எனது நூல்கள்.

புதன், 8 ஜூன், 2016

16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.

24 கேரட் தங்கம் தெரியும் 22 கேரட் , 18 கேரட் கூடத் தெரியும், அதென்ன பதினாறு மாற்றுத்தங்கமும் ஐநூறு மாற்றுத் தங்கமும்.

இதைத் தெரிஞ்சுக்கணும்னா  நீங்க காரைக்குடிக்குப் பக்கத்துல இருக்க மாத்தூர் கோயிலுக்கு வரணும். அங்கே கொங்கணச்சித்தர்னு ஒரு முனிவர் தாமிரத்தைத் தங்கமாக்குற இரசவாதக் கலவையைத் தயாரிச்சு சோதனை செய்து பார்த்தார். முதல்ல ஒன்பது உலோகங்களையும் சூதம், லிங்கம், அரிகாரம் இதெல்லாம் கலந்து இரசவாதம் செய்து 16 மாத்துத் தங்கத்தைத் தயாரிச்சார்.

அப்புறம் மாத்தூர்ல இருக்குற கரிமேட்டுப் புன்செய் என்கிற காட்டிலேருந்து விளாரி அப்பிடிங்கிற பச்சிலையிலேருந்து சாறு எடுத்து உலோகங்களோடு கலந்து நெருப்புவிட்டுக் காய்ச்சி 500 மாற்றுத் தங்கத்தை உருவாக்கினார்.

இப்பிடி முனிசிரேஷ்டர் மக்களுக்கு நல்வழி காட்டாமல் பேராசை வயப்பட்டு தங்கம் தயாரிச்சதைப் பார்த்த ஈசன் பிச்சாடனர் உருவில் வந்து அவரைத் தடுத்தாட்கொண்டார்.

திடீர்னு தாகவிடாயால விக்கி கொங்கணச் சித்தர் தண்ணீர் தண்ணீர்னு கேட்டப்ப பிச்சாடனர் தண்ணீர் கொடுத்து அவர் தாகத்தைத் தணிச்சிட்டு அவர் உருவாக்கி வைச்சிருந்த தங்கக் குடுவைகளையும் ரசவாத மருந்துகளையும் காலால் தட்டிவிட்டுட்டு மறைஞ்சாராம். அப்பத்தான் கொங்கண மகரிஷிக்கு ஞானோதயம் ஏற்பட்டு அழியும் தங்கத்தை விட அழியாத நிம்மதிப் பேறை வழங்கும் இறைவனை வழிபடுவதே சிறந்ததுன்னு முடிவெடுத்தாராம்.
500 மாற்றுவரை தங்கம் தயாரிச்ச ஊர் என்பதால்தான் இதுக்கு மாத்தூர்னு பேராம். இன்னும் பல சிறப்புகளைக் கொண்டது மாத்தூர்க் கோயில். நகரத்தார் கோயில்கள் ஒன்பதில் இதுவும் ஒன்று.
சிற்ப அழகுக்காகப் பார்க்கப்படவேண்டிய கோயில்களில் இதுவும் ஒன்று. சிம்மங்களும் யாழிகளும் இதன் ஸ்பெஷல். கலங்காத கண்ட விநாயகர், ஐநூற்றீசுவரர், பெரியநாயகி அம்மன்,

 நான்கு சிம்மங்களின் மேல் அமைக்கப்பட்டிருக்கும் உயர்வு மிகு நந்தி ( ரொம்ப ஸ்பெஷல் ) எல்லாம் சிறப்பு.
108 சங்காபிஷேகம் நடந்தபின்.

