எனது பதிமூன்று நூல்கள்

திங்கள், 23 ஜனவரி, 2017

பசு ஸ்தோத்திரமும், நட்சத்திரக் கோயில்களும், திருவோடு மரமும்.


சிற்பவேலைப்பாடு மிக்க கோயில்களில் ஒன்று மாத்தூர்க் கோயில். ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு கல்லும் கதைசொல்லும்வண்ணம் செதுக்கப்பட்டிருக்கும். இங்கே ஐநூற்றீசுவரர், பெரிய நாயகி அம்பாளோடு மகிழமரத்தடி ஆனந்த முனீஸ்வரரும் அழகுற அருள்பாலிக்கிறார்.


இக்கோயில் கும்பாபிஷேகம் ஆன வருடங்கள் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன.

பொதுவாக பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒவ்வொரு கோயிலிலும் மராமத்து செய்யப்பட்டுக் குடமுழுக்கு நடைபெறும்.

இங்கே 1949 இலும், அதன் பின் 2002 இலும்  2015 இலும் முறையே திருக்குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.

ஹிரண்யனை அழித்த நரசிசிம்மரை சாந்தப்படுத்தத் தோன்றிய சரபேஸ்வரர்.


பிரதட்சணம் வரும்போது நட்சத்திரக் கோயில்கள் பற்றிய விபரமும் இந்த பசு ஸ்தோத்திரமும் படித்தேன். பகிரத் தோன்றியது உடனே எடுத்தேன் :)

பசுவின் உடலிலே ( காமதேனு ) அனைத்து தேவர்களும், தெய்வங்களும் இருப்பதாக ஐதீகம். 


பசு ஸ்தோத்திரம்

காலமே எந்திரிச்சி, கண் கழுவி, பால் கறந்து, ஆதிசிவன்
அருளாலே அச்சுதனை வேதபுராணம் படிச்சபடி முழத்தம்
வில்லடி அம்மன் பிறந்த அமிர்தம் உண்டாகும்.
பசு வருட, கொம்பிலே பருவதாபத் தினியாள் உறவாட,
பசு வருட, கண்ணிலே கர்ணர் உறவாட
பசு வருட, முகத்திலே முருகப் பெருமாள் உறவாட
பசு வருட, கழுத்திலே காசி விஸ்வேசர் உறவாட
பசு வருட, முதுகிலே மும்மூர்த்தி உறவாட
பசு வருட, வயிற்றிலே மஹேஸ்வரர் உறவாட
பசு வருட, கால்களிலே, காளாத்திரி நாதர் உறவாட
பசு வருட, வாலியே வாகீஸ்வரர் உறவாட
பாலிலே பாலகோபாலன் உறவாட
பசு வருட, பீச்சிய பாலிலே பெருமாள் உறவாட
பசு வருட, காய்ச்சிய பாலிலே கர்ணர் உறவாட
கடைஞ்செடுத்த வெண்ணையிலே
லெட்சுமண பெருமாள் உறவாட
சாணங்கத்திலே சந்தன நங்கை உறவாட
கோமயத்திலே குந்திதேவி உறவாட
தரைகூட்டி சாணம் இட்டார் பலன் பெறுவார்
தரை மெழுகி சோறு உண்ணா பலன் பெறுவார்
உப்பிலாச் சோறு உண்ணா பலன் பெறுவார்
மற்ற மற்ற மற்ற ஒரு சந்தி பிடித்தார் பலன் பெறுவார்
சோமவாரம், சுக்கிரவாரம் பிடித்தார் பலன் பெறுவார்
எட்டில் ஒரு கிழமையிருந்தா பலன் பெறுவார்.

{{{{{-- முன்பு எல்லாம் சாணம் கலந்துதான் வாசல் தெளிப்பார்கள். அது மிகச் சிறந்த கிருமி நாசினி என்பார்கள். சிறிய குடிசை வீடுகளும் சாணியால்தான் மெழுகப்பட்டிருக்கும். அது கோயமுத்தூர் பக்கம் பூசப்படும் விஷப் பவுடர் சாணி அல்ல.

மேலும் நாட்டுப் பசுக்கள் தரும் ஏ 2 பால்தான் சிறந்தது என்கிறார்கள். அதற்காக வேண்டியே முடிந்தவர்கள் மாடு வளர்க்கலாம். ( ரங்க்ஸின் அலுவலக இன்ஸ்பெக்‌ஷனில் ஒருவர் தான் வளர்க்கும் நாட்டு மாட்டைக் காட்டி இது இரண்டரை லட்சம் விலை. இது குறைவாகத்தான் பால் கறக்கும். இதனுடைய கால் லிட்டர் பால் மற்ற ஜெர்சி போன்ற பசு கறக்கும் இரண்டு லிட்டர் பாலை விட சத்தானது என்றாராம் ! }}}}}

இங்கே 27 நட்சத்திரங்களுக்கும் உரிய விருட்சம் நடப்பட்டுள்ளது. அது போக  திருவோடு மரம் ஒன்றும் இருக்கிறது. !
இதுதான் திருவோடு மரம்.
இந்த மாத்தூர் நகரவிடுதி மிகப் பிரம்மாண்டமானது. சகல வசதிகளும் நிரம்பியது. சஷ்டிஅப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் செய்து கொள்பவர்கள் இங்கே செய்து கொள்வார்கள். டிஸ்கி :- இதையும் பாருங்க

1.விருட்சங்களை நடுவோம் ! வனவாழ்வியல் காப்போம். !

2.16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும். 

  3.பசு ஸ்தோத்திரமும், நட்சத்திரக் கோயில்களும், திருவோடு மரமும்.


5 கருத்துகள் :

வெங்கட் நாகராஜ் சொன்னது…

படங்களும் தகவல்களும் அருமை.

Nagendra Bharathi சொன்னது…

அருமை

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

இதுவரை நான் அறிந்திரா செய்தியைக் கண்டேன். புகைப்படங்கள் அருமை.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி வெங்கட் சகோ

நன்றி நாகேந்திர பாரதி சகோ

நன்றி ஜம்பு சார்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...