செவ்வாய், 12 டிசம்பர், 2017

ராமேஸ்வரம் & பாம்பன் பாலம், பாக் ஜலசந்தி மை க்ளிக்ஸ். RAMESHWARAM & PAMBAN BRIDGE,PALK STRAIT,MY CLICKS.

இராமேஸ்வரம் கோயிலின் மேற்கு வாயில் இது. அவ்வப்போது சென்றுவரும் கோயில்களில் ஒன்று ராமேஸ்வரம். காரைக்குடியில் இருந்து150 கிமீ தூரத்தில் இருக்கு. ஒரே நாளில் சென்று வந்துவிடலாம் என்றாலும் முதல்நாள் சென்று அங்கே தங்கி மறுநாள் தீர்த்தமாடி ராமநாத ஸ்வாமியைத் தரிசித்து வருவது வழக்கம்.

22 தீர்த்தம், கடலில் தீர்த்தமாடுதல் இங்கே வெகு விசேஷம். மிக அருமையான அனுபவமும் கூட. சம்மரில் சென்றால் இன்னும் நன்றாக இருக்கும்.
இது தெற்கு கோபுர வாயில்.
இதன் எதிரேயே சத்திரம் இருக்கிறது. வடக்கிலும் கிழக்கிலும் செக்யூரிட்டி அதிகம் மேலும் கடலாடச் செல்வதால் காமிரா எடுத்துப்போகவில்லை.

இங்கே அதிகாலையில் ஸ்படிக லிங்க தரிசனம் அற்புதம். ப்ரசாதமாக கற்கண்டுப்பாலை ஒரு கால் டீஸ்பூன் அளிக்கிறார்கள். :)
இதுவும் மேற்குதான். பயணம் செய்த வாகனம் வரும்வரை க்ளிக்கினேன்.

சிறிது தள்ளி..
அங்கிருந்து கிளம்பி மண்டபம் தாண்டி ஆச்சிமடம் தங்கச்சிமடம் தாண்டி பாம்பன் பாலம் வந்தாச்சு. ஒரே படகுகள் மயம். ரெஸார்ட் போல லுக் மாறிவிட்டது.

நாங்கள் சின்னப்பிள்ளையாக இருந்தபோது ரயில் பாதை ஒன்றே செல்லும் மார்க்கம்.
இப்போது பேருந்துப் பாதை வந்துவிட்டதாலும் தனித்தனி வாகனங்களில் சென்றுவந்தால் நோக்கம் போல் நேரம் அனுசரித்துப் போகலாம் என்பதாலும் இப்பொதெல்லாம் ரயில் பயணம் நஹி.

ஆனால் அந்தப் பாலம் எப்போது வரும் என்று அந்தக் காலத்தில் எல்லாம் எதிர்பார்ப்போம். பொதுவாக அந்தியிலேயே வரும். ஒரு மாதிரி திரில்லர் மூவிஸ் மாதிரி ட்ரெங்க் ட்ரெங்க் என்ற சத்தத்தோடு அந்த கரி எஞ்சின் ஓடுவதும் அக்கம் பக்கம் பூரா கடலாகக் காட்சி அளிப்பதும் மகா த்ரில். சன்னலோர சீட்டுக்கு வெகு போட்டியிட்டு சீட்டில் மண்டியிட்டு எல்லாம் அமர்ந்து எக்கி எக்கி கடலைப் பார்ப்போம்.
இதுதான் அந்த பாம்பன் பாலமும் பாக் ஜலசந்தியும். இது 1914 இலிலேயே கட்டப்பட்டதாம். பேருந்துப் பாதை 1988 இல் தான் கட்டப்பட்டதாம்.

இந்தப் பாலத்தின் வழியாக மாதம் 10 கப்பல்கள் சென்று வருகிறதாம் . கப்பல் வரும் நேரம் இந்தப் பாலம் இருபுறமும் உயர்ந்து மடங்கியோ தூக்கியோ கொள்ள கப்பல் கடந்து போகுமாம். இதுவரை இது செவிவழிச் செய்தியும் பத்ரிக்கைச் செய்தியும்தான். நேரில் ஒன்றைக்கூடப் பார்க்க வாய்க்கவில்லை.

