வெள்ளி, 20 ஜனவரி, 2017

மகா கணபதி ஹோமமும் பூரணகும்ப மரியாதையும். - பிள்ளையார்பட்டி.

 கற்பக மூர்த்தி கற்பக மூர்த்தி கற்பக மூர்த்தி சரணம். பிள்ளையார்பட்டி பற்றிக் கேள்விப்பட்டிராதவர் இருக்கமுடியாது. முழுமுதற் கடவுள் பிள்ளையார் .சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்பு பெருபரணன் என்ற பாண்டிய மன்னனால் அமைக்கப்பட்ட குடைவரைக்கோயில் இது.

திருவீசபுரம்/திருவீசர்நகர் என்று அழைக்கப்படும் இத்தலத்தில் விநாயகர் கற்பக விநாயகர் என்றும் தேசி விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார். மிகப் பிரம்மாண்டமான கண்கவர் விநாயகரை வலம் வருவதானால் அவர்திரு உரு அமைந்துள்ள மலையோடு சேர்த்துப் பெரும்பிரகாரம்தான் வரவேண்டும். மருதீசர் என்னும் அர்ஜுனவனேஸ்வரர் & வாடாமலர் மலர்மங்கையும் அருள்பாலிக்கிறார்கள்.

இங்கே ஓவிய மண்டபத்தில் இருக்கும் விநாயகரின் கண்கள் எங்கே சென்றாலும் நம்மைப் பார்ப்பது போலே அமைந்திருக்கும். கிழக்கு வடக்கு என்று இரு கோபுரங்கள் உண்டு. விநாயகர் சதுர்த்தி விசேஷம். ஏன் ஆங்கிலப் புத்தாண்டு  அன்று உலகமே திரண்டு இவரிடம் ஆசி வேண்டி நிற்கும்.

பிள்ளையார்பட்டியில் பிரகாரத்தில் ஒரு குட்டிக் குன்று இருக்கும். சின்னப் பிள்ளையில் அதில் ஓடி ஏறி விளையாடுவது எங்கள் பொழுது போக்கு :)

சிதம்பரத்தில் நடராஜரின்  ”குஞ்சிதபாதம்” என்ற குட்டி மாலை கிடைப்பது விசேஷம். அதேபோல் பிள்ளையார்பட்டிக்குச் சென்றமுறை சென்றிருந்தபோது எங்கள் மகனுக்கு ’தோமாலை’  என்ற விநாயரின் மாலை ( ஸ்பெஷல் மாலை ) கிடைத்தது. விநாயகர் திருவுருவம் மலையோடு செதுக்கப்பட்ட ஒன்று என்பதால் மாலையைக் கழுத்து வழி அணிவிக்க முடியாது. இரு தோளிலும் பகுதி பகுதியாக ஆனால் முழுமையான மாலையாக அணிவிப்பார்கள். அதைப் பார்க்கவே அழகாக இருக்கும் :). அந்த மாலையின் ஒரு தோள்பகுதி மாலைதான் தோமாலை. அது கிடைத்தது குறித்து மகிழ்ச்சி அடைந்தோம் :)
இங்கே பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் நகரத்தார் ட்ரஸ்ட் என்று ஒன்று உள்ளது. தினமும் இங்கே காலை மதியம் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கும் கணபதி ஹோமம் செய்பவர்களுக்கும் , பிறந்தநாள் திருமணநாள் கொண்டாடுபவர்களுக்கும் உணவு வழங்கப்படுகிறது.


திருமணம் , சஷ்டிஅப்தபூர்த்தி, சதாபிஷேகம், பீமரத சாந்தி, கனகாபிஷேகம் செய்துகொள்பவர்கள் இன்னொரு விடுதியான பெண்டிர் விடுதியில் செய்து கொள்வார்கள்.
உறவினர் ஒருவர் தனது ஐம்பத்திஒன்பதாவது பிறந்தநாளில் கணபதி ஹோமம் செய்து கொண்டபோது எடுத்த புகைப்படங்கள். காமிராவில் புகை படிந்தது போக நல்லா வந்த மீதி இது. :) :) :) அவ்ளோ பெரிய இடம், அவ்ளோ பெரிய ஹோமம். எல்லாமே பிரம்மாண்டம் கணபதியின் முன்பு.
கணேச பஞ்சரத்னம்.

1. முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்
    கலாதராவ தம்ஸகம் விலாஸி லோக ரக்ஷ்கம்
    அநாயகைக நாயகம் விநாசிதேப தைத்யகம்
    நதாசுபாசு நாசகம் நமாமிதம் விநாயகம்

2. நதேதராதி பீகரம் நவோதி தார்க்க பாஸ்வரம்
    நமத் ஸுராரி நிர்ஜரம் நாதாதிகாப துத்தரம்
    ஸுரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்
    மஹேச்வரம் த மாச்ரயே பாரத்பரம் நிரந்தரம்

3. ஸமஸ்த லோக சங்கரம் நிரஸ்ததைத்ய குஞ்சரம்
    தரேதரோதரம் வரம் வரேப வக்த்ர மக்ஷரம்
    க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்
    மனஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமிபாஸ்வரம்

4. அகிஞ்சனார்த்தி மார்ஜனம் சிரந்தனோக்தி பாஜனம்
     புராரி பூர்வ நந்தனம் ஸுராரி கர்வ சர்வணம்
     ப்ரபஞ்ச நாச பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம்
     கபோலதான வாரணம் பஜே புராண வாரணம்

5. நிதாந்த காந்தி தந்தகாந்த மந்தகாந்த காத்மஜம்
    அசிந்த்யரூப மந்த ஹீன மந்தராய க்ருந்தனம்
    ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்த மேவ யோகிநாம்
    தமேகதந்த மேவதம் விசிந்தயாமி ஸந்ததம்

6. மகாகணேச பஞ்சரத்ன மாதரேண யோன்வகம்
    ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதி ஸ்மரன்கணேச்வரம்
    அரோகதா மதோஷதாம் ஸுஸாதிஹிதீம் ஸுபுத்ரதாம்
    ஸமாஹிதா யுரஷ்ட் பூதீ மப்யுபைதி ஸோசிராத்.

சேர்ந்து சொன்னேன்.

ருணஹர கணேச ஸ்தோத்ரம் (கடன் தீர)

************************************************************************ 
ஸி சிந்தூர வர்ணம் த்விபுஜம் கணேசம்


லம்போதரம் பத்மதலே நிவிஷ்டம்


ப்ரஹ்மாதி தேவை: பரிஸேவ்ய மானம்  

ஸித்தைர்யுதம் தம் ப்ரண மாமி தேவம்
ஓம்! ஓம்! ஓம்!
 
1. ஸ்ருஷ்ட்யாதௌ ப்ரஹ்மணாஸம்யக்பூஜிதா: பலஸித்தயே

ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே.
ஓம்! ஓம்! ஓம்! 

2. த்ரி புரஸ்ய வதாத் பூர்வம் சம்புநா ஸம்யகர்ச்சித:

ஸதைவ பார்வதீபுத்ர: ருணநாசம் கரோது மே.ஓம்!ஓம்! ஓம்!


3. ஹிரண்யகச்யபாதீனாம் வதார்த்தே விஷ்ணு நார்ச்சித:
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே.

ஓம்!ஓம்! ஓம்!

4. மஹிஷ்ஸ்ய வதே தேவ்யா கணநாதா: ப்ரபூஜித:
ஸதைவ பார்வதீபுத்ர: ருணநாசம் கரோது மே.

ஓம்!ஓம்! ஓம்!

5. தாரகஸ்ய வதாத் பூர்வம் குமாரேண ப்ரபூஜித:
ஸதைவ பார்வதீபுத்ர: ருணநாசம் கரோது மே.

ஓம்!ஓம்! ஓம்!
6. பாஸ்கரேண கணேசோ ஹி பூஜிதஸ்ச்ச விசித்தயே
ஸதைவ பார்வதீபுத்ர: ருணநாசம் கரோது மே.

