எனது பதிமூன்று நூல்கள்

புதன், 25 நவம்பர், 2015

சீர் மிகு சிங்கப்பூர் – பாகம் 8. மேக்ரிட்சி ரிசர்வாயர்.. SINGAPORE MACRITCHIE RESERVOIR PARK.சீர் மிகு சிங்கப்பூர் – பாகம் 8.  மேக்ரிட்சி ரிசர்வாயர்.

சிங்கப்பூரை விட்டுக் கிளம்பும் நாளில் இந்த மேக் ரிட்சி ரிசர்வாயர் சென்று வந்தோம். மாலைதான் ஃப்ளைட் என்பதாலும் உறவினருக்கு அன்று பிறந்த நாள் என்பதாலும் சுவா சூ காங்கிற்கு எதிரில் இருந்த தெ ஸ்டோர்ஸ் கடையில் சீஸ்கேக்கும் வாஃபில்ஸும் வாங்கிக் கொண்டு காரில் சென்றோம். அங்கே இருக்கும் அனைவரும் அலுவலகம் செல்ல கார் பயன்படுத்துகிறார்கள். எனவே சென்று வர எளிதாக இருந்தது. பலதளங்கள் கொண்ட கார் நிறுத்துமிடம் ஒவ்வொரு இடத்திலும் மிக அழகா பராமரிக்கப்படுது. 

இந்த மேக்ரிட்சி ரிசர்வாயர் மிகப் பழமையானது. கிட்டத்தட்ட 1868 இல் இது அமைக்கப்பட்டிருக்கு. பிற கால்வாய்களில் இருந்து சேகரமாகும் நீர் எல்லாம் இங்கே வந்து சேர்ந்து நீர்த்தேக்கமாகி இருக்கு.
19 ஆம் நூற்றாண்டில் காடா இருந்த பல இடங்களை ( ஆசியாவின் மிகப் பெரும் வியாபாரஸ்தலமாக உருவெடுத்த சிங்கப்பூரின் பெருகி வரும் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்ய )  சுத்தப்படுத்தி இது போன்ற நீர்த்தேக்கத்தை ப்ரிட்டிஷ் கவர்மெண்ட் உருவாக்கி இருக்காங்க. 


முதலில் ஆயிரம் டாலரில் உருவாக்கப்பட்ட இத்திட்டம் டான் கிம் செங் அப்பிடிங்கிற சைனீஸ் வியாபாரி கொடுத்த பதிமூணாயிரம் டாலரில் விரிவடைஞ்சுச்சு. ஆனா தண்ணீர் சப்ளை செய்ய முடியல. பணம் பத்தாததால நின்னுபோன இத்திட்டத்துக்கு லட்சம் டாலர் செலவழிச்சு 1877 இல் பூர்த்தி பண்ணாங்க. இதுக்கு பணம் கொடுத்த டான் கிம் செங் என்ற சீன வியாபாரியை கவுரவிக்கும் விதமா ஃபுல்லர்டன் அப்பிடிங்கிற இடத்துல ஒரு ஃபவுண்டன் அமைச்சிருக்காங்க. இப்போ அதை க்வீன் எலிஸபெத் வாக் அப்பிடிங்கிற இடத்துக்கு மாற்றி இருக்காங்க. 

ஜான் டர்ன்புல் தாம்சன் என்ற பொறியாளர் வடிவமைச்சதால இத தாம்சன் ரிசர்வாயர்னு கூட சொல்றாங்க. முனிசிபல் என்ஜினியர் ஜேம்ஸ் மாக்ரிட்சியின் மூலம் இத்திட்டம் விரிவடைஞ்சு அவர் இந்த நீர்த்தேக்கத்தை விரிவுபடுத்தியதால் இதை 1922 இல் இருந்து அவர் பெயரிட்டு மேக்ரிட்சி ரிஸர்வாயர்னும் சொல்றாங்க. இந்த நீர்த்தேக்கத்தைத் தவிர சிங்கப்பூரின் குடிநீர்த்தேவையை பூர்த்தி செய்ய லோயர் பியர்ஸ் ரிசர்வாயர், செலெட்டார் ரிசர்வாயர் ஆகிய இரு நீர்ப்பிடிப்புத்தேங்கங்கள் இருக்கின்றன.  

