வியாழன், 24 ஆகஸ்ட், 2017

சில மொக்கைக் குறிப்புகள் :- 8

**நிலவுடன்  உருண்டு
இருளுடன் இணையுமுன்
பெருநெருப்பொன்று
உரசி எழுகிறது தினசரி..
சூரியனாம்.

**நிலவு வராதபோதும்
நட்சத்திரம் இல்லாதபோதும்
இருளும் கருக்கிருட்டும்கூட கைவிட்டபோதும்
தினமும் பரந்து விரிந்த கண்களோடு
நிச்சயம் உண்டு
ஜன்னலோரம் எட்டிப்பார்த்து
அவள் இருப்பை உறுதி செய்யும்
இளஞ்சூட்டு வெய்யில்.

**வண்ணக் காடொன்றில்
கைகாட்டி மரமாய் அலைகிறது
பட்டாம்பூச்சி இறக்கைகளோடு

**வேண்டாத பொருட்களால்
திணறிக் கிடக்கிறது வீடு
மனத்தைப் போல.

**காஃபியைத் தவிர்க்கலாம்
குளிர்பானத்துக்கு மாறலாம்
இனிப்பு தொண்டையை ராவ
எதைக்குடித்தாலும்
கமறும் மனதை என் செய்ய.

**பிரதிகளை
உண்மையெனப் பதியும் உலகில்
கண்காணிப்புகளைக்
கடந்து உலவுகிறது
பிரதிகளுக்குள் பிரதிகள்
நகலுக்குள் நகல்பார்த்து
நகைக்க நினைத்தும்
நாவடைத்துக் கடக்கிறது
அசல்.

**காலி மைதானத்தின்
கால்பந்துகளாய் எங்கோ நோக்கி
உருண்டு கொண்டிருக்கின்றன
அவள் கண்கள்.

பறவையாய் குறுக்கே
பாயும் விரல்கள்
காற்றைக் கீறிக்
கவனம் திருப்புகின்றன.

மூலைப் பள்ளத்தில்
பொதிந்து வீழ்ந்த கால்பந்தாய்
களைத்துத் தனக்குள் வீழ்கின்றன
அவள் கண்கள்

**ஒற்றைச் செடியாய் தனித்திருப்பது பிடித்திருக்கிறது.
எவ்வுயிர்க்கும் வானமும் மழையும் வெய்யிலும் ஒன்றுதானே.

**காதலின் தேடலைக் காலம்கடந்து தெரிவிக்கிறது
சுற்றியலைந்து கூடு திரும்பும் புறாத்தூது.

**கண்களை மறைத்துக் கன்னங்களை நனைக்கும் மழையைப் பிடிக்கிறது
தனிமையில் உதிரும் உப்புநீர்ப்பூக்களைச் சரமாகத் தொடுப்பதால். 

**எது வெருட்டுகிறது உன்னை காதலா காமமா முதுமையா பிணியா இறப்பா
எல்லோருக்கும் நிகழ்ந்ததுதானே உனக்கும் காத்திருக்கிறது.
மனமே ரிலாக்ஸ் ப்ளீஸ் :)

**நெகிழ்ந்த மனதை விட்டுத் தொலை
என்னை நானே மீட்டுக் கொள்வேன்

**எப்போதும் அங்கீகாரத்துக்காக ஏங்கித் தொலைவதைத் தவிர
உருப்படியாக ஏதும் செய்து தொலைக்கலாம்.

**பறவைச் சத்தங்கள் இல்லாமலும் புரிகிறது
ஆலத்தின் மௌனமொழி.

**தேடித் தேடித் தேய்ந்துவிடுகின்றன விழிகள்.
சூன்யத்தில் உருப்பெறுகிறது உன் உருவம்.

**இது தனிமையும் இல்லை வெறுமையும்  இல்லை
அடியெடுத்து வரப்போகும் முதுமையின் ஒரு அங்கம்.

**தேவதைகளுக்குத் தென்றல் என்று பெயர்.
அதிதேவதைகளுக்கு அடைமழை  என்று பெயர்.:)
பிரத்யதி தேவதைகளுக்குப் புயல் என்று பெயர்.  :)

**ஒவ்வொரு வலையாக அறுத்து அறுத்தும்
சுருங்கிக் கொண்டிருக்கிறேன் மையத்தில்.

**உடலுக்குள் உறைந்திருக்கிறது உறக்கம். உடலை விழுத்தாட்டி பொங்கிப் பெருகி இமைகளை மூழ்கடித்து விடியற் பொழுதில் வடிகிறது பூக்களை போல மலர்கின்றன விழிகள் . ஒரு நகரும் தாவரமாய் உயிர்த்தெழுகிறது உடல். 

** மின்னல் அடிக்கும்போதெல்லாம் மண் குதிரைகளுக்கு  உயிர்  வந்துவிடுகிறது. மழைப்புல்லை உண்ண வாயசைக்கின்றன   

சில மொக்கைக் குறிப்புகள். - 1

சில மொக்கைக் குறிப்புகள் - 2.

சில மொக்கைக் குறிப்புகள் :- 3. 

சில மொக்கைக் குறிப்புகள் :- 4.

சில மொக்கைக் குறிப்புகள். - 5.

சில மொக்கைக் குறிப்புகள் :- 6

சில மொக்கைக் குறிப்புகள் :- 7

சில மொக்கைக் குறிப்புகள் :- 8


3 கருத்துகள் :

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

எதைக்குடித்தாலும்
கமறும் மனதை என் செய்ய. // ஹாஹாஹாஹாஹ் அதானே!!

//**காலி மைதானத்தின்
கால்பந்துகளாய் எங்கோ நோக்கி
உருண்டு கொண்டிருக்கின்றன
அவள் கண்கள்.// வாவ்!!! செம!!

//*தேடித் தேடித் தேய்ந்துவிடுகின்றன விழிகள்.
சூன்யத்தில் உருப்பெறுகிறது உன் உருவம். // மிக மிக ரசித்தோம்..

கீதா

G.M Balasubramaniam சொன்னது…

அனுபவித்து எழுதினாற்போல் இருக்கிறது இவை மொக்கைகளா

Thenammai Lakshmanan சொன்னது…

Nandri Geeths :)

Nandri Bala sir :)

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...