வியாழன், 24 ஆகஸ்ட், 2017

பெங்களூரில் மனம்தொட்ட தொட்டம்மா, சிக்கம்மா,வ(பண)னசங்கரி, வரசித்தி விநாயகர்.


கிராம தேவதைகளாக நம்மூரில் காளியம்மா மாரியம்மா இருப்பதுபோல் பெங்களூருரில் தொட்ட இடமெல்லாம் தொட்டம்மா கோயில் இருக்கிறது.

தொட்டம்மா என்றால் அனைத்து மாரியம்மன்களுக்கும் மூத்த சகோதரி என்று அர்த்தமாம்.
மகிஷாசுரனை அழித்த துர்க்கைதான் தொட்டம்மா என அழைக்கப்படுகிறார். ரேணுகா, எல்லம்மா என்றெல்லாமும் அழைக்கப்படுகிறார்.


குடியிருப்புப் பகுதிகளில் அமைந்துள்ள இக்கோயில் மிக கம்பீரமாக ஜொலிக்கிறது. அங்கேயே குடியிருந்த ஒருஅம்மணி இந்த அம்மனைக் காடம்மா என்றும் வனசங்கரி என்றும் கூட சொன்னார்.
உள்ளே மிகச் சுத்தமான பிரகாரங்கள். கோயில் ஸ்தல விருட்ஷமாக வேம்பு. அதன்முன் இன்னொரு சன்னதி அதில் இவருடன் சிக்கம்மா என்றொரு அம்மனும் குடி கொண்டிருக்கிறார். இரட்டை அம்மன் சன்னதிகள் கொண்ட கோயில் இது.
 இந்த அம்மனின் சன்னதியின் கீழ் சப்த கன்னியரும் கோயில்கொண்டிருக்கிறார்கள். வித்யாசமான காட்சி அது.
கோயிலைப் பார்த்தாலே பரவசமாகும் வண்ணம் அருளாட்சியுடனும் எழிலாட்சியுடனும் இருக்கிறது. கோயில் முன்புறமே முழுக்க முழுக்கத் தோரணங்களாக புதுமாலைகள் .மஞ்சள் குங்குமத்தின் தெய்வீக வாசனை என்று அன்று முழுவதும்  ஒரே பக்தி மயம்தான்.
நவராத்திரி, ஆடிசெவ்வாய், ஆடி வெள்ளி, அமாவாசை, பவுர்ணமி,  சாதாரண செவ்வாய், வெள்ளி  ஆகியன விசேஷம்.
பன்னரகட்டா ரோட்டில் இருக்கும் கோபாலன் இன்னோவேஷன்  மால் அருகில் மற்றும் ஷாப்பர்ஸ் ஷாப்பின் பின்புறம் அமைந்துள்ளது இக்கோயில்.
பெங்களூரில் இருப்பவர்கள் ஒருமுறை சென்று இந்த சிம்மவாஹினியைத் தரிசித்து  வாருங்கள். தொட்டதெல்லாம் துலங்கும்.

பனசங்கரி பற்றி முன்பே எழுதி  இருக்கிறேன்.ஆடிச் செவ்வாயில் அடங்காத கூட்டம்.
 தண்ணீர் கேன்களில் எலுமிச்சையைப் பிழிந்து பத்து பன்னிரெண்டு தீபங்கள் ஏற்றுகின்றார்கள். தாமே தேவியின் முன் சென்று தீப ஆரத்தி காட்டி வணங்குகிறார்கள்.
 எலுமிச்சை மாலைகள் சாத்தப்பட்டுக்கொண்டே  இருக்கின்றன.
கொட்டிக் கிடைக்கும் எலுமிச்சைகள். அன்றைக்கு உச்சிக்கால பூஜையைக் கண்டு களித்தோம். இன்று நாங்கள் இருக்கும் நிலைக்கு அவள்தான் காரணம். அவள் கொடுத்தது எல்லாம். எல்லாமே அவள் அருள். விழுந்து விழுந்து வணங்கி விடை பெற  மனமில்லாமல் வெளிவந்தோம்.
நம்ம மெட்ரோவில் ஏறி எம்ஜி ரோட் வந்தோம். அங்கே ரெஸ்ட் ஹவுஸ் ரோட் திருப்பத்தில்  மியூசியம் ரோட்டில் உள்ள வரசித்தி விநாயகரை தரிசித்தோம்.

``ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் வயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே''

- என்ற விநாயகர் ஸ்துதியைச் சொல்லி வணங்கினோம். 
டிஸ்கி:- இவற்றையும் பெங்களூருவில் பாருங்க.

1.  மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.

2.குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)
.
3. லால்பாகில் கோடையைத் தணிக்கும் கீரைகள். 

4. நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. பாகம் 1

5. இன்னும் சில ஒற்றையர்கள். பாகம் 2

6. மஞ்சள் முகமே வருக. (LAL BAGH )

7. குடியரசு/சுதந்திர தினத்தில் லால்பாக்.

8. இன்னும் சில ஒற்றையர்கள் பாகம் 3

9.  காதல் ரோஜாவே. -- பாகம் 4

10. காதல் ரோஜாவே..-- பாகம் 5
 

11. கோடையைக் குளுமையாக்கும் ஒரு கூடைப் பூக்கள்.

12. கழிவுநீரிலும் உயிர்க்கும் கல்வாழைகள்.

13. பிருந்தாவனத்தில் இசை நீரூற்றின் வண்ண நடனம். மைசூரில் வண்ணமயமான கோடை.

14. பணம் கொழிக்கும் பனசங்கரி – சாகம்பரி.

15. என் தோட்டத்தில் எத்தனை ரோஜா. இருவர்

16.  பிருந்தாவனத்தில் இசை நீரூற்றின்  வண்ண நடனம். மைசூரில் வண்ணமயமான கோடை.

17.பேரமைதி வழங்கும் ஃபிலோமினா சர்ச்.

18. திப்புவை வஞ்சத்தால் வீழ்த்திய வாட்டர்கேட் வாயில்.

19. கோபாலன் இன்னோவேஷன்மால், பெங்களூரு

20. பெங்களூரு ஸ்ரீ ஞானாக்ஷி ராஜராஜேஸ்வரி 

21. மடிவாலா ஐயப்பன் கோயிலும் செண்டை மேளமும்.

22.  வித்யாரண்யபுராவில் காளிகா துர்க்கை.

22.  பெங்களூரில் மனம்தொட்ட தொட்டம்மா, சிக்கம்மா,வ(பண)னசங்கரி, வரசித்தி விநாயகர்.

5 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிறப்பான கோயில் தகவல்கள்... நன்றி சகோதரி...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நாம் நம் குழந்தைகளை அல்லது மனதிற்குப் பிடித்தவர்களை பல செல்லப் பெயர்களில் அழைப்பது போல மனதிற்குகந்த தெய்வங்களையும் பல பெயர்களில் விளித்து இன்புறுகிறோம் இல்லையா!! படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. நல்ல தரிசனம்.. தண்ணீர் கேங்களில் தீபமா? ஆச்சரியமாக இருக்கிறதே..!!

G.M Balasubramaniam சொன்னது…

ஒவ்வொரு கோவில் விஜயமும் ஏதாவது ஒன்றைக் கற்பிக்கும் கற்பது அவரவர் மனநிலைக்கேற்றபடி என்றே நினைக்கிறேன்

Thenammai Lakshmanan சொன்னது…

Nandri DD sago

Nandri Geeths. illai thaneer cankalil lemon juice piliyirangka. deepam thattilthan vaikirangka. :)

Aam Bala sir . unmai.


Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...