புதன், 13 செப்டம்பர், 2017

அருள் பொங்கும் ஈரோடு பெரிய மாரியம்மன், வலம்புரி விநாயகர் திருக்கோயில்கள்.

1000 இல் 2000 இருந்து ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்டதாம் ஈரோட்டின் ப்ரப் ரோட்டில் அமைந்திருக்கும் பெரிய மாரியம்மன் திருக்கோயில். மிகப் பழமை வாய்ந்த இக்கோயிலின் உள்ளே நுழைந்ததும் சக்தியின் அருளாட்சி நம்மை  ஆக்கிரமிக்கிறது. ரொம்பப் பவர்ஃபுல்.
ஈரோட்டில் ஏகப்பட்ட மாரியம்மன் கோயில்கள் இருப்பதால் இக்கோயில் பெரிய மாரியம்மன் கோயில் என்றழைக்கப்படுது. பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா ரொம்ப பேமஸ். பொங்கலிலிருந்து மஞ்சள் நீராட்டு வரை அனைத்து மக்களும்  நேர்த்திக்கடனாக  மாறுவேடமணிந்து வந்து  வழிபாடு செய்வார்களாம். 
எலுமிச்சை தீபங்களின் ஒளியில் இன்னும் கதகதப்பாக உடலும்  மனமும் வெம்மையும் உன்மத்தமும் பரவசமும் ஏறியதுபோல் இருந்தது  இக்கோயிலுக்குள் சென்றதும். இறை தரிசனம் என்பது ஓர் அனுபவம். அதை   அனுபவித்தால்தான் புரியும்.

சந்நிதிக்கு எதிரே பெரிய உண்டியலும் அதன் பின் ஒரு ஊஞ்சல் இருக்கு. அதில் வேண்டுதல்  உப்பு கொட்டப்பட்டு இருக்கு. 


ஜொலிக்கும் மூக்குத்தியும் தோடுகளும் மின்னும் பொட்டும்  நகைகளும், அழகூட்ட மஞ்சள் பட்டில் மாரியம்மா வெகு அழகு. அவள் அருள் பார்வை நம்மேல் கருணையோடு வீழ கர்மவினை எல்லாம் கடுகியே மாய கனிந்தெழுந்து வெளிவந்தோம்.

அதே ரோட்டில் இருக்கிறது வலம்புரி விநாயகர் திருக்கோயில்.
இங்கே முன்புறம் துவார பாலகர் நிற்கும் இடத்தில் இடப்புறம் மஹாலெக்ஷ்மியும் மஹாசரஸ்வதியும் அருள் பாலிக்கிறார்கள்.

வலப்புறம் அமிர்தலிங்கேஸ்வரரும் அபிராமியம்மையும் கருணை பொழிகிறார்கள்.
உள்ளே கருவறையில் வலம்புரி விநாயகர் காட்சி தருகிறார்.

இன்னொரு அற்புதம். ராமலக்ஷ்மணர் சீதையுடன் குட்டி ஆஞ்சநேயரும் காட்சி தருகிறார்.
இவர்கள்தான் சாலையை நோக்கிய சந்நிதியில் அருள் புரிகிறார்கள்.
அந்தக் குட்டி ஆஞ்சநேயர் வெகு அழகு..

விநாயகரையும் வாயுபுத்திரனையும் வணங்கி அருள்பெற்று வந்தோம்.

4 கருத்துகள் :

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அழகான கோவில்!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நல்லதொரு கோயில் அறிமுகம்...

G.M Balasubramaniam சொன்னது…

ஜெய சூர்யா பதிவுக்கு அளித்த பின்னூட்டத்துக்குப் பதில் போல் இருக்கிறது ஆலய தரிசனம்

Thenammai Lakshmanan சொன்னது…

nandri Venkat sago

nandri Geeths.

nandri Bala sir. aamaam:)

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...