ஞாயிறு, 10 டிசம்பர், 2017

கானாடுகாத்தான் கோயில்கள்.TEMPLES AT KANADUKATHAN.

கானாடு காத்தான் எனப்படும் செட்டிநாட்டில் இத்தனை கோயில்களா என்று ஆச்சர்யப்படும் அளவுக்குக் கோயில்களை தரிசித்தேன். அவை இங்கே.

முதலில் சிதம்பர விநாயகர் கோயில் இக்கோயிலில் வித்யாசமாக விநாயகருடன் ஒரு நாகரும் முருகனும் பார்வதியும் சிவனும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்கள். இக்கோயில் ராஜாவீட்டின் எதிரேயே ( செட்டிநாடு பேலஸ் ) அமைந்துள்ளது  குறிப்பிடத்தக்கது.
காணக் கண் கொள்ளாக் காட்சி, இக்கோயில் பற்றிப் பின்னர் விபரமாக எழுதுவேன், மனங்கவர் விநாயகர். மிக அருமையாகப் பராமரிக்கப்படும் கோயில். உள்ளே பாருங்கள் தாய் தம்பி தந்தையுடன் காட்சி அளிக்கிறார்.

ராஜாவீட்டுக்கு எதிரில் உள்ள நெல்லிமரத்துக்கு இன்று திருக்கல்யாணம் நடந்ததாக இங்கே உள்ள போர்டு தெரிவித்தது.
இந்தப் பெருமாள் கோயில் சிலவருடங்களுக்கு முன்பு ஸ்தாபிக்கப்பட்டவர். இக்கோயிலில் பட்டாபிஷேக ராமர் சன்னிதி ஸ்பெஷல். இவ்விரண்டு கோயில்கள் மட்டுமல்ல கானாடு காத்தானில் அத்தனை கோயில்களும் நன்கு பராமரிக்கப்படுகின்றன. மேலும் பணக்காரக் கோயில்கள். சாமிகளின் அலங்காரங்கள் விமரிசை. மற்றும் அனைத்தும் வெள்ளியினாலான பூஜைப்பொருட்களே.

இங்கே மூலவர், உற்சவ மூர்த்தி, பள்ளியறைப் பெருமாள் என மூவரும் ஒரே சந்நிதியில் காட்சி அளித்தார்கள். மேலும் சக்கரத்தாழ்வார், யோகநரசிம்மர், தன்வந்திரி, ஆண்டாள், செங்கமலத்தாயார் எல்லாருமே படு கிராண்ட். & செம அழகு.

ராமர் பட்டாபிஷேக சந்நிதியில் ராமர் லெக்ஷ்மணர் சீதை, அனுமன், பரதன் சத்ருக்கனன், விபீஷனர், சுக்ரீவன் என்று அனைவருமே காட்சி அளிப்பது சிறப்பு.
இது கரை மேல் அழகர் கோயில்.  இக்கோயிலில் உக்கிர தெய்வங்களின் வரிசை அற்புதம். புல்லரிக்க வைத்த கோயில் இது. புளகாங்கிதத்தில் ஒரு மாதிரி இன்ப அதிர்ச்சியாக இருந்தது. எங்கேயே காட்டுக் கருப்பரும் கண்மாய் ஆயிமார் கோயிலும் இதன் பின் இருக்கிறதாம். ஓட்டம் அதிகம். மேனி இன்னும் கூட சிலிர்க்கிறது. எங்கள் இருவர் முகமும் அருள் பெற்றது போலாகிவிட்டது.

இங்கே பைரவர், காளி, முனீஸ்வரர், அழகர், பூரணை புஷ்கலை ஐயனார், தேனாத்தாள், நாச்சாத்தாள், பாண்டிமுனி, நொண்டிக்கருப்பர், அசிதமுகம் என்று பல்வேறு சன்னிதிகள். எல்லாமே உக்கிர தெய்வங்கள். பார்த்த பிரமிப்பில் பேரை மறந்துவிட்டேன்.
இதன் சிறிது தொலைவில் பழையூரில் இருக்கும் பெரிய கோவில் என்னும் பெரிய சிவன் கோவில். ஈசன் கைலாசநாதர். அம்மை சௌந்தரநாயகி அம்மை.
இங்கே இன்று அஷ்டமி சிறப்பு பூஜையாக பைரவர் ஜொலித்தார். இவர் சுயம்பு லிங்கம் காலையில் ஒருமுறை மட்டுமே அபிஷேகத்தின்போது  தரிசனம் உண்டு. அதன் பின் நாகபடம் தாங்கிய கவசத்தோடு காட்சி அளிப்பார்.
இவர் அங்கே பின்புறம் அமைந்துள்ள பெருமாள்

இதுவும் மூன்று கோயில்கள் கொண்ட இடம். இங்கே சித்தி விநாயகர்,ஸ்ரீ  சஞ்சீவி ஆஞ்சநேயர், முனீஸ்வரர், காளி, கருப்பர், ஆதி அம்மன் ஆகியோர் கோவில் கொண்டிருக்கிறார்கள். எல்லா தெய்வங்களுக்கும் பீடங்கள் உள்ளன. மிகப் பெரும் சூலம் வரவேற்கிறது.
இவள் பொன்னியம்மன். மிக அழகு. புரவி வாகனத்தில் மிக எடுப்பாகக் காட்சி அளித்தாள்.
பொன்னியம்மன் கோவில்
இவள் காளி கோவிலில் உள்ள மீனாக்ஷி.
கானாடுகாத்தான் ரயில்வே ட்ராக்குக்கு அருகில் உள்ள ஸ்ரீ பரமனூர் காளியம்மன் ஆலயம். வெகு அழகு மற்றும் அருளாட்சி. பிரகாரங்களில் மீனாட்சி, துர்க்கை சரஸ்வதி காட்சி அளித்தார்கள்.
இவர் சொற்கேட்டான் கோயிலுக்கு அருகில் உள்ள பெருமாள். ஸ்ரீ பூமிநீளா சமேத ஸ்ரீ தேசிக நாராயணப் பெருமாள். ( கோட்டையூர் பெருமாளையும் இந்த லிஸ்டில் சேர்த்துவிட்டேன். பயண மயக்கம் ) . இவர் கானாடுகாத்தான் பெருமாள் இல்லை. எனினும் எங்களுக்குப் பிடித்தமானவர்.
இக்கோயிலிலும் ஆஞ்சநேயர் வெகு அழகு.
தூண்கள் தோறும் சிம்மம் கர்ச்சிப்பது வெகு அழகு. கானாடுகாத்தான் வந்தால் இத்திருக்கோயில்களைத் தவறவிடாதீர்கள்.

கானாடுகாத்தானில் உள்ள மங்கள ஆஞ்சநேயர் இன்னும் வெகு சிறப்பு. அவரையும் தரிசித்துப் பலன் பெறுங்கள்.

2 கருத்துகள் :

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

கோயில்கள் அனைத்தும் வெகு அழகு. உங்கள் வழியாக நல்ல தரிசனம் கிடைத்தது.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சகோ

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...