புதன், 22 நவம்பர், 2017

டபிள் ரோட் ஆக்டேவில் இரு நாட்கள். ( OCTAVE )

பெங்களூருவில் இருந்த வரைக்கும் மால் மாலாகப் போய் சினிமா பார்த்ததுண்டு ஆனால்  எம்டிஆர் டிஃபன் செண்டர்  போக முடியவில்லை. அங்கிருந்து வந்ததும் ஆக்டேவில் தங்கும் வாய்ப்புக் கிடைத்தது.  பக்கத்திலேயே தாஜ் கேட்வே. இங்கே ஒருவர் தங்க ரூம் வாடகை 3, 000 என்றால் அங்கே 6,000 !!!

கூடுதலாகத் தங்கும் ஒவ்வொருவருக்கும் கட்டணம் உண்டு. தனித்தனியாக இன்னும் டபிள் பெட்களைக் கட்டிலோடு நகர்த்திக் கொண்டு வந்து போட்டு விடுகிறார்கள். இவ்வளவு வசதியான ஹோட்டலைப் பார்த்ததேயில்லை இதுவரை. ஒருவர் தங்கும் அறையே ஒரு வீடு அளவு இருந்தது.

பெங்களூர் சாந்தி  நகரில் டபுள் ரோட்டில் ( ஏரியாவுக்கு ஒன்றாய்  நிறைய ஆக்டேவ் ஹோட்டல்கள் இருக்கின்றன இங்கே ) கனரா பாங்குக்கு எதிரில் கே ஹெச் ரோட்டில் அமைந்துள்ளது இந்த ஹோட்டல்.
செல்லும் நடைபாதை முழுவதும் பூவாசம். இந்தக் காரிடாரில் சென்று லிஃப்டில் முதல் மாடியில் இருக்கும் ரிசப்ஷனில் சாவியை வாங்கிக் கொள்ளலாம்.
இதோ மூன்றாம் மாடியில் உள்ள அறைக்கு வந்தாச்சு.

அங்கே டபிள் ஸ்க்ரீன் போட்டுள்ள இடம் முழுக்கக் கண்ணாடிக் கதவு. திரையைத் திறந்தால் பக்கத்தில் இருக்கும் தாஜ் கேட்வே தெரியும்.
ரூமில் கண்ணாடி டம்ளர்கள், தண்ணீர், ஹாட் வாட்டார் ஜக், காஃபி தயாரிக்கத் தேவையான பொருட்கள் ( நெஸ்கேஃப், மில்க் பவுடர், சுகர், ) காஃபியைக் கலக்க சின்ன ஸ்பாச்சுலா போன்ற ப்ளாஸ்டிக் ஸ்பூன்கள் , கப் & சாஸர்கள் வைத்திருந்தார்கள். எக்ஸ்ட்ரா போர்வை, தலையணை இந்த கப்போர்டில்.

எக்ஸ்ட்ராவாக சேஃப்டி லாக்கரும் இருக்கும். சூப்பர்.
இருபுறமும் அலமாரியை மூடினால் மிகப் பெரிய கண்ணாடி கிடைக்கும். ட்ரஸ் செய்துக்கலாம். டான்ஸ் ஹால் மாதிரி டான்ஸ் ஆடியும் பார்க்கலாம். :)
ரூமில் செண்டரில் ஏசி இருந்தாலும் இந்த கார்னரிலும் ஒரு ஸ்ப்ளிட் ஏசி, டிவிக்கருகில் ஒரு கண்ணாடியும். இங்கேயும் மிக நீண்ட சர்வீஸ் டேபிள் & சேர்.  சில்வர் டஸ்ட் பின்னும் இருக்கு.
டீப்பாய் சோஃபாவிலிருந்து ரூமை ஒரு பருந்துப் பார்வை :)
நாலு பேருக்கும் காஃபி ஆர்டர் செஞ்சாச்சு. வாங்க குளிருக்கு சூடா ஒரு கப் காஃபி குடிப்போம்.  டீப்பாயில் கண்ணாடிக்குக் கீழே வொயிட் பெப்பிள்ஸ் போட்டிருக்காங்க. அழகா இருந்தது.
இந்த ஃப்ரிஜ்ஜில் குளிர் பானம் மட்டுமில்ல. கெட்டிக் குழம்பு, மண்டி எல்லாம் கொண்டு போய் எலக்ட்ரிக் ரைஸ் குக்கரில் சாதம் வைத்தும் சாப்பிட்டோம்.
பாத்ரூம் ஷேவிங் கண்ணாடியில் ஒரு வசதி. இரண்டு கண்ணாடிகள் இருக்கு. ஒன்று இம்மூவபிள். இன்னொன்று மூவபிள்.

