செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

சொக்கேட்டான் கோயில்

 சொக்கேட்டான்  கோயில், சொற்கேட்ட  விநாயகர் ,சொற்கேட்டான்   கோயில், சொல் கேட்ட ஐயா ஆகிய பெயர்களோடு விளங்கும் விநாயகரை சிலநாள் முன்பு தரிசித்தோம்
Sorkettan koil
காரைக்குடிக்குப் பக்கமுள்ள பள்ளத்தூர் வேலங்குடியில் கோயில் கொண்டிருக்கும் இறைவனே சொற்கேட்ட விநாயகர். இவரின் சன்னதி வாசலில் நின்று என்ன வேண்டிக் கொண்டாலும் அது அப்படியே பலிக்கும் என்பதால் பக்தர்களின் சொல் கேட்ட விநாயகர் என்ற பெயர் பொருத்தமாய் விளங்குகிறது. இதைப் பேச்சு வழக்கில் சொக்கேட்டான் கோயில் = சொக்கட்டான் கோயில்  என்கிறார்கள்.
Sorkettan Vinayagar

இந்தக் கோயிலில் ஒரு சிறப்பம்சம் கருவறை மேற்கூரை தென்னங் கூரையில் வேயப்பட்டது. இவருடன் இருபுறமும் எல்லாக் கோயில்களிலும் ராகு கேது என்ற இரு நாகர்கள் மட்டுமே எழுந்தருளி இருப்பார்கள். இங்கு பக்கத்து மூன்று வீதம் நாகர்கள் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். அதிலும் சிவன், நர்த்தன  கிருஷ்ணன், ஆகியோரும் இருக்கிறார்கள்.
இறைவன் குருந்தமரத்தடியில் எழுந்தருளி உள்ளார். இவருடன்  முனீஸ்வரரும் ஐக்கியமாகி இருக்கிறார். சுற்றுப் பிரகாரத்தில் ராகு கேது முருகன் ஆகியோருக்கு தனிசந்நிதி உள்ளது
செவ்வாய், வெள்ளி, சிவன் ராத்திரி விசேஷமா கொண்டாடப்படுது. பூச்சொரிதல் விசேஷம். விநாயகர் சதுர்த்தி அன்று முத்து அங்கி சாத்தி வழிபடுறாங்க.
நிறையப்பேர் பொங்கல் வைத்து மோதகம் வடை படைத்து வாங்குறாங்க. வேண்டுதல் நிறைவேறியவுடன் அன்னதானம் செய்றாங்க.
அந்தக் குருந்த மரத்தில் பிரார்த்தனைத் தொட்டில்கள் காணப்படுகின்றன. கோயிலுக்கு முன்பும் நிறைய நாகர்கள் அரசமரத்தடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்கள்.
sivan koil 

sivan koil 
மிகப்பெரும் ஊரணி ஒன்று சிறிதளவு தண்ணீருடன் காணப்படுகிறது. இதன் முன்பு ஒரு சிவன் கோயிலும் ஒரு பெருமாள் கோயிலும் இருக்கின்றன.


sivan koil 

Perumal koil 
இவர் முன்னே நிக்கும்போது ரொம்ப பவர் ஃபுல்லா உணர்ந்தேன். மிகவும் அருளாட்சி பெற்ற கோயில் இது.  காரைக்குடிப் பக்கம் வரும் வாய்ப்பு கிடைத்தால் ஒருமுறை சென்று தரிசித்து வாருங்கள். 

11 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வந்து விடுகிறோம்...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அழகான கோவில். தகவல் பகிர்வுக்கு நன்றி.

மாதேவி சொன்னது…

பெயர் நன்றாக இருக்கிறது.

இங்கும் வெளிநாடுகளுக்கு செல்ல விரும்பு கிறவர்கள்நேர்த்தி வைத்து வணங்கும் பிள்ளையார் விசா பிள்ளையார் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

சொற்கேட்ட விநாயகர்!! கண்டிப்பா போயி ஒரு சொற் சொல்லிக் கேட்டுறணும்...நம்ம ஃப்ரெண்ட் ஆச்சே விநாயகர்! படங்களும் அருமை...

Palani Chamy சொன்னது…

பள்ளத்தூர்_காரைக்குடி(வழி:கோட்டையூர்) பள்ளத்தூர் அடுத்த ஊர்வேலங்குடி வழித்தடம் சரியா?

Jeevalingam Yarlpavanan Kasirajalingam சொன்னது…

அருமையான படங்களுடன் சிறந்த பதிவு


நகைச்சுவை எண்ணங்கள் சில...
http://www.ypvnpubs.com/2017/08/blog-post_22.html

Anuradha Premkumar சொன்னது…

படங்கள் அழகு...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

சொற்கேட்டான் விநாயகரைத் தரிசித்தோம். நன்றி.

G.M Balasubramaniam சொன்னது…

நகரத்தார் கோவில்களுக்கு வந்திருந்தபோது இது பற்றி யாரும் தகவல் தெரிவிக்க வில்லை வாழ்த்துகள்

Thenammai Lakshmanan சொன்னது…

Kattayam poivangka DD sago

Nandri Venkat sago

Nandri Madevi. Visa pillaiyar patriya thagavalukkum nandri :)

Nandri Geeths

Aam Palanichamy sir !

Nandri Yarlpavannan sago

Nandri Anu

Nandri Jambu sir

Nandri Bala sir.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

Thenammai Lakshmanan சொன்னது…

ithu nagarathar koil illai Bala sir. ithu nattar koil.

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...