சனி, 31 டிசம்பர், 2016

முத்து நகரில் மும்மூர்த்திகளுடன் ஸ்வர்ண விநாயகர்.

இலுப்பைக்குடிக்குச் செல்லுமுன்பு முத்து நகரில் ஒரு விநாயகர் கோயில் மண்டலாபிஷேகத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டியது. சென்றமாதம் நடந்த கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள முடியவில்லை.எனவே மண்டலாபிஷேகத்தில் கலந்து கொண்டோம்.

அலமு வீடியோஸ் திரு வெங்கடாசலம் அவர்கள் பலவருடங்களுக்கு முன்பு எழுப்பிய கோயில் இது. இதற்குக் கும்பாபிஷேகம் என்று அழைத்திருந்தார்கள். ஆனால் மண்டலாபிஷேகத்தன்றே மதியம்தான் சென்று தரிசித்தோம்.

வருபவர்களுக்கு காளாஞ்சி கொடுக்கப்பட்டவிதம் அற்புதம். ( காளாஞ்சி என்றால் அர்ச்சனை செய்த தேங்காய் பழத்தை வந்திருந்தவர்களுக்குத் தாம்பூலமாகக் கொடுப்பது. சொல்லிக் கொண்டு செல்லும்போது கொடுக்கும் பிரசாதம். ) வருபவர்கள் எல்லாம் அர்ச்சனை செய்ய முன் ஏற்பாட்டுடன் வருவதில்லை. பக்கத்தில் கடைகள் ஏதும் இல்லை.

வெங்கடாசலம் அவர்கள்  அர்ச்சகர்களிடம் முன்பே தெரிவித்திருந்தபடி ஒரு சில்வர் பேசினில் தேங்காய் பழம் வெற்றிலை பாக்கு, சூடம் ஊதுபத்தி ஆகியன வைத்து வருபவர்களிடம் பேர் நட்சத்திரம் கேட்டு அர்ச்சனை செய்து கொடுத்தார்கள். வந்தவர்களுக்கும் மகிழ்ச்சி & திருப்தி. !
அங்கேயே காலை உணவும் ( ஏழுவகைப் பலகாரம், மதிய உணவும் வழங்கப்பட்டது. கோயில் முன்பக்கம் இரட்டை ஷாமியானா போடப்பட்டு அழகாக டேபிள் சேர் போட்டுப் பரிமாறினார்கள், மதிய உணவும் ஏழு காய் கறிகளுடன் வடை பாயாசம் கட்லெட், அப்பளம், சாம்பார் சாதம் புளி சாதம், கெட்டிக் குழம்பு, சாம்பார், இளங்குழம்பு, ரசம், தயிர் , ஊறுகாய், சிப்ஸ்  என கிராண்டாக இருந்தது.

கோயில் கோபுரத்தில் முன் பக்கம் கிழக்குப் பக்கத்தில் ஸ்வர்ணத்துக்கு அதிபதி லெக்ஷ்மி அருள் பாலித்தார்.
உள்ளே கருவறையை எடுக்கத் தயக்கம். அங்கே ராகு கேது சூழ விநாயகர் வெள்ளிக் கவசத்தில் சாமந்திப்பூமாலைகளுடன் சந்தனம் குங்குமத்தில் ஜொலித்தார்.


கோபுரத்தின் தென்புறத்தில் தட்சிணாமூர்த்தியும், மேற்குப் புறத்தில் விஷ்ணுவும்.
வடக்குப் புறத்தில் நான்முகன் பிரம்மனும் காட்சி அளித்தார்கள்.
தென்னைமரக்கன்றுகள், தென்னங்கீற்றுகள் சூழ ஒரு நந்தவனத்தில் அமைந்திருந்தது கோயில்
உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு. அங்கே அநேகமாக எல்லா உறவினர்களையும் நண்பர்களையும் சந்தித்தேன்.

அங்கே அபிஷேகம் ஆகும் நீர் கோயில் நந்தவனத்துக்குப் போகும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறது.பரந்து விரிந்திருந்த எல்லாப் பூச் செடிகளும் அழகாக தனித்தனிப் பாத்திகளில் சிமிண்ட தளங்கள் சூழப் பராமரிக்கப்படுவதோடு பிள்ளையார் பக்தர்கள் வருகைக்காக கயிறு கொண்டு இழுத்துக் கட்டப்பட்டிருந்தன.

மிக அழகான கோயிலில் மும்மூர்த்திகளையும் ஸ்வர்ண விநாயகரையும் தரிசித்து அகமும் முகமும் மலர வீடு வந்து சேர்ந்தோம். :) வரும் புத்தாண்டும் இந்த மலர்ச்சியைத் தொடர வைக்கட்டும். 
 
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ! வாழ்க வளமுடன், நலமுடன், பல்லாண்டு !.

10 கருத்துகள் :

Dr B Jambulingam சொன்னது…

புத்தாண்டில் விநாயகரைக் கண்டோம். நன்றி.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்....

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அழகான கோவில்....

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு தின நல்வாழ்த்துகள்.

Jeevalingam Yarlpavanan Kasirajalingam சொன்னது…

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

பரிவை சே.குமார் சொன்னது…

படங்கள் அழகு அக்கா...

இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

G.M Balasubramaniam சொன்னது…

முத்துநகர் என்றால் தூத்துக்குடிதானே

மாதேவி சொன்னது…

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஜம்பு சார்

நன்றி டிடி சகோ

நன்றி வெங்கட் சகோ

நன்றி யாழ்பாவண்ணன் சகோ

நன்றி ஜெயக்குமார் சகோ

நன்றி குமார் சகோ

இல்லை பாலா சார் இது காரைக்குடிக்கு அருகில் உள்ள இலுப்பைக்குடி & அரியக்குடிக்கு நடுவில் உள்ள ஊர்.

நன்றி மாதேவி

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...