கல்லாங் அப்பிடிங்கிற நதியில் இருந்து இந்த மேக்ரிட்சி ரிசர்வாயருக்கு நீர் வரத்து இருக்கு . இங்கேயிருந்து நீரை பம்ப் பண்ணி சுத்தம் செய்து நகரெங்கும் அனுப்புறாங்க. மழை நீரை சேகரிக்கவும் நீர்த்தேக்கத்துக்காக வெட்டப்பட்ட காட்டை சமப்படுத்தவும் நீர்த்தேக்கத்தைச் சுற்றி அடர்த்தியான காட்டை இன்னும் பராமரிச்சுக்கிட்டு வர்றாங்க. அங்கே காடும் நீர்த்தேக்கமும் இணையும் இடத்தில் சுற்றி நடந்து வர்றாப்புல ப்ராட்வாக் என்ற பெரிய பாதையும் இருக்கு. கிட்டத்தட்ட 11 கிமீ இருக்குமாம். உள்ளேயும் போய் வர்றாப்புல அங்கங்கே வழிகாட்டி போர்டும் வைச்சிருக்காங்க. 

இது போக ட்ரீடாப் வாக் அப்பிடின்னும் ஒண்ணு இருக்கு. மேக்ரிட்சியின் இரு உயரமான இடங்களான புக்கிட் பியர்ஸ் & புக்கிட் கல்லாங்கை இணைக்கும் தொங்குபாலத்துல நேரம் கிடைச்சா போயிட்டு வரலாம். தரையிலேருந்து 25 மீட்டர் உயரத்துல இருக்க இந்தப் பாலத்துல போனா ஜெலுடாங்க் டவர்ஸிலிருந்து சிங்கப்பூர் தீவின் கண்ட்ரி க்ளப்பையும் மேக்ரிட்சியின் முழு விஸ்தீரணத்தையும் கண்டு களிக்கலாம். பள்ளிக் குழந்தைகள் இங்கே நிறைய வாட்டர் ஸ்போர்ட்ஸுக்காகவும் படகுப் போட்டிக்கும் படகு சவாரிக்கும் வர்றாங்க. 

நாம எண்ட்ரன்ஸ்லேருந்து ஒரு அர்ஜண்ட் விசிட் பண்ணலாம்னு இந்த நீர்த்தேக்கத்துக்குப் போனா இத சுத்தி அழகான அருமையான தோட்டம் இருக்கு. சிங்கப்பூரில் தோட்டங்கள் எல்லாம் மலைப்பாங்கான பிரதேசம் போல ஏற்ற இறக்கமாகத்தான் இருக்கு. சமதளம் இல்லை. இந்த நீர்த்தேக்கத்தில் ஒரு மைய மண்டபம் இருக்கு. அது ஒரு ஆர்ட் பெவிலியன். அதுக்கு போற வழி நீர் மேல மரப்பாலம்தான் அதுவும் ஸிக் ஸாக்கா அமைக்கப்பட்டிருக்கு. மிக அழகான பாதை. சுற்றிலும் பூங்கா. கீழே தண்ணீர். கடந்து போவது கொஞ்சம் த்ரில்லிங்க் எக்ஸ்பீரியன்ஸ்தான். 

அங்கே சென்று ஓரிரு புகைப்படங்கள் எடுத்தோம். அங்கங்கே அமர்ந்து ஓய்வெடுக்க குடை டைப்பில் ஓபன் கூரைகளும் அதன் கீழ் பொருத்தப்பட்ட கல் பெஞ்சுகளுமாக தண்ணென்றிருந்தன. அங்கே வரும் பெரியவர்கள் மற்றும் அனைவருமே மழை எப்போதும் வந்துவிடும் என்பதால் நன்கு வளைக்கப்பட்ட கைத்தடி போன்ற குடைகளோடுதான் பயணிக்கிறார்கள்.

