திங்கள், 19 ஜூன், 2017

நாகவல்லி நாககன்னியுடன் மங்கள ராகு.

கும்பகோணத்துக்கு அருகில் உள்ள திருநாகேஸ்வரம் சிறந்த ராகு ஸ்தலம் ஆகும். இது நவக்ரஹக் கோயில்களில் ஒன்று. ராகுபகவான் மட்டுமில்லை, இவரோடு ஆதிசேஷன், கார்கோடகன், தக்‌ஷன், அநந்தன் ஆகிய பாம்புகள் சிவனை வழிபட்ட ஸ்பெஷல் தலம் இது.

இங்கே வரும் 27 ஆம் தேதி ராகு பெயர்ச்சிக்காக லட்சார்ச்சனை நடைபெறுகிறது.

காவிரிக்கரையில் அமைந்துள்ள இக்கோயிலில் ஸ்ரீ நாகநாதஸ்வாமி கோயில் கொண்டுள்ளார்.. திருச்சுற்றில் ராகுபகவான் நாகவல்லி, நாககன்னியுடன் எழுந்தருளி உள்ளார்.

ராகு தோஷம் உள்ளவர்கள் இங்கே பாலாபிஷேகம் செய்து வணங்கி வருகிறார்கள். ராகு தோஷம் என்றால் பேரையூர் கூடப்போகக்கூடாதாம். இவர்தான் சுப்ரீம் பவர் உள்ளவராம். இவரைத்தான் வணங்கணுமாம்.

தினப்படியுமே ராகுகாலத்தில் பூஜையும் பாலாபிஷேகமும் நடைபெறுகிறது. இவர் மேல் பொழியும் பால் நீல நிறமாக மாறிவிடுவதாகச் சொல்கிறார்கள்.

500 ரூ, 250 ரூ டிக்கெட்டுகள் உண்டு.

ராகு சன்னதியின் எதிர்த்தாற்போல் உள்ள மாபெரும் ஹாலில் முதலில் 500 ரூ டிக்கெட்காரர்களும் அதன் பின் 250ரூ டிக்கெட்காரர்களும் அமர்ந்துகொள்ளலாம்.

தோஷம் ஏதுமில்லாமல் சைடாக பிரகாரத்தில் வலம் வரும் பக்தர்களும் எட்டி தரிசனம் செய்து கொள்ளலாம்.

அபிஷேகம் ஆராதனை முடிந்ததும் காளாஞ்சியும் மாலையும் தருகிறார்கள். வெளியே காலையில் வாங்கிய ஒரு மாலை & அர்ச்சனைப் பை 250 ரூ. இதையும் நிர்வாகமே கொடுத்து நியாயமான காசை வாங்கிக்கொள்ளலாம்.

500 ரூ டிக்கெட்டுக்கே இம்புட்டுக்கூட்டமா என்று இருந்தது.

