செவ்வாய், 2 ஜனவரி, 2018

தாழையூர் ஸ்ரீ கூத்தாடி முத்துப் பெரியநாயகிஅம்மன் திருக்கோயில்.

தேவகோட்டையில் தாழையூர் என்னுமிடத்தில் தெற்கு நோக்கிக் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ கூத்தாடி முத்துப் பெரியநாயகி அம்மன் திருக்கோயிலுக்குச் சென்று தரிசிக்கும் வாய்ப்புக் கிட்டியது.

இக்கோயில் அம்மன் திருவக்கரை வக்ர காளி அமைப்பில் என் கண்ணுக்குத் தென்பட்டது. கூகுள் குழுமத்தில் தேமொழி என்பவர்

//ஸ்ரீ கூத்தாடி முத்துப் பெரிய நாயகி அம்மன் கோயில் தேவகோட்டையில் உள்ளது. 

நடனமாட இவ்வூருக்கு வந்த பெண் தனியாக வெளியே தனித்து சென்றிருந்ததை சந்தேகித்து 
அப்பெண் மேல் அவதூறு பேச அதனை தாங்க இயலாது அப்பெண் தற்கொலை செய்து கொள்கின்றாள். 
அப்பெண்ணுக்கு எழுப்பப்பட்ட ஆலயம் இது. அடிப்படையில் ஐயனார் தெய்வத்துக்கான கோயில் இது. 
ஏனைய பல நாட்டார் தெய்வங்களுக்கான தனி சன்னிதிகளும் இங்கே உள்ளன.
மனிதர்கள் தெய்வங்களாக உருமாற்றம் அடையும் உதாரணங்களில் இக்கோயிலும் ஒன்று.
இக்கோயிலை இன்று பதிவுசெய்திருக்கின்றேன்.///
என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதைத் தவிர வேறு பதிவுகள் இல்லை. கோயில் பற்றிய விபரங்கள் கொண்ட ஆய்வேட்டில் இப்பெயர் உள்ளது. 
மிக அழகான கோயில் இது. அம்மனைப் பார்த்தால் நமக்கும் ஆவேசம் வருவது உறுதி. அவ்வளவு அருள் பொங்குகிறது.

உசுலாவுடைய அய்யனார் அம்மனின் கிழக்கு நோக்கிக் கோயில் கொண்டிருக்கிறார். ஒரு பெரிய கருவறையின் உள்ளே இரு கருவறைகள். ஒன்று கிழக்கு பார்த்த சன்னிதி இதில் உசுலாவுடைய ஐயனாரும், தெற்கு நோக்கிய சன்னிதியில் முத்துப் பெரியநாயகி அம்மனும் கோயில் கொண்டுள்ளார்கள்.

சப்த கன்னிமார் எழுவர்.

அமைப்பில் எல்லா  கிராம தெய்வக்கோயில் போலும், குலதெய்வக் கோயில் போலும் உள்ளது இது. இங்கே பலருக்கு இந்த அம்மன்தான் குலதெய்வம்.

இந்த ஊரிலேயே இக்கோயிலை அடையுமுன் நாம் தர்ம முனீஸ்வரர், மகாலிங்க முனீஸ்வரர் ஆகியோர் கோயிலையும் கடக்க வேண்டி இருந்தது. 
உள்ளே ஓவியமாக அம்மன் . உக்கிர தெய்வங்கள் அடங்கிய கோயில் இது.
பத்ரகாளி அம்மன்.
ராக்காச்சி அம்மன்.  /இசக்கியம்மன். .
சப்பாணிக் கருப்பர் ஆகியோர் போக உக்கிரமான பதினெட்டாம்படிக் கருப்பரும் மிக அழகான விநாயகரும் கோயில் கொண்டிருந்தார்கள்.
கோபுரம் புனரமைப்பில் உள்ளது.

எல்லா கோயில்களைச் சுற்றியும் ஊரணிகள்/புஷ்கரணிகள் இருப்பதைப் போல எல்லா கிராம தெய்வக் கோயிலைச் சுற்றியும் கண்மாய்கள், ஊரணிகள், குட்டைகள், வாய்க்கால்கள், மடைகள் இருக்கின்றன.
சன்னாசி
இவர் சன்னிதியில் பேர் மறைந்ததால் தெரியவில்லை.
மிக மிக அழகான இக்கோயில் தேவகோட்டையிலிருந்து சிறிது தூரத்திலேயே அமைந்துள்ளது.
தேவகோட்டையில் இருக்கும் நான்கு பெரிய அம்மன் கோவில்களில் இதுவும் ஒன்று. பார்க்கும்போதே நமக்கும் நடனமாடத் தோன்றும் அம்மனின் திருவுருவம். ஆற்றலையும் எழுச்சியையும் தோற்றுவிக்கிறது.
தேவகோட்டையில் நான்கு திசைகளிலும் நான்கு அம்மன்கோவில்கள் என்பது    மற்றுமொறு  சிறப்பு.
கிழக்கில் - கிழக்கு நோக்கிய கோலம் அருணகிரிப் பட்டினம் ஸ்ரீமுத்து மாரியம்மன் .
மேற்கில் - மேற்கு நோக்கிய கோலம் , திருப்பத்தூர் சாலை ஸ்ரீபுவனேஸ்வரி அம்மன்.
வடக்கில் - வடக்கு நோக்கிய கோலம் நகரத்தார் பத்ர காளிஅம்மன் .
தெற்கில் - தெற்கு நோக்கிய கோலம்  தாழையூர் ஸ்ரீ கூத்தாடிமுத்துப் பெரிய நாயகி    அம்மன் .
கட்டாயம் ஒருமுறையாவது இந்த அம்மனைத் தரிசியுங்கள். மனமெங்கும் புத்துணர்ச்சியும் அருளும் பொங்கிப் பரவும். 

3 கருத்துகள் :

G.M Balasubramaniam சொன்னது…

இறந்தவர்கள் தெய்வமானால் பயமுறுத்துவார்களோ

R Muthusamy சொன்னது…

தாழையூர் ஶ்ரீ கூத்தாடி முத்துப் பெரியநாயகி அம்மன் கோவில் பற்றியும் இங்கு நடைபெறும் நாட்டார் தெய்வ வழிபாடு பற்றிய சிறப்பான பதிவு.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி பாலா சார்.

நன்றி முத்துசாமி

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...