ஓம்!ஓம்! ஓம்!

7. சசிநா காந்தி விவிருத்யார்த்தம் பூஜிதோ கணநாயக:
ஸதைவ பார்வதீ புத்ர: ருண நாசம் கரோது மே.

ஓம்!ஓம்! ஓம்!

8. பாலநாய சதபஸாம் விச்வாமித்ரணே பூஜித:
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே.
இதம் ருண ஹரம் ஸ்தோத்ரம் தீவ்ர தாரித்ர்ய நாசனம்
ஏகவார் படேந்நித்ய வர்ஷமேகம் ஸமாஹித:
தார்த்ர்யம் தாருணம் த்யக்த்வா குபேரஸமதாம் வ்ரஜேத்.

ஓம்!ஓம்! ஓம்!

-- நன்றி ஓம் கஷ் த்ம்.

ஆனால் சிலார்ைகள் முடிவில் விட்டுப் போய் இருப்பு போல் இருக்கு. ெரிந்த அளில் எழுகிேன். 

ிரஸ்பி ிர் பத் 
அஸ்யை வாயங்க்யாமி புரச்சிணீரிம்
வக்‌ஷாம்யர்த் சம்யக் வஞ்சிம் ாப்னுயத்
ப்ப்ரிசாசானாம் நாசம் ஸ்மிரி மத்ர    
 
காராம்பசுவுக்கு தீபாராதனை.கோபூஜை.
பூர்ணாகுதி முடிந்து பூரணகும்ப மரியாதையோடு கோயிலுக்குக் கிளம்பல்.
பரிவட்டம் சுற்றிப் பூரணகும்ப மரியாதையோடு கணபதி மண்டபத்திலிருந்து விநாயகர் சந்நிதிக்குச் செல்கிறார்கள். எத்தனை விளக்குகள் அவர் முன்பு . ஆன்ம ஒளிப்பிரகாசம். அங்கே அருமையான தரிசனம் முடிந்து விருந்து முடிந்து கிளம்பி வந்தோம்.


பிள்ளையார்பட்டி பற்றி முன்பே சில படங்கள் பகிர்ந்திருந்தாலும் இப்ப ஏன் என்று கேக்குறீங்களா. ஏன்னா வரும் மே மாதம் ஒன்றாம் தேதி கும்பாபிஷேகம் . அதைத் தெரிவிக்கவும் அதுல கலந்துக்க அழைக்க வேண்டியும்தான் இந்த இடுகையைப் போட்டிருக்கேன்.

/////அருள்மிகு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருக்கோயில் கும்பாபிஷேகம் ஹேவிளம்பி வருஷம் சித்திரை மாதம் 18ம் தேதி திங்கட்கிழமை காலை 9. மணிக்கு மேல் 10.30க்குள் நடைபெறும். 1-5-2017./////

-- உறுதி செய்யப்பட்ட  வாட்ஸப் தகவல். 

6 கருத்துகள் :

Nagendra Bharathi சொன்னது…

அருமை

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

’திருநாளைப்போவார்’ என்ற நாயன்மார் போலவே, பிள்ளையார்ப் பட்டிக்கு இன்னும் நம்மால் போக முடியவில்லையே என்ற மனக்குறை ஒரு ஓரமாக எனக்கு என் மனதில் இருந்து வந்தது.

இந்தத்தங்களின் பதிவின் மூலம் அக்குறை நீங்கிப் போய் விட்டது.

படங்களும் பதிவும் அருமை. பகிர்வுக்கு நன்றிகள், மேடம்.

G.M Balasubramaniam சொன்னது…

நகரத்தார் கோவில்கள் ஒன்பதுக்கும் சென்றபோது பிள்ளையார் பட்டிக்கும் சென்றிருக்கிறோம்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல பகிர்வு. நன்றி.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி நாகேந்திர பாரதி சகோ

அஹா ! நன்றி விஜிகே சார்.

மிக நல்லது பாலா சார்

நன்றி வெங்கட் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...