பலநூற்றாண்டுகள் தாண்டியும் செழித்திருக்கும் ஸ்தல விருட்சமான மகிழமரமும் ஆனந்த முனீசுவரரும் இங்கே ரொம்ப ரொம்ப ஸ்பெஷல். 
ஸ்தல விருட்சத்தை வெட்டாமல் அதன் போக்குக்கு ஏற்றாற்போல சுவரைவடிவமைத்திருக்கிறார்கள். ! 
முன்பு இருந்த - இந்தக் கோயில் 1500 வருடங்களுக்கு முற்பட்ட பழமை வாய்ந்தது.
ஓங்கி ஒலிக்கும் மணிகள் முனிசுவரன் சந்நிதிக்கு முன் . கேட்கும் கணந்தோறும் புல்லரிக்க வைக்கும். மெய்மறக்க வைக்கும். விதிர் விதிர்க்கும்.
இங்கே இரட்டை பைரவர்களுடன் ( நாய்கள் ) இருக்கும் காலபைரவர் மூர்த்தம் சிறப்பு வேறெங்குமே காண இயலாதது.
கேட்டதெல்லாம் கொடுக்கும் காமதேனுப் பசு வாகனம் பிரகாரம் வரும்போது எடுத்தேன்.வாகனக் கொட்டகை, நந்தவனம் , புஷ்கரணி எல்லாம் வெகு சிறப்பு,.
இக்கோயிலின் இன்னொரு சிறப்பு என்னவெனில் அங்கே வளர்க்கப்படும் நட்சத்திர மரக்கன்றுகள். இயற்கையை நேசிக்கும் யாருக்கும் மிகப் பிரியமான இடம்.27 மரக்கன்றுகள் ஒரே இடத்தில். எல்லா நட்சத்திரக்காரர்களுக்கும் பரிகார ஸ்தலம்போல் இது.
கட்டிடக்கலை சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் தாய்த்தூண்கள், கர்ணக்கால் தூண்கள் வெகு சிறப்பு,  இதில் கர்ணக்கால் தூண்கள் ஒரே கல்லால் அமைக்கப்பட்டு பதினாறு கோண வடிவுடையதாகச் செதுக்கப்பட்டுள்ளது. ! அதில் தாமரைக் கட்டமைப்பு, கலசம், தாடி, குடம், இதழ், பூமுனை ஆகியன நுட்பமாகச் செய்யப்பட்டுள்ளன. !

பன்னிரெண்டு ராசிகளும் மேல் விதானத்தில் செதுக்கப்பட்டுள்ள அழகே அழகு. மகா மண்டப நீண்ட வாயில்படிகள், இரண்டு யானைச் சிற்பங்கள், துவாரபாலகர் பீடங்கள் ஆகிய அத்தனையும் ஒரே கல்லால் ஆனது. தஞ்சாவூரில் இருந்து பெருங்கற்களை - வெள்ளைக் கற்களை - பன்னிரெண்டு காளைமாடுகள்  கொண்ட  வண்டியில் கொணர்ந்திருக்கிறார்கள். மெதுவாக வருவதால் அவற்றுக்கு ஆமை வண்டி என்று குறிப்பிடுவார்களாம். 1934 ஆம் ஆண்டிலேயே ரூபாய் பதினாறு லட்சம் செலவில் திருப்பணி செய்யப்பட்ட கோவில் இது.

காளையும் யானையும் உடலாகவும் தலை ஒன்றாகவும் கொண்ட சிற்பம், மனிதத்தலையும் சிங்க உடலும் கொண்ட சிற்பங்கள் இங்கே உள்ள தூண்களில் வடிக்கப்பட்டுள்ளன.  தெட்சிணாமூர்த்தி மண்டபத்தைத் தாங்கும் சிங்கங்களின் வாய்க்குள் உருளும் கல் சிற்பங்களைச் செதுக்கியுள்ளனர் சிற்பிகள் . என்ன ஆச்சர்யம்னா ஆறு செமீ அளவில் திறந்திருக்கும் சிங்கங்களில் வாய்க்குள் உருளும் கல்குண்டின் சுற்றளவு 30 செமீ !