அதை அப்படியே ரொட்டேட் செய்து முகத்துக்கு அருகே கொண்டு வந்து ஆண்கள் ஷேவ் செய்துகொள்ல வசதியா அமைச்சிருக்காங்க. ஒருபக்கம் நார்மல் கண்ணாடியும் இன்னோரு பக்கம்  பூதக்கண்ணாடியும் இருக்கு. :)
குளிக்க தனி கண்ணாடிக் கதவு தடுத்த ரூம். அங்கேயே பாடி வாஷ், ஹேர் வாஷ் லிக்விட் சோப்புகள் சுவரில் இருக்கும் பாக்ஸில் பொருத்தி இருக்காங்க.

நாம் ப்ரஸ் பண்ணா போதும். தேவையான லிக்விட் கையில் எடுத்துத் தடவிக் குளிக்கலாம். ஆரஞ்ச் ஃப்ளேவரில் இருந்த அந்த ஃபேஷ் வாஷ் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்துச்சு.

ஹேண்ட் ஹோஸ் & ஷவர் மட்டும்தான் குளிக்க. இங்கே டாய்லெட்டிலும் ஹேண்ட் ஹோஸ்தான். நோ பக்கெட் கப் பிஸினஸ்.

நாலு பேருக்கு நாலு டவல்ஸ். அப்புறம் ஹேர் ஆயில் தண்ணீர் பாட்டில் எல்லாமே நாலு உண்டு.
நமக்குப் பிடிச்ச காரிடார்.
சரி குளிச்சாச்சு. வாங்க ஃபோர்த் ஃப்ளோர்ல இருக்க பஃபே ஹாலுக்குப் போவோம்.

தட்டுக்களையும் ஸ்பூன்களையும் எடுத்துக்கிட்டு வேணுங்கிறத மொக்க ஆரம்பிக்கலாம்.
 முதல்நாள் வெஜ் இட்லி, சாம்பார்,  அவல் போகா, தேங்காய்ச் சட்னி, சோளா பட்டூரா, சன்னா மசாலா, ஜூஸ், ( இதுதான் ரஸ்னா மாதிரி இருந்தது ) , ப்ரெட் பட்டர், ஜாம். அதன் பின் ஒரு வெஜ் ஆம்லெட்டும்  காஃபியும்.
மறுநாள் மேத்தி பராத்தா, தஹி, அச்சார், வெஜ் இட்லி, சாம்பார், சட்னி, வெள்ளை ரவை காய்கறி கிச்சடி, வெஜ்  ஆம்லெட், டோஸ்டட் ப்ரெட் பட்டர் ஜாம், அதே ரஸ்னா . இதை மட்டும் அவங்க ரியல் ஃப்ரூட் ஜூஸா கொடுக்கலாம். எல்லா ஹோட்டலிலும் தர்ப்பூசணி, பப்பாளி, இல்லாட்டி பைனாப்பிள் ஜூஸ் இருக்கும்.