செடிகளால் அமைக்கப்பட்ட ஆர்ச்சுகள் தோட்டங்களில் அடுத்து அடுத்து நம்மை வரவேற்கின்றன. ரப்பர் மரங்கள், மிளகுக் கொடிகள், விசிறி வாழைகள் ஈச்ச மரங்கள், அதைப்போன்ற அலங்கார மரங்கள், க்ரோட்டன்ஸுகள், அலங்கார விளக்குகள், கலை நயம் மிக்க பெஞ்சுகள் புல்வெளிகள் போகன்வில்லாக்கள், கல்வாழைச் செடிகள் மிகப்பெரும் மரங்கள், என அந்த நீர்த்தேக்கத்தைச் சுற்றிலும் அமைந்துள்ளன. 
வாக்கிங்க் போவதற்கு ஏற்ற இடம் போல சுற்றிலும் பாத்வே – சிமிண்ட் ஸ்லாபுகளால் நடைபாதை அமைத்திருக்கிறார்கள். குரங்குகளும் விலங்குகளும் பறவைகளும் பட்டாம் பூச்சிகளும் அந்த மதிய இள வெய்யிலில் ஆடிக்களித்துக் கொண்டிருந்தன. மரக்கிளைகளில் இருந்து அங்கேயும் குயில் சத்தம் போல ஒன்று கேட்டுக் கொண்டிருந்தது. 

இந்த நீர்த்தேக்கத்தின் நடுவில் பம்பிங் ஸ்டேஷன் போல ஒன்றும் இருக்கிறது. அது நீரை பம்ப் செய்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு மரத்தைச் சுற்றிலும் பல அடுக்குகளில் பூச்செடிகள் வளர்க்கப்பட்டுள்ளன. அது போல கரையை ஒட்டி போகன் வில்லாக்களும் அதை ஒட்டி மைல்கற்கள் அமைத்து அதிலிருந்து கோர்க்கப்பட்ட சங்கிலியும் பாதுகாப்பு வேலி போல அமைத்துள்ளார்கள். 

தூரத்துக் கட்டிடங்கள் தமிழ் சினிமாவில் காட்டப்படும் ஜாய்ஃபுல் சிங்கப்பூரை அடையாளம் காட்டிக் கொண்டிருந்தன. உறவினருக்காக கொண்டு சென்றிருந்த கேக்கை கட் செய்து ஆளுக்கு ஒரு துண்டு சாப்பிட்டபின்பு மழை வரும்போலத் தோன்றியதால் அங்கேயிருந்து வீட்டுக்கு வந்து பாக்கிங் செய்யத் துவங்கினோம். கிளம்பும் அன்றும் ஒரு புது இடத்தைப் பார்த்தது புத்துணர்ச்சி ஊட்டக்கூடியதாய் இருந்தது. இங்கே எவ்வளவு மழை பெய்தாலும் ட்ரைனேஜ் சிஸ்டம் ப்ராப்பராக வொர்க் செய்வதால் அத்தனை நீரும் வடிந்து சிங்கப்பூர் ரோடுகள் பளிச்சென்று துலங்குகின்றன. அங்கே மழை பெய்தாலும் கொஞ்சம் ட்ரை சம்மர் க்ளைமேட் என்றுதான் சொல்லணும். மழை பெய்தாலும் வெய்யில் வரட்சி அதிகம். நம்மூர் போல குளிர்ச்சி ஏதும் வரவில்லை. 