ஒவ்வொரு முறை செல்லும்போதும் நினைத்துக் கொள்வதுண்டு ஏதாவது கப்பல் வந்து கடக்காதா அதைப்பார்க்க மாட்டோமாவென்று. இதுவரை இல்லை. ஹ்ம்ம்.

கொஞ்சம் பைனாப்பிள் துண்டுகளுடன் கடற்கரைக் காற்றின் உப்பையும் ருசிக்கலாம். லேசாக கவுச்சி வாடையும் அடிக்கும்.
இரண்டரை கிலோமீட்டர் இருக்குதாம் இந்தப் பாலம்.
கடற்காற்றும், கடல் கொந்தளிப்பும்  அரிப்பும் அதிகம் என்றாலும் சுனாமி போன்றவையோ, தனுஷ்கோடி புயல் போன்றவையோ எந்தப் பாதிப்பையும் இந்த ரயில்வே பாலத்துக்கு ஏற்படுத்தவில்லை என்கிறார்கள்.

கொரோஷன் எனப்படும் அரிப்பைத் தடுக்க ஏற்ற பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இந்தப் பாலம். மிகுந்த ப்ரயாசைப்பட்டுத்தான் இதைக் கட்டி இருக்கிறார்கள்.
படகுகளும் குடில்களும் அழகான காட்சி.

இந்த முறை ஒரு புதிய விஷயம். 

நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களுக்கு ஒரு மாபெரும் நினைவு மண்டபம் கட்டிக்கொண்டிருக்கிறது அரசு . அதற்கான வேலைகள் அசுர வேகத்தில்  நடந்துகொண்டிருந்தன . 

டிஸ்கி:- இவற்றையும் பாருங்க. 

1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS. 

2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS. 

3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.

4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.

5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS. 

6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.

7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS.  

8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS. 

9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS. 

10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள். 

11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..

12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.

13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)

14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL. 

16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY. 

17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS ) 

18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS. 

20.  மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.

21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.

22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.

23. சும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.

24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS. 

25.  மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS. 

26. மை க்ளிக்ஸ். கத்திரிக்காயும் கண்ணாடியும். MY CLICKS.

27. மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை.  MY CLICKS

28. மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.

29. மை க்ளிக்ஸ் -  கூல் கூல் கூல் . MY CLICKS.

30. நிலவும் நீயே நெருப்பும் நீயே. மை க்ளிக்ஸ். MY CLICKS.

31. ஜில் ஜில் ஜில். மை க்ளிக்ஸ், MY CLICKS.

32. பழம் நல்லது. - 1. மை க்ளிக்ஸ். MY CLICKS

33. பழம் நல்லது. - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS

34. பறவைகள் பலவிதம், மை க்ளிக்ஸ், MY CLICKS

35. எண்ணெயில் குளிக்க இத்தனை வகைகளா. மை க்ளிக்ஸ் , MY CLICKS 

36.மாலையில் கொஞ்சம் கர்க் முர்க். மை க்ளிக்ஸ். MY CLICKS

37. குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவுகள். மை க்ளிக்ஸ், MY CLICKS

38. சரஸ்வதியில் இருந்து சரஸ்வதி வரை , மை க்ளிக்ஸ், MY CLICKS.

39. கோவிந்தபுரம் & பூம்புகார் மை க்ளிக்ஸ். MY CLICKS.

40. சிங்கப்பூர் மை க்ளிக்ஸ். MY CLICKS.

41. மலேஷியா. மை க்ளிக்ஸ் MY CLICKS.

42. கும்பகோணம் – மை க்ளிக்ஸ் MY CLICKS

43. புகார், தரங்கம்பாடி. ஆக்ரோஷ அலைகள். மை க்ளிக்ஸ் MY CLICKS.

