புதன், 13 டிசம்பர், 2017

கோவை ஃபன் ரிபப்ளிக் மால். COIMBATORE FUN REPUBLIC MALL.

சென்னை அம்பா  ஸ்கைவாக், ஃபோரம் மால், எக்ஸ்பிரஸ் மால், சிட்டி செண்டர், ஸ்பென்ஸர் ப்ளாஸா, அபிராமி, அல்ஸா, ஸ்பெக்ட்ரம், சந்திரா,  இவற்றில் அம்பா ஸ்கைவாக் என்னவோ ரொம்பப் பிடிக்கும். அடிக்கடி  அங்கே சினிமாவுக்குச் செல்வதுண்டு. பெங்களூர், துபாய் போன்ற இடங்களிலும் மால்கள் ரொம்ப ரொம்ப விரிவாக அழகாக இருக்கும்.

கோவையிலும் நான்கைந்து மால்கள் இருந்தாலும் ( ப்ரூக் ஃபீல்ட்ஸ், ஃபன் சிட்டி, ப்ரோஸோன் ) ஃபன் ரிபப்ளிக் மாலுக்கு ஒரு முறை செல்லும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அதை க்ளிக்கினேன். அது உங்கள் பார்வைக்கு இங்கே.

( முன்னே எல்லாம் சிதம்பரம் பார்க், காக்டஸ் பார்க், பொடானிகல் கார்டன், மருதமலை, போரூர், ஈச்சனாரி, கேஜி, அர்ச்சனா, தர்சனா, செண்ட்ரல்  போன்ற இடங்களே நாங்கள் செல்லுமிடங்கள். இப்போ மால் பெருகிப் போச்சு )
கோவை ஹோப்ஸில் இருக்கிறது இந்த மால். அவினாஷி செல்லும் சாலை.  எல்லா மாலும் போல் இங்கே சினிமா, உணவு அனைத்துமே உண்டு.
விண்டோ ஷாப்பிங்தான் அதிகம் செய்தோம். ஹிஹி எதுவுமே வாங்கலை. சினிமா & காஃபிமட்டுமே.


இந்த எக்ஸலேட்டர்களும் மால்களின் மேல் விதான மையப்பகுதியும் என்னை ஏனோ கவர்ந்தவை.
டை ஹார்ட் படம் பார்த்தோம்.
அடுத்து ஒரு கப் காஃபி சாப்பிடலாம்.
அம்பா ஸ்கைவாக்கில் கல்மனே காஃபி எனக்குப் பிடிக்கும். இங்கேயும் பரவாயில்லை.
பித்தளை டபரா டம்ளரில் நுரை பொங்க அந்த ஏசி குளிருக்கு இதமாக இருந்தது.
சரி கீழே போகலாம் வாங்க.
பயங்கர கூட்டம். அபிராமி மால் போல லாபியில் டான்ஸ் நடந்துகொண்டிருந்தது. அதுதான் கூட்டத்துக்குக் காரணம்.
ப்ரேக் டான்ஸ், ஃபுட் லூஸ், பாப், ராப் எல்லாம் கலந்து கட்டி ஆடிப்பாடிக்கொண்டிருந்தார்கள்.
இந்த ஆட்டம் போதுமா. ? தமிழக மைக்கேல் ஜாக்சன்ஸ். :) நிஜமாகவே நன்றாக ஆடினார்கள்.

சரி நாம கிளம்பலாம்.
கூட்டம் கலையவில்லை. அடுத்த மால் பார்க்க போவோம் வாங்க.

3 கருத்துகள் :

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

சென்றதில்லை. செல்வேன்.

அப்பாவி தங்கமணி சொன்னது…

எப்ப வந்தீங்க எங்க ஊருக்கு? My home just 10 minutes ride from there, next time kandippa vaanga :)

Thenammai Lakshmanan சொன்னது…

சென்றுவாருங்கள் ஜம்பு சார்

போன வருஷம் பா தங்கமணி :) அடுத்தமுறை வந்தா கட்டாயம் சொல்றேன் :)

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...