புதன், 7 செப்டம்பர், 2016

துர்க்கை உள்ளே லெக்ஷ்மி வெளியே.

காரைக்குடியில் இருந்து இரணியூர் 25 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இரணியூர் ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவி கோயிலில் உக்கிரமும் அதிகமாக இருப்பதால் வக்கிரம் கொண்ட அமைப்பில் கோயில் திரு உருவங்கள் அமைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். தூண்களில் நவ துர்க்கைகள் உள்ளிருக்க, அஷ்டலெக்ஷ்மிகளும் வெளிப் பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் அமைந்திருப்பது இக்கோயிலில் மட்டுமே. பொதுவாக லெக்ஷ்மி உள்ளே இருப்பதும் துர்க்கைகள் வெளிச்சன்னதியில் காவல் காப்பதும்தான் வழக்கம்.

நரசிம்மர் உக்கிரமானபோது சிவன் ( ஆட்கொண்டநாதர் ) சரபேசராக அவர் உக்கிரம் தணித்த கோயில். மேலும் அதனால் அண்ணனைக் கண்ட சிவபுரந்தேவியும் உக்கிரமாகக் காட்சி அளிப்பதாகக் கூறுகிறார்கள். இவள் உக்கிரமான போது உருவான நவசக்திகள்தான் நவ துர்க்கைகளாக அருள் பாலிக்கிறார்கள்.அம்மன் சன்னதி முன் நவதுர்க்கைகள் அணிவகுத்து நிற்கின்றார்கள் கொள்ளை அழகு.

ருத்ர துர்க்கை.

ஜல துர்க்கை.

மகா துர்க்கை.

வன துர்க்கை.


சூலினி துர்க்கை.
சிவதுர்க்கை

விஷ்ணு துர்க்கை

பிரம்ம துர்க்கை.

இது தவிர வெளி மண்டபத்தில் அஷ்டலக்ஷ்மிகளும் அணிவகுத்து இருபுறமும் அழகாக நிற்கிறார்கள்.

ஆதி லெட்சுமி.
 தனலெட்சுமி

 சௌபாக்ய லெக்ஷ்மி.


வீர லெட்சுமி


 கஜலெட்சுமி

 விஜய லெட்சுமி


 சந்தான லெட்சுமி


 தான்ய லெட்சுமி


மிக மிக அழகான இச்சிற்பக் கோயிலை ஒரு முறை தரிசித்து வாருங்கள்.

டிஸ்கி:- இதையும் படிச்சுப் பாருங்க.

அஷ்ட பைரவர்களும் 108 உக்கிர பைரவர்களும்.


3 கருத்துகள் :

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அழகிய சிற்பங்கள். நேரில் தரிசிக்க ஆசை உண்டாகிறது. பார்க்கலாம் எப்போது முடிகிறது என....

Thenammai Lakshmanan சொன்னது…

நிச்சயம் ஒரு தரம் சென்று வாருங்கள் வெங்கட் சகோ :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...