வியாழன், 10 ஆகஸ்ட், 2017

மடிவாலா ஐயப்பன் கோயிலும் செண்டை மேளமும்.

கி கம்

ந க த ர காம்

தி ரி கி ட ந க த ர கம்

ந க த ர கம்

தி கம் தி கம்

த்

தி ரி கி ட ந க த ர கம். என்று ஓங்கி ஒலிக்க ஆரம்பிக்கிறது செண்டை வாத்தியம். இது முதன் முதலில் கணபதி கை என்று வணக்கம் தெரிவிக்க வாசிக்கப்படுவது.

தொடர்ந்து த கி ட என்று சாதகம் தொடருமாம். அங்கே நாம் கேட்ட ஒலி இதை எல்லாம் கலந்து கட்டி இருந்தது.

நெஞ்செல்லாம் அதிர்ந்தது. திரிகிடநகதரகம். திரிகிடநகதரகம். என்று அவர்கள் வாசித்த அரைமணி நேரமும் அங்கே இங்கே அசையமுடியவில்லை.


அதைக் கேட்கக் கேட்க ஒரு மாதிரி தெய்வத நிலை அடைந்து சன்னதம் வந்துவிடும்போலிருந்தது. அவ்வளவு பவர்ஃபுல் வாத்தியம்
துவஜஸ்தம்பம் எல்லாம் அதிர்ந்தது .. ஆர்த்தது. தீபங்கள் நிருத்தியமாடின.

பொதுவாக எனக்குச் செண்டை ஒலி பிடிக்கும், தொலைக்காட்சியில் பூரம் விழாக்களில் காண்பேன். பஞ்சவாத்தியத்துடன் இசைக்கப்படும். ஆனால் இங்கே பக்கத்தில் நின்று பார்த்தது முதல் முறை.

செண்டை மேளம் 300 ஆண்டு பழமை வாய்ந்ததாம். இளம் பலாமரத்தில் செய்யப்பட்டு பசுமாட்டுத்தோலைப் பதப்படுத்தி அத்துடன் ஈரப்பனை அல்லது மூங்கிலைப் பதப்படுத்திக் கட்டி உருவாக்கப்படுவதாம். இதை ஒட்ட பனிச்சை மரத்தின் விதையுடன் கூடிய பசையை உபயோகிப்பார்களாம். வருடத்துக்கு 15 முறை இதை பராமரிப்பு செய்து இழுத்துக் கட்டுவார்களாம்.


வட்டத்தின் விட்டத்தை அளவையாகக் கொண்டு ஆறுவகைச் செண்டைகள் உள்ளன. ஏழுவகை மேளங்கள் உள்ளன. உருட்டு செண்டைதான் முன்னணி வகிக்கும். எனவே ப்ரமாண வாத்தியம்னு அழைக்கிறாங்க. குறிப்பிட்ட கால இடைவெளி கொடுத்து ரிதமிக்கா வாசிக்கப்படும் செண்டை கேட்பதற்கு மிக இனிமை.

கதக்களி, கண்யர்களி, தெய்யம், கூடியாட்டம், யக்ஷகானம் ஆகியவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது.


மடிவாலாவின் பஸ் நிலையத்தை ஒட்டி இந்த அழகுக் கோயில் அமைந்துள்ளது. அன்றைக்கு ஓணம், பூரம் போன்ற நாளாக இருக்கலாம். நினைவில் இல்லை.
பொதுவாகக் கோவை சென்னை போன்ற இடங்களில் ஏகப்பட்ட சந்நிதிகளும் கேரளமரபு வழிப்படி மிகப் பெரிய கோயிலுமாக இருக்கும். ஆனால் இங்கே ட்ராஃபிக் அதிகமான இடத்தில் சின்னக் கோயிலாக இருந்தாலும் தெய்வ அருள் அபரிமிதமாகப் பொழிந்து கொண்டிருந்தது.