இன்னும் இன்னும் கஜசம்ஹாரமூர்த்தி, இரண்ய சம்ஹார மூர்த்தி, ஏகபாத மூர்த்தி, கண்ணன், கஜேந்திரமோட்சம், உலகளந்த பெருமாள், பிக்ஷாடனர், ப்ரதோஷ காலத்தில் அமிர்தம் கடைதல், நிகம்பசுதனி சிற்பங்கள் சிறப்பு வாய்ந்தவை. கோபுரத்தில் இராமாயன பெரியபுராணக் காட்சிகள், சைவ வைணவ அடியார்கள்,  விநாயகர் வடிவங்கள், சுதைச் சிற்பங்கள் சிறப்பு வாய்ந்தவை.  

இங்கே திருவோடு மரம் இருக்கிறது.

மேலும் நகரவிடுதியும் பசுமடமும் இருக்கின்றன. இப்போது உள்ள பெருமாள் கோவில், சிவன் கோவில், காட்டுக்காளியம்மன் கோயில் 200 வருடங்களுக்கு முன் பாண்டிய மன்னனிடம் பெற்று திருப்பணி செய்யப்பட்டவை. இவ்வூருக்கு அழகு சேர்க்கும் அழகு நாச்சியம்மன் கோயிலும் அருகிலுள்ள கண்டனூரில் உள்ளது. அனைத்துக் கோயில்களிலும் தினசரி ஐந்து கால பூசைகளும் வருடா வருடம் திருவிழாக்களும் நடைபெறுகின்றன.

இங்கே அக்ரஹாரம் இருக்கிறது. இங்கே சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் செய்துகொள்பவர்கள் பெருகி வருகிறார்கள். கொங்கண மகரிஷி போல ( தங்கம் வெள்ளி - மண் பெண் பொன் )  உலோகாயுதப் பொருட்கள் மீது மனத்தைச் செலுத்தாமல் ஐநூற்றுக்கு மாற்றுரைத்த ஐநூற்றீசுவரர் பெரிய நாயகி அம்மன் பாதம் பற்றிப் பரவி இம்மைக்கும் மறுமைக்கும் ஏழேழ் பிறவிக்கும் செய்த பாவம் தொலைத்துப் புண்ணியம் சேர்ப்போம்.

வாழ்த்து :-

ஐநூற்று ஈசுவரர் அருள் பெரியநாயகியைக்
கைதொழுவார் அனைவருக்கும்
கற்பகமாய் வாழ்வமையும்.

மாத்தூர்க் கோயிலின் மாண்புகளைப்
படித்தறிந்து பார்த்தால் பரவசமே !
பரமனருள் கிடைத்திடுமே. !

டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 

34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.

35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல். 

36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும் சூள்பிடியும்/சூப்டியும். 

38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும் கொப்பி கொட்டலும். 

39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.

40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.

41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.

42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.

43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்..

44. காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும். 

45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.

46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணி அண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)

47. வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன் கட்டுரை )

48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரை நாச்சியார்களும்.

49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப் பொட்டித் தகரங்களும். 

50. கோவிலூர் மியூசியம்.

51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-

52. காரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்காவும் ரெங்காவும்.

53. காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.

54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.


டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்


5 கருத்துகள் :

துளசி கோபால் சொன்னது…

அருமை! மாத்தூரை ஒருமுறை பார்க்கத் தூண்டும் படங்கள்! நன்றி தேனே!

G.M Balasubramaniam சொன்னது…

நகரத்தார் கோவில்கள் ஒன்பதுக்கும் சென்று வந்திருக்கிறோம் ஆனால் அப்போது இத்தனை விவரங்களைக் கூற யாரும் இருக்கவில்லை. ஒரு மாற்று என்பது என்ன காரட் என்னும் அளவையைச் சார்ந்ததா. வாழ்த்துகள். பதிவர் ஒற்றுமை ஓங்குக.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அருமையான கோவில்.... தகவல்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி துள்சி. கட்டாயம் இங்கே வரும்போது சொல்லுங்க. இன்னும் நிறைய கோயில் பார்ப்போம்.

நன்றி பாலா சார். ஆமாம். அப்படித்தான் எண்ணுகிறேன்.

நன்றி வெங்கட் சகோ.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...