மலேஷியாவில் உள்ள டைம்லைந்தான் இங்கேயும் பின்பற்றப்படுகின்றது. மாலை சாங்கி ஏர்போர்ட் வந்து சேர்ந்தோம். குழந்தைகள் விளையாடும் இடமும் பிஸா கார்னரும் பர்கர் கடைகளுமாக கலகலத்துக் கொண்டிருந்தது. ஏர்போர்ட். அடுத்த ஃப்ளைட்டுக்காக 8 , 10 மணி நேரம் காத்திருக்கும் இண்டர்நேஷனல் பயணிகளுக்கு காத்திருக்கும் அலுப்புத்தெரியாமல் இருக்க இப்போது இன்னும் சன்ஃப்ளவர் கார்டன் காக்டஸ் கார்டன் பட்டர்ஃப்ளை கார்டன் எல்லாம் அமைச்சிருக்காங்க. சம்மர்ல கும்பல் கும்பலாய் போய் சுற்றிட்டு எல்லாரும் ஒரு எல்சிடி டிவி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஐட்டங்களோட செக்கின் ல காத்திருந்தாங்க. அதெல்லாம் வாங்காட்டியும் முஸ்தஃபால தங்கம் மட்டும் வாங்கின நாமும் போய் ஜோதில ஐக்கியமானோம். நீங்களும் இந்த சம்மர்ல போய் ஒரு சுற்று சுற்றிப்பார்த்துட்டு வாங்க.

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க. 

1. மனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும் பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும். MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.

2. மனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும் பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும். ( தொடர்ச்சி ) MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.

3. மனம் கவரும் மலேஷியா – பாகம் 2. பெட்ரோனாஸ் ட்வின் டவர்ஸும் நேஷனல் ( மஸ்ஜித் நெகாரா ), ஜேமெக் மசூதிகளும். -MALAYSIA - PETRONAS, MASJID NEGARA, JAMEK MOSQUE.
 
4. மனம் கவரும் மலேஷியா பாகம் 3 கெந்திங் ஹைலாண்ட்ஸ். MALAYSIA - GENTING HIGHLANDS. 


இவற்றையும் பாருங்க :-

இன நல்லிணக்கம்.

சிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.

எங்க ராமு மாமாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

சல்கேட்டா ஆமையும் சிங்கப்பூரின் அதிர்ஷ்டமும். 

சீர் மிகு சிங்கப்பூர். பாகம் - 1. ஆமையும் முயலாமையும். 

சீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 2. ஜூராங்க் பறவைப் பூங்காவும் ஃப்ளெம்மிங்கோக்களின் நடனமும். SINGAPORE - JURONG BIRD PARK. 

சீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 3. :- மெர்லயன் சிலையும் மெரினா பே ரெசார்ட்டும். SINGAPORE - MERLION STATUE & MARINA BAY SANDS.  

சீர்மிகு சிங்கப்பூர் :- பாகம் 4. கோடையைக் கொண்டாட கோட்டா டிங்கி வாங்க. 

சீர்மிகு சிங்கப்பூர் :- பாகம் 5 . சிங்கைத் தமிழும் தமிழர்களும் தமிழ்ப்புத்தாண்டும். :- 

சீர்மிகு சிங்கப்பூர் – பாகம் 6. சிங்கப்பூர் ஆர்க்கிட் பார்க்கில் அன்னாசி. SINGAPORE - ORCHID PARK.

சீர்மிகு சிங்கப்பூர் - 7. செந்தோசாவும் ஆழ்கடல் உலகமும் டால்ஃபின் லாகூனும். SENTHOSA & DOLPHIN LAGOON SINGAPORE.

 சீர் மிகு சிங்கப்பூர் – பாகம் 8. மேக்ரிட்சி ரிசர்வாயர்.. SINGAPORE MACRITCHIE RESERVOIR PARK.

5 கருத்துகள்:

 1. அருமையாகச் சுற்றிக் காட்டிவிட்டீர்கள்...என்ன ஷாப்பிங்க் மட்டும்தான் பண்ணவில்லை...ஹஹ அழகான படங்கள் சகோ...நன்றி நன்றி!

  பதிலளிநீக்கு
 2. ஆம் டிடி சகோ

  நன்றி ஜெயக்குமார் சகோ

  நன்றி துளசி சகோ & கீத்ஸ்

  பதிலளிநீக்கு
 3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...