எனது புது நாவல்.

ஞாயிறு, 22 நவம்பர், 2015

காதல் வனம் - பாகம் 1. - ராஜநாகம்.

அது ஒரு நவம்பர் காலம்.


பாதையோரங்களில் குட்டித் தீவுகளை உருவாக்கிக் கொண்டிருந்தது மழை,
மேகங்கள் சூழ மரங்கள் மௌனமாய் நின்றிருந்தன.


ஒரு சின்னப் போருக்குத் தயாராகிக் கொண்டிருந்தது வானம். எதிர்கொள்ளத் தயாராய் இருந்தது வனம்.ஜீப்பிலிருந்து இறங்கி நடக்கிறார்கள் இருவரும்.


தூரத்தே தெரியும் சிகரங்களும் பசுமையும் மேகமூட்டமும் பாதையை கனவுக் காட்சிக்கான தளம் போல் விரிக்கின்றன.


ஒரு கற்றைக் கயிற்றைச் சுருள விட்டபடி பதுங்கி இருக்கும் அந்த அருவியை ஆச்சர்யத்துடன் பார்க்கிறாள் அவள்


'இங்கே நீராடுவதா. ?!'


மனிதர்களை விழுங்கிவிடுவது போல ஆக்ரோஷத்துடன் கொட்டிக் கொண்டிருக்கும் அருவியைப் பார்த்ததும் ஏனோ சிலிர்க்கிறது அவளுக்கு


தண்ணீர்த் தவம்..


கொக்குகளாய் நனையவும் நிற்கவும் விடுமோ.


அவரின் தோள்பற்றிக் கொஞ்சம் பாறைகளைப் பிடித்தபடி இறங்குகிறாள்.
காலின்கீழே நசுங்கும் மென் பூக்கள், பூப்பூவாய்த் தெறிக்கும் தண்ணீர்ச் சிதறல்கள் , அருகே காணும்போது ஆனந்த லயத்தோடு தழுவும் அருவி உன்மத்தமாக்குகிறது அவர்களை


மெல்ல மெல்ல அல்ல. ....அடித்துத் துவைத்து நனைக்கிறது அந்தத் தண்ணீர் ராட்சசம்


மனிதர்களின் கண்கள் படாத இடத்தில் மானுடர்கள் இருப்பதைப் பார்த்து புள்ளினங்களும் மெல்லக் கூவுகின்றன ...மறைந்திருந்து பார்த்து ரசிக்கின்றன சில ..


தங்கத் தாமரை போல அவளும் தாவி அணைக்கும் தண்ணீர் போல அவரும். வெட்கத்தால் தலையைக் குனிகிறாள் அவள்.. முடிவற்ற காதல்., எண்ட்லெஸ் லவ்.


சரசரவென்ற ஒலி அவர்களின் காலருகில். பதறிச் சாயும் அவள் அவரையும் நிலை தடுமாற வைக்கிறாள்.


எட்டடி நீளத்தில் ஒரு ராஜ நாகம்.


பாறைகளில் தவ்வித் தள்ளி இருவரும் கைகோர்த்துப் பிடித்து மேலேறி ஓடுகிறார்கள்.


பாறையைக் கொத்திய நாகம் ஹிஸ்ஸென்ற ஒலியோடு பின் திரும்பிப் புதருக்குள் ஒளிகிறது.


படபடப்பும் பதைபதைப்புமாய் நிற்கிறார்கள் இருவரும். இன்னும் நிதானத்துக்கு வரவில்லை முழுதும் நனைந்த உடைகளோடு கிடுகிடுத்துக் கொண்டிருந்தாள் அவள். கைபிடித்து அமைதிப்படுத்துகிறார் அவர்.


”இதுவா வனம்” எனத் திகைக்கிறாள் அவள்


”இதுவும்தான்” என்கிறார் அவர்.


’தூங்கா வனம்மாதிரி... காதல் வனம்.’


வனம் பார்த்த அசதியில் தோளில் சாய்ந்தபடி ஜீப்புக்கு வந்து சேர்கிறார்கள் இருவரும்.


இன்னும் பல அதிசயங்களை அவர்களுக்குக் காண்பிக்க எதிர்கொண்டு காத்திருந்தது நீள மலைப் பாம்பை ஓடவிட்டது போன்ற அந்த மலைச்சாலை.


--- நாவல் எழுதலாம்னு எண்ணம்..


8 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தொடர வாழ்த்துகள்...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி டிடி சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

sangeethas creations சொன்னது…

arumai

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அட! அருமையான விவரணம்...தொடருங்கள் சகோ! காதல் வனம் தலைப்பு கவித்துவம்...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சங்கீதா கிரியேஷன்ஸ்

நன்றி துளசி சகோ & கீத்ஸ்

இமா சொன்னது…

எழுதுங்க தேனம்மை. விபரிப்பு அருமை;அவற்றுக்கேற்ப படங்கள்... கச்சிதம்.
உண்மையில் இன்றைய இடுகையைப் படித்த பின் தான் இங்கு ஆரம்பத்திற்கே வந்தேன்.
தொடருங்கள், படிக்கக் காத்திருக்கிறேன்.

Thenammai Lakshmanan சொன்னது…

மிக்க நன்றியும் அன்பும் இமா :)

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...