வியாழன், 27 ஜூலை, 2017

திண்டல் முருகனின் திருமுக தரிசனம்.திண்டல் முருகனின் திருமுகத்தை அழகு பொலியும் அருள் முகத்தை தரிசனம் செய்யணும்னா நீங்க ஈரோட்டுக்குக் கட்டாயம் வந்தே ஆகணும். மலைமேல் குட்டி முருகன் உங்களை எதிர்நோக்கிக் காத்துக்கிட்டு இருக்கார். 

“முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு முற்றிய வினை தீருமே. “

”கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே என்றொரு சினிமாப் பாட்டு உண்டு. இங்கே ஈரோடு பெருந்துறையிலிருந்து எட்டு கிலோமீட்டரில் குடிகொண்டிருக்கும் குழந்தை வேலாயுதசாமி கோயிலில் இடும்பனும் வணங்கப்படுகிறார். இடும்பனின் மூலம் தமது கோரிக்கைகளைத் தெரிவித்துப் பக்தர்கள் முருகன் அருள் பெறுகிறார்கள்.திண்டல் முருகன் கோயில் சிறு குன்றின்மேல் அமைந்திருக்கிறது. குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்தானே. குன்றுதோறாடல்தானே அவனது திருவிளையாடல்.
மலையடிவாரத்தில் அரசமரத்து விநாயகர், சித்தி விநாயகர் ஆகியோர் தம்பிக்குப் பக்கபலமாய் இருக்க மலைமேலும் விநாயகர், இடும்பர், முருகன் என்று மூவரும் தனித்தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்கள்.

தகப்பன்சாமியின் பின்புறம் காவடி சுமந்தபடி இடும்பனும் இருப்பதைப் பாருங்கள்.அழகென்ற சொல்லுக்கு முருகன் J

முருகன் என்றால் அழகன். இங்கே கோயில் கொண்டுள்ள முருகன் கொள்ளை அழகு. அதிலும் குழந்தை வேலன் அல்லவா கொஞ்சும் அழகோடு இருக்கிறான்.


தரிசனம் நல்லபடியாகச் செய்து அன்னதான வழியில் இறங்கினோம். காலை பத்துமணிதான். அப்பவே மக்கள் வரிசையாக அமர்ந்து காத்திருந்தார்கள். 

மலையில் எங்கோ ஒரு வேல் தெரிந்தது. உடன் அதைப் பார்க்கச் சென்றோம்.முதன் முதலில் முருகன் இருந்த இடம் என நினைக்கிறேன். குட்டி நாகர்கள் சூழக் குட்டி முருகன் வேலுடன் வீற்றிருக்கும் திருக்காட்சி. 

அருள்பாலிக்கக் காத்துக்கொண்டிருந்த அன்பு தெய்வத்தை மனமார தரிசித்தோம். 

விட்டுப் பிரியவே மனமில்லை இந்தக் குட்டி வேலவனை. மனதால் வீட்டிற்கும் செல்ஃபோன் காமிராவால் என் ப்லாகிற்கும் எடுத்து வந்துவிட்டேன். J

இன்னொரு இடத்தில் நாகர் மட்டும்.இறங்கும் வழியில் இன்னொருபுறம் யானையடிப்பாதைபோல் கற்கள் பதித்திருக்கிறார்கள். வயதானவர்களும் படி ஏறச் சிரமப்படாமல் இவ்வழியே வந்து செல்லலாம்.பாத்ரூம் சுத்தமாகப் பராமரிக்கப்படுது. ஆன்மீகத் தலமானாலும் அவசியத் தேவை அல்லவா.ஓம் முருகா ! அதன் பின்னணியில் கோபுரம். நம்ம புகைப்படத் திறமையை அவ்வப்போது காமிக்காட்டி எப்புடீ Jஇந்தக் கோயிலில் இன்னொரு சிறப்பும் உண்டு. கொங்கு நாட்டுக் கோயில்கள் போல தீபஸ்தம்பத்தை ஆலயத்தின் வெளியில் வைத்துக் கட்டியிருக்கிறார்கள். அதனால் திருக்கார்த்திகையின்போது இந்த தீபஸ்தம்பத்திலும் தீபமேற்றி பக்தர்கள் வழிபடுகிறார்கள்.
சுவாமிமலை, குன்றக்குடி, திருத்தணி மாதிரிக் குட்டி மலைதான் என்றாலும் இங்கே செயற்கையாக குட்டிமலை அமைப்பில் கட்டி பைப்புகள் வைத்து (?) அழகூட்டி இருக்கிறார்கள்.வேலும் மயிலும் துணை . வாயிலில் அழகு பொலிய நிற்கும் மயில்.திருவருள் பொங்கும் திண்டல் முருகனைத் தரிசிக்கும் பேறுபெற்றோம்.  

தான தந்தன தானா தனாதன
     தான தந்தன தானா தனாதன
          தான தந்தன தானா தனாதன ...... தனதான

......... பாடல் .........

நாத விந்துக லாதீ நமோநம
     வேத மந்த்ரசொ ரூபா நமோநம
          ஞான பண்டித ாமீ நமோநம ...... வெகுகோடி

நாம சம்புகு மாரா நமோநம
     போக அந்தரி பாலா நமோநம
          நாக பந்தம யூரா நமோநம ...... பரசூரர்

சேத தண்டவி நோதா நமோநம
     கீத கிண்கிணி பாதா நமோநம
          தீர சம்ப்ரம வீரா நமோநம ...... கிரிராஜ

தீப மங்கள ஜோதீ நமோநம
     தூய அம்பல லீலா நமோநம
          தேவ குஞ்சரி பாகா நமோநம ...... அருள்தாராய்

ஈத லும்பல கோலா லபூஜையும்
     ஓத லுங்குண ஆசா ரநீதியும்
          ஈர முங்குரு சீர்பா தசேவையு ...... மறவாத

ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
     சோழ மண்டல மீதே மநோகர
          ராஜ கெம்பிர நாடா ளுநாயக ...... வயலூரா

ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
     சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
          ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ...... லையிலேகி

ஆதி யந்தவு லாவா சுபாடிய
     சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
          ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே.
 


5 கருத்துகள் :

வெங்கட் நாகராஜ் சொன்னது…

கோவில் அழகாக இருக்கிறது. படங்கள் சிறப்பு.

விஸ்வநாத் சொன்னது…

அருமை நன்றி

மாதேவி சொன்னது…

அழகிய முருகன் மனதை இழுக்கிறான்.

G.M Balasubramaniam சொன்னது…

எனக்கு முருகனைப் பிடிக்கும் காரணங்களுடன் பதிவு எழுதி இருக்கிறேன்

Thenammai Lakshmanan சொன்னது…

nandri Venkat sago

nandri Visu sir

nandri Madevi

nandri Bala sir. theriyum :)

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...