போதாதற்கு செண்டை மேளம் வேறு கேட்க வேண்டுமா.
மேளம்மாதிரி இருக்கும் இந்தச் செண்டையைத் தோளில் கட்டி கோயிலில் வாசிப்பதால் இது தேவவாத்தியம் என வலது புறம் மட்டும் தட்டித் தட்டி வாசித்தார்கள். அதனால் வலந்தலை எனப்படுகிறது.

வலது கையில் ஒரு கோலாலும் ( பதிமுகம் அல்லது புளியமரத்தின் தடியாலானது ) இடது கையில் அரிசி மாவு தோய்த்துக் காய்ந்த விரல்களால் வாசிப்பார்களாம்.

தொடர்ந்து வாசித்த அவங்கள்ல மத்தவங்க ஒருகையால வாசிக்க நடுவில் நின்ற ஒருத்தர் மட்டும் ( அரிசிமாவா இல்ல மேளம் அடிக்க அணியும் வஸ்துவா தெரில ) இடதுகையாலயும் சும்மா வெளுத்து வாங்கினார்.வீட்டுக்கு வந்து ரொம்ப நேரத்துக்குப் பின்னாடியும் ரீங்காரம் அடங்கல.
ஆமா சொல்ல மறந்துட்டேன். ஐயப்பன் அழகு கொஞ்ச அமர்ந்திருந்தார். மேளத்தை ரசிச்சதோட அருள் தந்த அவரையும் வணங்கிட்டு வந்தோம். :)
டிஸ்கி:- இவற்றையும் பெங்களூருவில் பாருங்க.

1.  மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.

2.குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)
.
3. லால்பாகில் கோடையைத் தணிக்கும் கீரைகள். 

4. நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. பாகம் 1

5. இன்னும் சில ஒற்றையர்கள். பாகம் 2

6. மஞ்சள் முகமே வருக. (LAL BAGH )

7. குடியரசு/சுதந்திர தினத்தில் லால்பாக்.

8. இன்னும் சில ஒற்றையர்கள் பாகம் 3

9.  காதல் ரோஜாவே. -- பாகம் 4

10. காதல் ரோஜாவே..-- பாகம் 5
 

11. கோடையைக் குளுமையாக்கும் ஒரு கூடைப் பூக்கள்.

12. கழிவுநீரிலும் உயிர்க்கும் கல்வாழைகள்.

13. பிருந்தாவனத்தில் இசை நீரூற்றின் வண்ண நடனம். மைசூரில் வண்ணமயமான கோடை.

14. பணம் கொழிக்கும் பனசங்கரி – சாகம்பரி.

15. என் தோட்டத்தில் எத்தனை ரோஜா. இருவர்

16.  பிருந்தாவனத்தில் இசை நீரூற்றின்  வண்ண நடனம். மைசூரில் வண்ணமயமான கோடை.

17.பேரமைதி வழங்கும் ஃபிலோமினா சர்ச்.

18. திப்புவை வஞ்சத்தால் வீழ்த்திய வாட்டர்கேட் வாயில்.

19. கோபாலன் இன்னோவேஷன்மால், பெங்களூரு

20. பெங்களூரு ஸ்ரீ ஞானாக்ஷி ராஜராஜேஸ்வரி 

21. மடிவாலா ஐயப்பன் கோயிலும் செண்டை மேளமும்.
 

5 கருத்துகள் :

mohamed althaf சொன்னது…

அருமை நண்பரே

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அடி தூள்...!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

தில்லியில் வீட்டின் அருகே இருந்த அய்யப்பன் கோவிலில் பல முறை செண்டை மேளம் வாசிக்க ரசித்ததுண்டு.

த.ம. மூன்றாம் வாக்கு.

Thenammai Lakshmanan சொன்னது…

nandri Mohamed sago

nandri DD sago

nandri Venkat sago

enakku tamil manam varuvathillai. enna seyvaathu ??


வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

G.M Balasubramaniam சொன்னது…

செண்டை மேளத்தினூடே சிங்காரி மேளம் என்றுஒரு ஆட்டம் நான் மிகவும் ரசிப்பது

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...