சூடா கொஞ்சம் காஃபி. ஜீனி போட்டுக்குற க்ளாஸ் அழகா இருந்தது. :)


யாரோ ஒரு குட்டிப் பொண்ணுக்கு பிறந்தநாள் பார்ட்டி அன்னிக்கு. அதுனால பாங்க்வெட் ஹாலை அழகா அலங்கரிச்சிருந்தாங்க.
கை கழுவும் இடம்.
அதே காரிடார் திரும்ப . ரூமுக்குப் போலாம். :)

பக்கத்து ஹோட்டல் க்ளாஸ் டோர் வழியா  இரவில் ரோட்டின் வெளிச்சம் பட்டு தகதகக்குது.
சரி ஆக்டேவ் . இரண்டு நாள் கோயில் தரிசனம் எல்லாம் செய்யமுடிஞ்சுது.  தொட்டம்மா, சிக்கம்மா, பணசங்கரி ஆகிய கோயில்களுக்கு மெட்ரோவிலும் கால் டாக்ஸியிலும் போய் வந்தோம்.
இது அனைத்து வசதிகளும் நிரம்பிய அருமையான ஹோட்டல். 

இந்த ஹோட்டலுக்கு என்னோட ரேட்டிங்  ஐந்து ஸ்டார்  *****.

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு. 

2. மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா.. 

3. பாரடைஸ் ரெஸார்ட். 

4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி) 

5. ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.

6. கேரளா சோழா & ஹைலாண்ட். 

7. கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :- 

8. பார்பக்யூ நேஷன் 

9. மை ப்ளேஸ்.

10. குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :- 

11. பிகேஆரும் இண்டர்காமும். :- 

12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.

13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.

14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS) 

15. சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.

16. வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து. 

17. கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி . 

18. கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.

19. காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்‌ஷனும். 

20. பெஸ்ட் ஃபில்டர் காஃபி.

21. எங்கும் பாரதி எதிலும் பாரதி.

22. உணவுப் பயணங்கள் . நியூ தில்லி. 

23. கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.

24. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

25. ழ வில் வலைப்பூ வடை...

26. அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும்.  

27. ஜெய்னிகா & கார்மெட். 

28. சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு. 

29. சமணர் படுகையும் சாந்தி இன்னும்.

30. பயண உணவுகள். பால் ஜலேபி.

31. பெருந்துறை ராயல் பார்க்கில் இரு நாட்கள். 

32. திருப்பூரில் ஒரு இல்லம். TIRUPUR - THE HOME !

33. லீலா பேலஸில் ஒரு ரிசப்ஷனும் தேன் பூ செடியும்.

34. நிவேதாஸ் இன்னும் நவம்பர் எட்டும்.  

35. தர்மபுரி அதியமான் அரண்மனையில் புத்தர் !

36. பழனியில் சிவா. 

37. ராயல் பார்க்கில் கவர்ந்த சில ஓவியங்கள். 
41. ஹொடெல் ஸ்ரீ சாந்த் ஆ, ஸ்ரி சாந்த, ஷ்ரீ ஸாந்தா. ?! 

42. ஸ்ரீ ஷாந்த். காலை உணவும் கண்கவர் ஓவியமும். 

43.ராதா ப்ரஸாத்தின் லிஜோ ஸ்கைபூல் ரெஸ்டாரெண்டில் சில காலைகள். 


44. திருப்பூர் விநாயகாவில் ஒரு நாள்.  
  

50. குவாலியர் ஸுரபியில் சுவையான ஷாஹி பனீரும், பால் ஜலேபியும் 

51. போபால் ஜி ஷையில் செம்பு விநாயகர். BHOPAL GS G-SHY. 

52. பெல்ஸ் ரோட் ஹோட்டல் நியூ பார்க் & தி பெவிலியன். NEW PARK & THE PAVILION.

53. கோகுல் கிராண்ட் & ஷண்முகா .HOTEL GOKUL GRANDE & SHANMUGA

54. டபிள் ரோட் ஆக்டேவில் இரு நாட்கள். ( OCTAVE )

3 கருத்துகள் :

கரிகாலன் சொன்னது…

உங்கள் பதிவு அருமை.. படங்களுடன்.பூதக்கண்ணாடி என்று நாங்கள் சிறுவர்களாக இருந்த போது அப்படித்தான் சொல்லுவோம்.அருமை

G.M Balasubramaniam சொன்னது…

ஒவ்வொரு ரூபாய்க்கும் வசதிகள்

Thenammai Lakshmanan சொன்னது…

nandri Karikalan

aam Bala sir.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...