எனது நூல்கள்.

திங்கள், 16 நவம்பர், 2015

சீர்மிகு சிங்கப்பூர் - 7. செந்தோசாவும் ஆழ்கடல் உலகமும் டால்ஃபின் லாகூனும். SENTHOSA & DOLPHIN LAGOON SINGAPORE.

மறுநாள் காலை சிங்கப்பூரின் முக்கியமான பொழுதுபோக்குத்தலமான செந்தோசா பீச் சென்றோம். இதற்குச் செல்வதற்கு சுவா சூ காங்கிலிருந்து மெட்ரோ ரயில் இருக்கிறது. இதில் ஹார்பர் ஃப்ரெண்ட் வரை சென்று அங்கே செந்தோசா எக்ஸ்ப்ரஸ் என்னும் மோனோ ரயில் மூலம் சென்றோம். மூன்றே ஸ்டாப்புகள்தான். 2014 லேருந்து செந்தோசா ப்ராட் வாக் எனப்படும் பாதையும் திறந்து விடப்பட்டிருக்கு. 

இந்தத் தீவு முன்பு மரணத் தீவு என்று சொல்லப்பட்டாலும் இப்போது அது மலாய்ல அமைதி மற்றும் சமாதானத்துக்கான தீவு அப்பிடின்னு அர்த்தம் வர்றாப்புல செந்தோசா பெயரிடப்பட்டிருக்கு. 18 ஆம் நூற்றாண்டில் மலேரியா போன்ற கொள்ளை நோய்கள் தாக்கத்தால பலபேர் இங்க இறந்துருக்காங்கன்னு சொல்லப்படுது.

மத்திய ஆசியாவில் அமைந்துள்ள சிங்கப்பூர் பூமத்திய ரேகைக்கு அருகில் வருவதாலும் கடல் சூழந்த தீவாக இருப்பதாலும் பல்வேறு விதமான காடுகள், சதுப்பு நிலங்கள், மாங்ரோவ் காடுகள், புல்வெளிகள், மற்றும் தரிசு நிலப்பகுதிகளைக் கொண்டதாக இருக்கிறது.


இந்தத் தீவுல கடல் உட்புகுந்து அரித்தும் அழிச்சிருக்கு. சின்னத் தீவுதான் அதுனால இடத்தை அதிகரிக்க வெள்ளை மணலை அது அரிக்காம இருக்க கொட்டி கற்களை பீச்சோரமா அடைஞ்சு வைச்சிருக்காங்க. மேலும் சுற்றுலாவரும் மக்கள் தங்கும் வசதிக்காக இங்கே இருந்த 200 வகையான மரஞ்செடிகொடிகளை அங்கேயே வேற இடத்தில் ஊன்றி வளர்க்குறாங்க. நிறைய ஹோட்டல்ஸ் ரெஸார்ட் ஸ்பா எல்லாம் இருக்கு. இங்கே லூஜ் எனப்படும் சறுக்கு விளையாட்டு பிரசித்தம்.

இங்கே பஸ் வசதியும் இருக்கு. ஃப்ரீதான். பட்டர்ஃப்ளை பார்க்கில் ஆயிரக்கணக்கான பட்டாம்பூச்சிகள் பறப்பதைக் காணலாம். சுற்றிப் பார்க்கவும் கண்டு களிக்கவும் இன்னும் டைகர் ஸ்கை டவர், செந்தோசா மெர்லயன், ( இதை நாம செந்தோசா எக்ஸ்ப்ரஸ் மோனோ ரயில்லே வரும்போதே பக்கத்துல பார்க்கலாம். – 37 மீட்டர் உயரத்துல ப்ரம்மாண்டமா இருக்கும் ) , விங்ஸ் ஆஃப் டைம் ஷோ, செந்தோசா 4டி அட்வென்சர் லாண்ட், சிலோசோ துறைமுகம், மெகாஸிப் அட்வென்சர் பார்க், மேடம் டுஸ்ஸாட் ம்யூசியம். வேவ் ஹவுஸ் செந்தோசா, ஐஃப்ளை சிங்கப்பூர் ( இத பார்க்க கொஞ்சம் டெரராதானிருக்கு ) இதெல்லாம் இருக்கு.

அதே போல ஒரு பக்கம் பலவன் பீச் இன்னொரு பக்கம் சிலோசோ பீச், மூன்றாம் பக்கம் டான்ஜோங்க் பீச்ன்னு பொழுது போகவும் நடக்கவும் ஏராளமான இடம் இருக்கு. 

இந்த பீச்களில் சிலாஸோ பீச் கொஞ்சம் அமைதியா இருக்கு தூரத்தில் கப்பல்களைப் பார்க்கலாம். இவை மனிதர் உருவாக்கிய தீம் பீச்சுகள் போல. சாங்கி பீச் தான் இயற்கை கடற்கரை. 

பீச்சுகளில் சுற்றி வர ட்ராவலேட்டர்கள் போல பீச் சைக்கிள்கள் உதவுகின்றன. இதை கோ க்ரீன் செக்வே@இகோ அட்வென்சர்,( GO GREEN SEGWAY@ECO ADVENTURE) ஃபன் ரைட், பர்சனல் ட்ரான்ஸ்போர்ட்டர்னும் சொல்றாங்க. இதுல பெரியவங்களும் குட்டீஸும் சுத்திச் சுத்தி வர்றாங்க.


