வியாழன், 27 அக்டோபர், 2016

ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம ஸ்தோத்திரம் பாராயணம்.

என் உறவினர் ஒருவர் இல்லத்துக்கு ஒரு நாள் மாலை சென்றிருந்தோம். அங்கே  அன்று லலிதா சகஸ்ரநாம ஸ்தோத்திரம் பாராயணம் செய்தார்கள்.வேறு ஊர்களிலிருந்து வந்திருந்த தோழியர் குழாமுடன் பாராயணம் செய்தது மகிழ்ச்சியாக இருந்தது. கோரஸாக மந்திரம் சொல்லும்போது கேட்கும் ஒலி இனிமையானது. அவ்வப்போது வீட்டில் படித்திருக்கிறேன் என்றாலும் சமஸ்கிருதம் என்பதால் ஓரிரு இடங்களில் உச்சரிப்பில்  பிழை வந்துவிடக் கூடாதே என்று மெதுவாக வாசித்தேன். 

ஹயக்ரீவர்  இந்த சகஸ்ரநாமத்தை அகஸ்தியருக்காக    உபதேசித்திருக்கிறார். அம்பிகையின் (சகஸ்ர) ஆயிரம் நாமங்கள் இதில் இடம் பெற்றிருக்கின்றனவாம். இதை ஒரு முறை லாசரா புகழ்ந்து எழுதியதைப் படித்திருக்கிறேன். ஒவ்வொரு வார்த்தையையையும் ஆத்மசுத்தியுடன் ஸ்பஷ்டமாக உச்சரிக்கும்போது ஒவ்வொரு பெயர் சொல்லும்போதும் தேவி பிரத்யட்சமாவதை உணரலாம். மிகுந்த சக்தி வாய்ந்த மந்திரம் இது. ஸர்வ  யந்த்ராத்மிகா   ஸர்வ   
                                  தந்த்ரரூபா  மநோந்மநீ

 மாஹேச்வரீ   மஹாதேவீ  
                          மஹாலக்ஷ்மீர்  ம்ருடப்ரியா   || 53  

மஹாரூபா   மஹாபூஜ்யா  மஹாபாதக  நாசிநீ  | மஹாமாயா  மஹாஸத்வா
                              மஹாசக்திர்  மஹாரதி: ||  54 

மஹாபோகா   மஹைச்வர்யா 
                               மஹாவீர்யா   மஹாபலா  |
மஹாபுத்திர்    மஹாஸித்திர்  
                              மஹாயோகேச்வரேச்வரீ  ||  55

மஹாதந்த்ரா   மஹாமந்த்ரா 
                              மஹாயந்த்ரா   மஹாஸநா   |
மஹாயாக   க்ரமாராத்யா 
                               மஹாபைரவ  பூஜிதா || 56

மஹேச்வர  மஹாகல்ப  
                          மஹாதாண்டவ   ஸாக்ஷிணீ  |
மஹாகாமேச   மஹிஷீ   மஹாத்ரிபுரஸுந்தரீ  || 57
சதுஷ்ஷஷ்ட்  யுபசாராட்யா 
                           சதுஷ்ஷஷ்டி   கலாமயீ  |
மஹாசதுஷ்ஷஷ்டி   கோடி  
                                    யோகிநீ  கணஸேவிதா || 58


அந்தர்யாமியாக தன்னுள் தன்னைக் கண்டடையவும் அம்பிகையில் கரைந்தொழுகவும்.  இம்மந்திரத்தைப் பாராயணம் செய்யலாம். இல்லத்தில் மகிழ்வுக்கும் இன்பத்துக்கும் குறைவிருக்காது. இந்த ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்யும் இல்லங்களில் தேவி மகிழ்ச்சியுடன் கொலுவீற்றிருக்கிறாள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. கேசரி நிவேதனம் செய்து தீப ஹாரத்தி நடைபெற்றது .  உறவின் கதகதப்போடு உள்ளங்களில் தேவி தீப சொரூபமாய்க் குடி கொண்டாள்

ஏழெட்டுப்பேர் இருப்பது போல்தான் இருந்தது. ஆனால் சரியாக பதினோரு பேர் பாராயணம் செய்திருக்கிறோம். வந்திருந்த பெண்களுக்கு ரவிக்கைத் துணியுடன் தாம்பூலம் வழங்கப்பட்டது. அனைவருக்கும் அங்கே சரியான அளவில் தாம்பூலம் இருந்தது ஆச்சர்யப்பட வைத்துவிட்டது. அன்பையும் அம்பாளையும் சுமந்து வீடு வந்தோம். 

4 கருத்துகள் :

Dr B Jambulingam சொன்னது…

தினமும் ஒரு தேவாரப்பதிகத்தை பொருளுடன் படித்துவருகிறேன். மனதிற்கு நிறைவாக உள்ளது. இதுபோன்ற பழக்கம் மிகவும் பயனுள்ளதே.

R.Someswaran சொன்னது…

ராமகிருஷ்ண மடத்தில் ஆர்டர் செய்த அண்ணாவின் "ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம பாஷ்யம்" புத்தகம் இன்றுதான் வந்தது, அப்படியே உங்கள் பதிவையும் கண்டது மிக்க மகிழ்ச்சியை தருகிறது அம்மா.

Thenammai Lakshmanan சொன்னது…

மிக்க நன்றி ஜம்பு சார். உண்மைதான்.

மிக்க நன்றி சோமேஸ்வரன்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...