திங்கள், 16 நவம்பர், 2015

கேரளா கொச்சு வேலி பீச் ஷெனாய் நகர் டைம்ஸில். KERALA KOCHU VELI BEACH.


கேரளாவில் கோவளம் பீச்தான் வெளிநாட்டினரிடையே பிரபலம். ஆனால் கொச்சு வெளி பீச் மிக அற்புதமான இடம். வெளி பீச் என்று வெளி லாகூன் என்றும் குறிப்பிடுகிறார்கள்.


திருவனந்தபுரம் சென்றிருந்த போது நண்பர் ஒருவர் எங்களைக் கொச்சு  வெளி பீச்சுக்கு அழைத்துச் சென்றார். மிக அழகும் அமைதியும் உள்ள இடம். அலைகள் கூட மென்மையாக ஆர்ப்பரிக்கின்றன. முதலில் ஒரு பூங்காவும் அந்தப்பூக்களுக்கீடாக ..அதனூடே நிறைய கல் சிற்பங்களும் பூத்திருந்தன.

ஒரு மிதவைப் பாலமும், மிதக்கும் ரெஸ்டாரெண்டும்,  மணற் திட்டுக்கள் சூழ்ந்த நன்னீர் ஏரியும் அழகு. ஏரியில் ஒரே வெங்காயத் தாமரைகள்.

என்னை மிக கவர்ந்தது அங்கே செதுக்கப்பட்டிருந்த சிற்பங்கள். அந்தச் சிற்பங்களைச் செதுக்கியவர் பிரபல சிற்பி Kanayi Kunjiraman. 


மனிதர்களின் ஒவ்வொரு நிலைகளையும் குறிப்பாகப் பெண்களைப் பிரதிபலிப்பதாக இருந்தது அனைத்துச் சிற்பங்களும்.


ஒரு தாயாத் தாதியாய்த் தெய்வமாய்ப் பெண்ணாய், அனைத்துப் பரிமாணங்களிலும் செதுக்கி இருந்தார். 


இரு கற்சிற்பங்கள் ஆண் பெண் உறவு நிலைகளையும் பிரதிபலித்திருந்தன. 


விடுமுறை தினம் என்பதால் பள்ளிக் குழந்தைகளின் கூட்டமும் பார்க்கும் மக்களின் கூட்டமும் அதிகம் இருந்தாலும் இரைச்சலில்லாத ஒரு தன்மை எங்கும் நிறைந்திருந்தது. பூக்களுக்கிணையாக மக்களும் பூத்திருந்தார்கள். சிற்பங்களும் தனித்துவத்தோடு காட்சியளித்தன.

கேரளா சென்றால் தவறவிடக் கூடாத இடங்களில் கொச்சு வெளி பீச்சும் ஒன்று. சிற்பங்களின் நளினத்தையும் அதன் அமைதியையும் ஆழத்தையும் அனுபவித்துப் பாருங்கள் புரியும்.

டிஸ்கி :- இது முன்பே வெளியான இடுகைதான். ஆனால் ஷெனாய் நகர் டைம்ஸில் வெளியானதால் திரும்பப் பகிர்ந்திருக்கிறேன். 

கேரளா கொச்சு வெளி பீச்சில் பெண் சிற்பங்கள்.


6 கருத்துகள் :

பழனி. கந்தசாமி சொன்னது…

ரசித்தேன்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஏற்கனவே தாங்கள் தங்கள் பதிவில் இட்டிருந்தது இப்போது டைம்ஸில்! வாழ்த்துகள் சகோ....

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிற்பங்கள் அசர வைத்தது...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அருமையான இடம். நல்ல சூழல். பார்த்து ரசித்த இடம்.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கந்தசாமி சார்

நன்றி துளசி சகோ & கீத்ஸ்

நன்றி டிடி சகோ

நன்றி வெங்கட் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...