ஞாயிறு, 24 டிசம்பர், 2017

இரணியூர் ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவியம்மன் திருக்கோயில்

காந்தி மகானும் இராட்டையில் நூல் நூற்கும் பெண்மணிகளும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இரணிக் கோவிலில் சிற்பமாகவே வடிக்கப்பட்டுள்ளனர்.. அதுவும் விதானத்தில். மிகவும் கடினமான காரியம் விதானச் சிற்பமும், விதான ஓவியமும்தான்.

டெல்லியில் ஜண்டேவாலா மந்திர் என்று ஒரு தேவி கோவில் உண்டு. சுதந்திரப்போராட்ட காலத்தில் இக்கோவிலில் நம் தேசியக்  கொடியை ஏற்றுவார்கள் என்று சொல்லக் கேள்வி. விநாயக சதுர்த்தி மும்பையில் தேசிய எழுச்சிக்குப் பயன்பட்டதுபோல் தென்னகக் கோவில்களும் தேசவிடுதலை உணர்வுகளை மதிப்பளித்துச் சிற்பங்கள் வெளியிட்டுள்ளன.

முன்பே இரணியூர் பற்றிப் பல பதிவுகள் எழுதி இருக்கிறேன். இது நகரத்தார் கோவில் உலா பகுதியில் இடம்பெற எழுதி உள்ளேன். இக்கோவில் நகரத்தார்களின் ஒன்பது கோவில்களில் ஒன்று.

நீலமேகப்பெருமாள், இரணிக் காளி ஆகியோருக்கு தனிக்கோவில் உண்டு. இக்கோவில் ஆட்கொண்ட நாதர் கோவில். இங்கே நாராயணன் நரசிம்மன் உருக்கொண்டு இரணியனை அழித்தபின் அடங்காத உக்கிரம் கொண்டு விளங்கியதால் அவரை ஆட்கொண்ட சிவனையும் சேர்த்து இரணியூர் ஆட்கொண்ட நாதராக வழிபடப்படுகிறார். ( அரியும் அரனும் ஒன்று. எனவே இங்கே சிவ விஷ்ணு சேர்த்தே வணங்கப்படுகிறார்கள் ).  இரண்ய சம்ஹாரத்தையும் இரண்ய மல்யுத்தத்தையும் இன்னும் பல ஓவியங்களையும் சிற்பங்களையும் பின்னர் பகிர்கிறேன்.

அஷ்டலெக்ஷ்மிகள் வெளியே, நவ துர்க்கைகள் உள்ளே, வீரபத்திரர், 108 அம்மன் சிற்பங்கள், 108 பைரவ திரு மூர்த்தங்கள் ( பைரவ சந்நிதி கருவறை புறச்சுவர் சிற்பங்களாக ) வடிக்கப்பட்டுள்ளார்கள்.
மிகச் சிறப்பு வாய்ந்த இத்திருக்கோயிலை ஒரு முறையேனும் தரிசிக்க வாருங்கள், காரைக்குடியிலிருந்து 27 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கீழசீவல்பட்டி வழியாகச் செல்லலாம்.இராட்டையில் நூல் நூற்கும் பெண்கள்.
கோயிலின் தூய்மைப்பணியில் உதவும் பிரம்மாண்டமான ஏணி.
துவஜஸ்தம்பம்.உள்ளே ஈசன் ஆட்கொண்டநாதரின் அருளாட்சி.
தூணில் ஆறுமுகனும் பிரம்மனும் விஷ்ணுவும் சிவனும்.
அஷ்டலெக்ஷ்மி மண்டபம்.
தேர் நிலை.
இராட்டையில் நூல் நூற்கும் பாவைகள். அம்மன் சன்னதிக்குப் பின்னால் உள்ள பிரகாரத்தின் விதானத்தில்.
காந்திமகான்சிற்பம். பைரவர் சன்னதிக்குப் பின்னால் உள்ள பிரகாரத்தின் விதானத்தில்
வக்கிர அமைப்பில் தெய்வ மூர்த்தங்கள் வடிக்கப்பட்டுள்ள இக்கோவில் குபேரனாலும் வழிபடப்பட்டது என்பதால். தெற்கு வாயிலுக்கு அருகில் குபேரன் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.

தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு உகந்தது போல வளர்பிறை அஷ்டமியில் குபேர ஹோமம் செய்பவர்கள் பெருகிவருகிறார்கள்.ஒவ்வொரு மாதமும் குபேர பூஜையும் அபிஷேகமும், ஹோமமும் செய்ய ரூ .3,500/-. ஹோமத்தில் கலந்துகொள்ள வருபவர்களுக்கு  உணவு அங்கே உள்ள விடுதியில் ஏற்பாடு செய்து கொள்ளலாம்.
மிக அருமையான அபிஷேகமும் தரிசனமும் கிடைத்தது.
ஹோம மண்டபத்தில் உள்ள உற்சவ மூர்த்தி குபேரர்.
அவரது வெண்புரவி.
ஹோமம் முடிந்தவுடன் அந்த கும்ப நீர் மற்றும் பூஜா திரவியங்கள் அபிஷேகிக்கப்பட்டு பூரண அலங்காரத்தில் ஜொலிக்கும் குபேரன்.
குபேரன் அருள் பெறவும் சிற்பங்கள் ஓவியங்களைக் காணவும், இறையருள் கிட்டவும் , காந்திமகானையும் இராட்டையில் நூல் நூற்றலைப் பார்க்கவும் இரணியூருக்கு ஒரு முறை கட்டாயம் வாருங்கள்.

இரணியூர்க் கோயிலைச் சேர்ந்தவர்களை இப்படிக் குறிப்பிடுவார்கள்.

”கல்வாச நாட்டில் இளையாற்றங்குடியான குலசேகரபுரத்தில் இரணியுர்
மருதங்குடியான ராஜநாராயணபுரத்தில் இரணியூர்த் திருவேட்பூருடையார்.”.

டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.

1. அஷ்ட பைரவர்களும் 108 உக்கிர பைரவர்களும்.

2. துர்க்கை உள்ளே லெக்ஷ்மி வெளியே.

3. இராசிகளை ஆளும் இரணியூர் நீலமேகப் பெருமாளும் கனகவல்லித் தாயாரும். 

4. ஊருணிகள் - திருக்கோயில் புஷ்கரணிகளும் தாமரை பூத்த தடாகங்களும்.

5. இரணிக்கோயில் கோபுரங்களும் திருச்சுற்று மதிலில் பள்ளிகொண்டபெருமாளும் நான்முகனும். 

6. இரணிக்கோயில் படிச்சிற்பங்கள்.

7. இரணிக்கோயில் தூண்சிற்பத் திருமூர்த்தங்கள்

8. விருத்தன் திருமணமும் விடையேறு பாகன் திருவிளையாடல்களும். 


9. காமதேனுவும் கீதோபதேசமும் பட்டாபிஷேகமும்.

10. இரணியூரில் குபேர ஹோமமும் பச்சைக் குங்குமமும்.

11. இரணியூர் ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவியம்மன் கோவில்.

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. மாத்தூர் ஐந்நூற்றீசுவரர்  பெரியநாயகியம்மன் திருக்கோயில்

2. இலுப்பைக்குடி தான்தோன்றீசுவரர் சவுந்தரநாயகியம்மன் திருக்கோயில் :- 

3. வேலங்குடி கண்டீஸ்வரர், காமாட்சியம்மன் திருக்கோயில் 

4. இளையாற்றங்குடிக்கோவிலில் அபூர்வ ஓவியங்கள்:- .நர்த்தன நடராஜரும், கங்காதரரும். 

5. சூரக்குடி தேசிகநாதர் ஆவுடைநாயகியம்மன் திருக்கோயில்.

6. இளையாற்றங்குடி கைலாசநாதர் நித்யகல்யாணியம்மன் திருக்கோயில்

7. இரணியூர் ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவியம்மன் திருக்கோயில்.

8. நேமம் ஜெயங்கொண்ட சோளீஸ்வரர் சௌந்தரநாயகியம்மன் திருக்கோயில்.

9. வைரவன்பட்டி வளரொளிநாதர் வடிவுடையம்மன் திருக்கோயில்.

10. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், மருதீசர், வாடாமலர் மங்கையம்மன் திருக்கோயில்.

4 கருத்துகள் :

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

இதுவரை பார்க்காத கோயில் கண்டோம். அருமை.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஜம்பு சார்

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

படங்கள் ரொம்ப அழகாக இருக்கின்றன....புதியதொரு கோயில் பற்றியும் அறிந்தோம்..

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கீத்ஸ் :)

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...