செவ்வாய், 4 ஏப்ரல், 2017

சில மொக்கைக் குறிப்புகள். - 5.

**சிற்றில் கலைத்து
சிறுதினை மேய்ந்து
சிறு உயரம் பறந்து
பாலை காய்கிறது
பெடையொடு செம்போத்து.

**மாறும் வட்டங்கள்
வாழ்வின்
வளர்ச்சிக் கட்டங்கள்.

**ப்ளாஸ்டிக் அரிசி
ப்ளாஸ்டிக் முட்டை
ப்ளாஸ்டிக் இறைச்சி
ப்ளாஸ்டிக்கில் தண்ணீர் போதும் நமக்கு
பொறுப்பற்ற திமிர் நம் சொத்து.
விதைத்தவன் வெய்யிலில் செத்தால் நமக்கென்ன
வினையை அறுப்போம் பின்னொருநாள் நிச்சயமாய்

**என் அடையாளமற்ற இடங்களில்
உன் அடையாளம் தேடி அலைகிறேன்
பின் தொடர்கிறது நமது காதல்.

**தேடாமல் தேடுகிறேன்
தொடாமல் தொடுகிறேன்
தேடலும் தொடலும் அறியாமல்
புன்னகைக்கிறாய்
என் எழுத்து சுவை என்பாயென
எழுதி எழுதி அனுப்பாமல்
நானே சுவைத்து அழிக்கிறேன்
தினம் தினம் உன் மனதில்
என்னவெனக் கேட்கிறது முகநூல்.
உன் முகம்தான் எனச் சொல்லமுடியுமா


**கன்னத்தோடு கன்னமிழைத்து
எச்சில் காய்கிறது
இதழ்களில் வீணான முத்தம்


**தட்டாமாலை சுற்றி இறக்குகிறாய்
ஆடு நனைகிறதென
ஓநாய் அழுகிறதெனத் தெரிந்தும்
விழுந்து விடுகிறேன்.

**முகம் திருப்பி வரட்டுக் குரலில்
பதினைந்து நாளாகும் என்கிறேன்
முகம் கோணி முரட்டுக் குரலில்
மூன்று மாதமாகும் என்கிறாய்
உண்மையோ பொய்யோ
அதன்பின்
வார்த்தைப் புனலில் வீழ்ந்தெழுகிறோம்
தனிமைத் தழல் நீறு பூக்கத் தொடங்குகிறது.
கொஞ்ச நேரம் ஒதுங்கி நிற்கிறது கோபம்
கடந்துவிடுவோமாவெனத் தயங்கி நிற்கிறது தாபம்.

**குழந்தைமொழி கொண்டு
பதம் பிரிக்கிறோம்
அபிநயிக்கிறது இரவு.

**கோட்டை கொத்தளங்கள்
சிதறிக் கிடக்கின்றன.
இடுவல்களின் உள்ளே
பத்திரமாயிருக்கிறது
சிறுகுருவிகளின் கூடு.

டிஸ்கி :- இதையும் பாருங்க.

சில மொக்கைக் குறிப்புகள். - 1

சில மொக்கைக் குறிப்புகள் - 2.

சில மொக்கைக் குறிப்புகள் :- 3. 

சில மொக்கைக் குறிப்புகள் :- 4.

சில மொக்கைக் குறிப்புகள். - 5.

5 கருத்துகள் :

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

என்னது மொக்கைக் குறிப்புகளா....என்ன அருமையா இருக்கு....வாவ்..லாஸ்ட் செம....அத்தனையும் ரசித்தோம்.....

ramanathan venkataraman சொன்னது…

வணக்கம். நான் ஸ்ரீநாத். எழுத்தாளன். ஜெமினி சினிமா ஸ்ரீநாத் என்று அழைப்பர். வயது 68. தற்சமயம் பாக்யராஜ் சாரின் பாக்யா பத்திக்கையில் இருக்கிறேன்.நம் வலைப்பூ நண்பர்களுக்கு உதவி செய்ய கடமைபட்டிருக்கிறேன். அன்புடன் ஸ்ரீநாத்.srrinath@ yahoo.com.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நன்று. தொடரட்டும் குறிப்புகள்.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி துளசி சகோ

நன்றி ஸ்ரீநாத் சார் !

நன்றி வெங்கட் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…


வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...