44. மலைகள் - மை க்ளிக்ஸ். MY CLICKS. 

45. தாராசுரம் மை க்ளிக்ஸ் . MY CLICKS.

46. குமரகம், ஆலப்புழா மை க்ளிக்ஸ் MY CLICKS. 

47. கெம்பேகவுடா ஏர்போர்ட், பெங்களூரு. மை க்ளிக்ஸ் MY CLICKS.

48. சுதேசி ( ஐட்டம்ஸ் )உணவு. மை க்ளிக்ஸ்,MY CLICKS. 

49. துபாய், ஷார்ஜா, அபுதாபி, மை கிளிக்ஸ். MY CLICKS.

50. எங்கே செல்லும் இந்தப் பாதை.. மை க்ளிக்ஸ். ROADS . MY CLICKS

51. கொள்ளை கொள்ளும் கேரளா மை க்ளிக்ஸ். KERALA. MY CLICKS.

 52. சிங்கப்பூர் ஆர்கிட் பார்க், மை க்ளிக்ஸ். ORCHID PARK. MY CLICKS 

53.  சிங்கப்பூர் ஆழ்கடல் அதிசயங்கள். மை க்ளிக்ஸ். UNDERWATER WORLD, MY CLICKS. 

54. சிங்கை மலேயா சில உதிரி புகைப்படங்கள், மை க்ளிக்ஸ், MY CLICKS.

55. மலேஷியா சிங்கை, பெங்களூரு .. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS. 

56.  கொஞ்சம் மதிய விருந்து. மை க்ளிக்ஸ். MY CLICKS. 

57.  காய்கனி பூ பழம் மை க்ளிக்ஸ். MY CLICKS.

58. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS.

59. பறவைகள் மை க்ளிக்ஸ். MY CLICKS. 

60. சுடச்சுட கொஞ்சம் சூப்ஸ் & ரசம். மை க்ளிக்ஸ். SOUPS & RASAM, MY CLICKS.

4 கருத்துகள் :

G.M Balasubramaniam சொன்னது…

அண்மையில் நங்கள் ஒரு குழுவாகப் பயணப்பட்டது நினைவுக்கு வருகிறது அனுபவங்களைப் பதிவாக்கி இருக்கிறேன்

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

செம ஃபோட்டோஸ்!!! அதுவும் கடல் படங்கள் வாவ்!!! ரொம்ப நல்லாருக்கு தேனு. பாம்பன் ப்ரிட்ஜ் எனக்கு மிகவும் பிடித்த ப்ரிட்ஜ். நான் சின்ன பிள்ளையா இருந்தப்ப 3 வது வகுப்பு வரை இலங்கை... இலங்கையிலிருந்து இந்தியா வரும் போது தலைமன்னார் டு இராமேஸ்வரம் வரை கப்பல். அப்புறம் கரை எத்த தோணி...என்று செம அனுபவம்...அப்புறம் மண்டபம் வரை ரயில். அப்ப பாஅம்பன் பாலம் வரும் போது அதுக்காகவே எதிர்பார்த்துக் காத்திருப்பு...பைசா போடச் சொல்லுவாங்க பாட்டி. நானும் போடுவேன்...அப்புறம் மண்டபத்துலருந்து மதுரைக்குப் பயணம் ரயிலில்...சில வருடங்களுக்கு முன்னாடி மகன் என் அனுபவங்களைக் கேட்டு போய்ப் பார்க்கணும்னு சொல்லி ரெண்டுபேரும் ரயில் ஜன்னலுக்குப் போட்டி போட்டு அப்புறம் ரெண்டு பேரும் டோர் கிட்ட நின்னு ரசித்தோம்....செம அனுபவம்...உங்கள் கிளிக்ஸ் இன்னும் பல நினைவுகளை நினைவுபடுத்துது...
கீதா

பரிவை சே.குமார் சொன்னது…

படங்கள் அழகு அக்கா.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி பாலா சார்

நன்றி கீதா

நன்றி குமார் சகோ :)

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...