட்டிவழியாகச் செல்லலாம். குன்றக்குடியின் வடக்குப் பாதை வழியாகவும் செல்லலாம். இது கொஞ்சம் கிட்டப்பாதை.

சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக இக்கோயிலையும் கூறலாம். பிரகாரத்தில் அலங்கரிப்பது  எல்லாமே உக்கிர தெய்வங்கள்.

ஐந்துநிலை ராஜகோபுரம் நம்மைக் கம்பீரமாக வரவேற்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்கோவில் இது. நகரத்தார்களின் ஒன்பது கோவில்களில் இதுவும் ஒன்று.

இக்கோவிலின் புஷ்கரணியின்பெயர் சோழ தீர்த்தம். மிக அழகான தாமரைத்தடாகம் அது. இக்கோயிலின் எதிரே சத்திரம் உள்ளது. இங்கும் சஷ்டியப்த பூர்த்தி செய்துகொள்வோர் உண்டு.

இக்கோவிலில் விநாயகர் ஆவுடையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது சிறப்பு.
சந்நிதிக்குச் செல்லும் முன் வாயிலின்  விதானத்தில் ரிஷபாரூடர், மீனாக்ஷி திருக்கல்யாணம், நான்கு வேதங்களும் நான்கு நாய்களாக காலபைரவரைச் சுற்றி இருக்கும் காட்சி., சனகாதி முனிவர்களுடன்  கல்லாலின் புடை அமர்ந்த தக்ஷிணாமூர்த்தி. என அழகு ஓவியங்கள்.

மீனாக்ஷி திருக்கல்யாணம் அழகுச் சிற்பமாக.அவர்கள் பின்னாலிருக்கும் கல்லின் துளைவடிவத்தைப் பாருங்கள். மரத்தைக் கூட அழகாகச் செதுக்கி இருக்கின்றார்கள். பல்வேறு சிற்ப அமைப்புகளுடன் கூடிய கொடுங்கைகள் அனைத்தும் வெகு அழகு.
நீண்ட பிரகாரங்களும் தூண்களும்.
பிரகாரத்தில்  மேற்கு நோக்கிய காலபைரவர் சன்னிதி வித்யாசம்.
வில்லேந்திய முருகன், பார்வதி எல்லாருமே ஏதோ ஒரு போர் நிலையில் காட்சி தருகிறார்கள். நேமங்காளி/இரணிக்காளி என்று கோபங்கொண்ட பெண்ணை இங்கே காரைக்குடிப் பக்கம் குறிப்பிடுவார்கள்.

யோகநிலையில் இருந்த சிவனை எழுப்ப மன்மதனிடம் கோரிக்கை வைக்கிறார்கள் தேவர்கள். ஏனெனில்  அசுரர்களின் கொடுமைகளில் இருந்து தப்ப முடியவில்லை. எனவே  வேறு வழியில்லாமல் நிஷ்டையில் இருந்த சிவனை மன்மதன் தன் மலர்க்கணைகளால் எழுப்ப கோபம் கொண்ட சிவன் மன்மதனை எரித்துவிடுகிறார். தன் காமத்தை அவர் வென்றதால் இங்கே ஜெயம் கொண்ட சோளீஸ்வரராக வணங்கப்படுகிறார்.
இந்த ஊரை அதனால்  ஜெயங்கொண்ட சோழபுரம் என்றும் அழைப்பார்கள். சிவன் சௌந்திரநாயகி அம்மனுடன் இங்கே தரிசனம் அளிக்கிறார்.
திருவாலங்காட்டுக் காளி.

கால சம்ஹார மூர்த்தி, ஊர்த்துவ தாண்டவர், பிக்ஷாடனர், மார்க்கண்டேயர் , காளி, வீரபத்திரர், பார்வதி ஆகிய சிற்பங்கள் வெகு அழகு.

இத்தலத்தில் வழிபடுவதால் திருமணத்தடை நீங்கி குழந்தைப்பேறு ஏற்படுவதாக நம்பிக்கை நிலவுகிறது. தொழில், கல்வி ஆகியவற்றில் உள்ள தடையும் நீங்குவதாகச் சொல்கிறார்கள்.

நேமங் கோயிலைச் சேர்ந்தவர்களை இப்படிக் குறிப்பிடுவதுண்டு.

”கேரள சிங்கவள நாட்டில் நேமமாகிய குலசேகரபுரத்தில் தேனாறுபாயும் இளநலமுடையார்.”

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. மாத்தூர் ஐந்நூற்றீசுவரர்  பெரியநாயகியம்மன் திருக்கோயில்

2. இலுப்பைக்குடி தான்தோன்றீசுவரர் சவுந்தரநாயகியம்மன் திருக்கோயில் :- 

3. வேலங்குடி கண்டீஸ்வரர், காமாட்சியம்மன் திருக்கோயில் 

4. இளையாற்றங்குடிக்கோவிலில் அபூர்வ ஓவியங்கள்:- .நர்த்தன நடராஜரும், கங்காதரரும். 

5. சூரக்குடி தேசிகநாதர் ஆவுடைநாயகியம்மன் திருக்கோயில்.

6. இளையாற்றங்குடி கைலாசநாதர் நித்யகல்யாணியம்மன் திருக்கோயில்

7. இரணியூர் ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவியம்மன் திருக்கோயில்.

8. நேமம் ஜெயங்கொண்ட சோளீஸ்வரர் சௌந்தரநாயகியம்மன் திருக்கோயில்.

9. வைரவன்பட்டி வளரொளிநாதர் வடிவுடையம்மன் திருக்கோயில்.

10. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், மருதீசர், வாடாமலர் மங்கையம்மன் திருக்கோயில்.


4 கருத்துகள் :

R Muthusamy சொன்னது…

காரைக்குடியின் அருகில் அமைந்துள்ள இந்த நேமக்கோவிலைப் பார்த்து இருக்கிறேன். பதிவிற்கு நன்றி.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

இன்று ஓர் அருமையான கோயில் தரிசனம் உங்கள் மூலமாக.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

பெரிய கோவிலாகத் தெரிகிறது. தஞ்சைக்கு அருகிலும் நேமம் எனும் கிராமம் உண்டு. அங்கேயும் கோவில் - ஆனால் சிறு கோவில்.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி முத்துசாமி சகோ

நன்றி ஜம்பு சார்

நன்றி வெங்கட் சகோ

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...