திங்கள், 7 நவம்பர், 2016

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்.

கோபுரம் (கோயில்)

இந்த இணைப்பில் கோயில் கோபுரங்களைப் பற்றிப் பார்க்கலாம். கோபுர தரிசனம் என்பது இன்றியமையாத ஒன்று. கோயிலுக்குச் செல்ல இயலாவிட்டாலும் கோபுரத்தைப் பாத்துக் கன்னத்தில் போட்டுக் கொள்வதுண்டு. கோயிலின் ஆறுகாலப் பூசைப் பொழுதுகளில் இல்லத்திலிருந்தபடியே கோபுர தரிசனம் மட்டுமே கண்டு வணங்குபவர்களும் உண்டு. மிகப் பெரும் கோபுரங்கள் விமானம் என்று அழைக்கப்படுகிறது. ( டவர்ஸ், ஸ்தூபி, போன்றவையும் கோபுரங்கள்தான்  ஆனால் இங்கே கோயில் கோபுரம் மட்டும் குறிப்பிட்டுள்ளேன். )

தென் தமிழகத்தில்தான் பெரும்பாலும் கோபுரங்கள் சிறப்பான சிற்ப அமைப்போடு இருக்கின்றன. கல்லால் செய்யப்பட்டவை. மேலும் ஒரு நிலைக் கோபுரத்தில் இருந்து பதினாறு நிலைக் கோபுரம் வரை உள்ளன. பதினாறு கோபுரங்கள் அமைந்த கோயிலும் உண்டு.

கோபுரத்தைப் பார்க்கும்போதெல்லாம் கடவுள் நினைவுக்கு வருவார் என்பதால் கோபுர தரிசனம் கோடிப்புண்ணியம் என்றாயிற்று.

இது கோயிலூர் கோயில் கோபுரம்.

  
இது வைரவன்பட்டி கோயில் கோபுரம்.

இதுவும் .

இது கோயிலூர் முன் பகுதியில் உள்ள புராதன கோயில் கோபுரம்.
சாஸ் பகூ கோயில் கோபுரம் வீட்டில் இருந்த ஒரு புகைப்படத்தில். ( குவாலியரில் இருக்கு )

இது காரைக்குடி நகர சிவன் கோயில்
இது ஜெயங்கொண்டம் கோயில்.
இது மருதமலை..
அதே மருதமலையில் முருகன் சன்னதி படியில்.
இது காரைக்குடி செக்காலை நகர சிவன் கோயில் கோபுரம்
இங்கே எல்லாம் பெரும்பாலும் மூன்று நிலை ஐந்து நிலைக் கோபுரங்கள் மட்டுமே.

காரைக்குடி  சிவன் கோயில்.


உள் ப்ரகாரத்தில். இங்கே மொத்தம் ஒன்பது கோபுரங்கள் உள்ளன.

வீர சேகர உமையாம்பிகை கோயில் சாக்கோடை. புதுவயல்


இதையும் பாருங்க. :- 

கோபுர தரிசனம். 


5 கருத்துகள் :

Dr B Jambulingam சொன்னது…

கோபுர தரிசனம் கண்டேன். கருவறைக்கு மேலே உள்ள அமைப்பினை விமானம் என்றுதான் கூறவேண்டும். அவ்வாறு உள்ளது கோபுரம் அல்ல என்பதைத் தெரிவித்துககொள்கிறேன்.

Nat Chander சொன்னது…

aamam gopura dharisanam kodi punniyamthan..

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை

Thenammai Lakshmanan சொன்னது…

திருத்தியமைக்கு நன்றி ஜம்பு சார்.

நன்றி சந்தர்

நன்றி ஜெயக்குமார் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...