இந்த ராகு கேதுவுக்கெல்லாம் உக்கார இடமேயில்லையா.  . இப்பல்லாம் எல்லார் ஜாதகத்திலும் உக்கார்ந்திருக்காப்புல இருக்கு , எல்லாப் புள்ளக ஜாதகத்திலும் உக்கார்ந்து கல்யாணத்தைக் கெடுக்குது  என்று ஒருவர் சொன்னதும் பக்கத்திலிருந்தவர் சொன்னார்., எல்லார் ஜாதகத்திலும் ஏதோ ஒரு கட்டத்தில் ராகு கேது இருக்கத்தான் இருக்கும். அவர்கள் உட்கார்ந்திருக்கும் ஸ்தானம் பொறுத்து வாழ்வில் ஏற்படும் தீமைகளுக்குப் பரிகாரம் செய்யவே இவற்றை ஜோசியர்கள் பரிந்துரைக்கிறார்கள் என்றார்.
கௌதம மகரிஷி, பராசரர், பகீரதன் ஆகியோரும் வழிபட்டிருக்காங்க. கம்பீர ராஜகோபுரம். ஏழு இராஜகோபுரங்களை உடைய ஸ்தலம். பூலோகத்தில் சிறந்தது என்று சிவபெருமானே சொன்ன கோயிலாம் இது.திருநாவுக்கரசர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவராலும் பாடல்பெற்ற ஸ்தலம். அலைமகள், கலைமகள், மலைமகள் ஆகிய முப்பெரும் சக்திகள் ஒன்று சேர்ந்து அருள் பாலிக்கும் இடமாம்.சூப்பர் ராகுவும் சுப்ரீம் கேதுவும் இந்தக் கும்பகோணத்தில் அருகில் உள்ள ஊர்களில்தான் கோயில் கொண்டிருக்கிறார்கள். கேது ஞானகாரன். கீழப்பெரும்பள்ளத்தில் கோயில் கொண்டிருக்கிறார். இங்கேயும் இறைவன் பெயர் நாகநாதஸ்வாமிதான்.
ஈசன் ஷண்பகாரண்யேஸ்வரர், தேவி கிரிகுஜாம்பாள். நாகராஜன் வழிபட்ட ஈசன் எனவே நாகநாத ஸ்வாமி என அழைக்கப்படுகிறார்.
தனிக்கோயிலில் கிரிகுஜாம்பாள் அருள் பாலிக்கிறாள்.


அம்பாள் சுயம்பு, பல மகரிஷிகளும் தேவர்களாலும் பூஜிக்கப்பட்டவள், அபிஷேகம் கிடையாதாம், வருடம் இருமுறை மட்டும் புனுகு சாத்துவார்கள்.

இந்தியாவிலேயே இங்குதான் அம்பாள் காலையில் குழந்தை ரூபமாகவும், மதியம் யவன ரூபமாகவும் மாலையில் 16 கலைகளோடும் அருள்பாலிக்கிறார்ராகு பாம்பின் உடல் கொண்டதால் காலசர்ப்பதோஷம், களத்திர தோஷம், புத்திர தோஷம், சர்ப்ப தோஷம், மாங்கல்ய தோஷம், நீக்கும் ஸ்தலம் இது.  இங்கு பூஜை செய்தால் ராகு தசை ராகுபுத்தி நடப்பவர்களுக்கு ராகு தோஷம் நிவர்த்தியாகும் என்கிறார்கள்.. என்னவோ நல்லது நடந்தால் சரி.

இவர் வழியில் கோயில் கொண்டிருந்த விநாயகர்.


பக்கத்திலேயே உப்பிலியப்பன் கோயிலும் இருக்கிறது.

இந்த 27 ஆம் தேதி அநேகர் திருநாகேஸ்வரத்துக்குப் படையெடுப்பாங்கன்னு தோணுது.

HAVE A GOOD DHARSHAN. :)

3 கருத்துகள் :

G.M Balasubramaniam சொன்னது…

/தினப்படியுமே ராகுகாலத்தில் பூஜையும் பாலாபிஷேகமும் நடைபெறுகிறது. இவர் மேல் பொழியும் பால் நீல நிறமாக மாறிவிடுவதாகச் சொல்கிறார்கள்./ நாங்கள் சென்றபோது அந்தப் பாலாபிஷேகத்தில் பங்கு பெற்றோம் எங்களுக்கு பாலி ந் நிறம் மாறியதாகத்தெரியவில்லை பல கட்டுக் கதைகளில் இதுவும் ஒன்று என்று நினைக்கிறேன்

விஸ்வநாத் சொன்னது…

அருமை. நன்றி.

சின்ன வயசுல (இப்பவும் நான் சின்னப்பையன் தான்) போயிட்டு அபிஷேகம் பண்ணிட்டு வந்திருக்கோம்.

Thenammai Lakshmanan சொன்னது…

IRUKALAM BALA SIR. ATHU NAMBIKKAIYAVUM IRUKALAM. :)

APPIDIYA VISU SIR :p

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...