செவ்வாய், 12 செப்டம்பர், 2017

சொர்ரென்டோ கெஸ்ட் ஹவுஸ்.

சென்னை அண்ணா நகர் பாலாஜி பவனின் மேல் அமைந்திருக்கும் சொர்ரென்டோ கெஸ்ட் ஹவுஸ் நம்ம பட்ஜெட்டுக்கு ஏற்ற அழகான தங்குமிடம். இருவர் தங்க ஒரு நாளைக்கு ரூ 900/- மட்டுமே. ஏதாவது  விசேஷம் என்றால் சென்னை செல்பவர்கள் அங்கே தங்கலாம். காலை மட்டுமே என்றால்  இன்னும் இருவரும் கூட தங்கலாம்.

ட்ரெயினை விட்டு இறங்கியதும் கால்டாக்சியில் அண்ணாநகர் வந்தாச்சு. ரவுண்டானா அருகில் என்கிறார்கள். எம்மாடியோ அண்ணா நகரில் எத்தனை ரவுண்டானா . அத்தனையும் தாண்டி சிந்தாமணி அருகில் இந்த ஹோட்டல் அமைந்திருக்கிறது.

சொர்ரென்டோ என்ற பெயர் இடாலியாக  இருந்தாலும் ரூமின் அமைப்பு ஏதோ கோவாவில் அமைந்திருந்த ஹோட்டல்கள் போல் போர்ச்சுக்கல்/ பிரெஞ்ச் பாணி கட்டிடக்கலையை ஞாபகப்படுத்தியது.    
பாலாஜி பவனில் காபி ஆர்டர் செய்து சாப்பிட்டுவிட அங்கே தங்க வைத்திருந்த ஹோஸ்ட் குடும்பத்தாரின் உறவினர் மிகப்பெரும் காபி பிளாஸ்க்குடன் கதவைத் தட்டினார். சாப்பிட்டுவிட்டோம் என்று கூறிவிட்டு ஃபங்க்ஷனுக்கு ரெடியானோம்.
கண்ணாடி, வாஷ் பேசின் எல்லாமே ரூமுக்குள்தான்.அதன் கீழே சில்வர் குப்பைத் தொட்டி இருந்தது. பாத்ரூமுக்கு படி ஏறிப் போகவேண்டும். மூன்று படிகள். இதற்கு கால்மிதி வேறு வழுக்குவதுபோல் போட்டிருந்தார்கள்.


சுத்தமான பெட், பில்லோஸ், ட்ரெஸ்ஸிங் டேபிள், டீப்பாய், இண்டர்காம்,
வெந்நீர்தான் வெளியில் பிடித்துக் கொள்ள வேண்டும். ஆனால்  கால் பக்கெட் வெந்நீர் போதும் மிக சூடாக வந்தது. பச்சை தண்ணீர் கலந்து குளிக்கலாம்.பாத்ரூமிலும் திரைச்சீலை ! துணி போட கோட் ஸ்டாண்ட்.!
எனக்குப் பிடித்த காரிடார். எல்லா ரூம் வாசலிலும் கால்மிதி போட்டிருந்தார்கள். ! ஹோட்டல்களில் காணமுடியாத அதிசயம் இது. !

டிவி,
உள்ளே கோட்ஸ்டாண்ட்
கோவா ஹோட்டல்களில் காணப்படும் வுட்டன் ஷெல்ஃபுகள் , திண்ணை போன்ற ப்ரொஜெக்ஷன் ஜன்னலருகில் அமைந்தது வித்யாசமா இருந்தது.  

துணி போட, கோட் மாட்ட - வார்ட்ரோப் & ஹேங்கர்கள்
ட்ரெஸ்ஸிங் டேபிள் வேறு !
ரங்க்ஸ் போய் சோப் & டவல்ஸ் பெற்று வந்தார். குளிச்சு கிளம்பியாச்சு
சேரில் கொஞ்சம் ஆசுவாசம் யப்பா இந்த சென்னை என்ன இந்த உப்புசமா இருக்கு. குளிச்சு  கிளம்புமுன்னே ஒரே வியர்வை.
எல்லாத்தையும் வந்து ஏறக்கட்டிக்கலாம் பாலஜிபவனிலிருந்து இட்லி சாம்பார் மணக்குது. விடு ஜூட் .
இன்னும் கொஞ்சம் சுத்தத்தை மெயிண்டெயின் பண்ணலாம்.

இந்த ஹோட்டலுக்கு என்னோட ரேட்டிங் நாலரை ஸ்டார். *****


டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு.

2. மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா..

3. பாரடைஸ் ரெஸார்ட். 

4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி) 

5. ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.

6. கேரளா சோழா & ஹைலாண்ட். 

7. கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :-

8. பார்பக்யூ நேஷன் 

9. மை ப்ளேஸ்.

10. குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :-

11. பிகேஆரும் இண்டர்காமும். :-

12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.

13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.

14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS) 

15. சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.

16. வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து. 

17. கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி . 

18. கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.

19. காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்‌ஷனும். 

20. பெஸ்ட் ஃபில்டர் காஃபி.

21. எங்கும் பாரதி எதிலும் பாரதி.

22. உணவுப் பயணங்கள் . நியூ தில்லி. 

23. கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.

24. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

25. ழ வில் வலைப்பூ வடை...

26. அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும்.  

27. ஜெய்னிகா & கார்மெட். 

28. சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு. 

29. சமணர் படுகையும் சாந்தி இன்னும்.

30. பயண உணவுகள். பால் ஜலேபி.

31. பெருந்துறை ராயல் பார்க்கில் இரு நாட்கள். 

32. திருப்பூரில் ஒரு இல்லம். TIRUPUR - THE HOME !

33. லீலா பேலஸில் ஒரு ரிசப்ஷனும் தேன் பூ செடியும்.

34. நிவேதாஸ் இன்னும் நவம்பர் எட்டும். 

35. தர்மபுரி அதியமான் அரண்மனையில் புத்தர் !

36. பழனியில் சிவா.

37. ராயல் பார்க்கில் கவர்ந்த சில ஓவியங்கள். 
2 கருத்துகள் :

G.M Balasubramaniam சொன்னது…

அடிக்கடி வெள்யூர் போகிறீர்களா இல்லை எப்பவோ போய் வந்த நினைவா வாழ்த்துகள்

விஸ்வநாத் சொன்னது…

நாலரை * நொம்ப அதிகம். இரண்டு தரலாம்.

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...