அங்கே இருந்த அலங்காரக் குடைகளின் கீழ் வான்கோழிகளும் மயில்களும் சூழ மதிய உணவு அருந்தியபின் சிலோசோ பீச்சில் கொஞ்சம் கால் நனைத்து ஆடிவிட்டு இந்த அண்டர்வாட்டர் வேர்ல்டு போனோம்.

எல்லா இடங்களிலும் டாய்லெட் வசதி இருக்கு. சுவற்றில் பதிந்த கண்ணாடிக் கூண்டுகளிலும் மத்தியில் நிறுத்தப்பட்டிருந்த கூண்டுகளிலும் விதம் விதமான கடல் உயிரினங்கள் ஃபாசில்களாகவும் உயிருடனும் வைக்கப்பட்டிருந்தன. 


வகைவகையான வண்ண மீன்கள், அல்கேக்கள், நட்சத்திர மீன்கள், ஆக்டோபஸ்கள், இறால்கள், நண்டுகள், சீ அர்ச்சின்ஸ், சீ குக்கும்பர்ஸ், போன்றவற்றைப் பார்த்துவிட்டு சில தளங்கள் இறங்கிப் போனால் அங்கே அண்டர் வாட்டர் வேர்ல்டு. 

கடலுக்குள் அமைக்கப்பட்ட பாதையில் கண்ணாடிக்கூண்டுக்குள் நாம் நின்றால் போதும். நாம் நடக்கக்கூட வேண்டாம். கன்வேயரிங் பெல்ட் போல நகரும் பாதை நம்மை ஒரு சுற்றுச் சுற்றி அழைத்து அனைத்தையும் காட்டி விடுகிறது. 

அவர்கள் ஒரு ஹெட்ஃபோனுடன் கழுத்தில் அணிந்துகொள்ளும் மினி ரெக்கார்டரையும் கொடுத்து விடுகிறார்கள். அது நாம் கடக்கும் இடத்தையும் அந்த உயிரினங்கள் பேரையும் சொல்கிறது. அங்கே சுறாக்கள், திமிங்கிலங்கள் கூடப் பார்த்தோம்.  அதனுள்ளே சென்று காகிள்ஸ் மற்றும் நீச்சலுக்கான உடைகள் அணிந்த பணியாளர்கள் அதற்கு உணவளித்துக் கொண்டிருந்தார்கள். 

செந்தோசாவில் இருக்கும் முக்கிய அட்ராக்‌ஷன் அண்டர்வாட்டர் வேர்ல்டு மற்றும் டால்ஃபின் லாகூன் எனப்படும் டால்ஃபின் ஷோ, இது ரெண்டையும் பார்க்காம இந்த ட்ரிப் முடிவதில்லை. 
 

இவற்றைக் கண்டு களித்துவிட்டு வெளியே வந்தால் வானம் லேசாக மேகமூட்டத்தோடு கிடந்தாலும் எல்லாரும் வேகமாகச் சென்று அமர்ந்த இடம் டால்ஃபின் ஷோ. காலரிகளில் நல்ல கூட்டம். தமிழர்கள் பாதிப்பேர் இருப்போம். பாதி தமிழ்நாடே அங்கே சுற்றுலா வந்திருந்தது. அந்த டால்ஃபின்கள் இருக்கும் குளம் நல்ல நீலநிறமாக நீச்சல் குளம் போல இருந்தது. டால்ஃபின் பயிற்சியாளரான ஒருபெண் வந்து நின்று குரல் கொடுக்க இரண்டு டால்ஃபின்கள் மூக்கை நீட்டியபடி சரேலென்று நீரைக் கிழித்து வந்தன.

பயிற்சியாளர் குரல் கொடுக்க அவை அவர் கையில் பிடித்திருந்த வளையங்களைத் தாண்டின. ஒன்றேபோல் நீந்தி உயரே இருந்த பந்தைத் தொட்டன. பின் வாலிபால் போன்ற பந்தை மூக்கில் தட்டி இரண்டும் விளையாடின. உயரே கட்டிய வளையத்தில் ஒரே ஜம்பாக ஜம்பி கரகோஷத்தை அள்ளிக் கொண்டன. டால்ஃபினைப் பார்த்த சந்தோஷத்தில் டால்ஃபின்போல துள்ளிக்குதித்தபடி அனைவரும் தங்குமிடத்திற்குச் செல்லக் கலைந்தார்கள். 

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க. 

1. மனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும் பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும். MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.

2. மனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும் பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும். ( தொடர்ச்சி ) MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.

3. மனம் கவரும் மலேஷியா – பாகம் 2. பெட்ரோனாஸ் ட்வின் டவர்ஸும் நேஷனல் ( மஸ்ஜித் நெகாரா ), ஜேமெக் மசூதிகளும். -MALAYSIA - PETRONAS, MASJID NEGARA, JAMEK MOSQUE.
 
4. மனம் கவரும் மலேஷியா பாகம் 3 கெந்திங் ஹைலாண்ட்ஸ். MALAYSIA - GENTING HIGHLANDS. 


இவற்றையும் பாருங்க :-

இன நல்லிணக்கம்.

சிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.

எங்க ராமு மாமாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

சல்கேட்டா ஆமையும் சிங்கப்பூரின் அதிர்ஷ்டமும். 

சீர் மிகு சிங்கப்பூர். பாகம் - 1. ஆமையும் முயலாமையும். 

சீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 2. ஜூராங்க் பறவைப் பூங்காவும் ஃப்ளெம்மிங்கோக்களின் நடனமும். SINGAPORE - JURONG BIRD PARK. 

சீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 3. :- மெர்லயன் சிலையும் மெரினா பே ரெசார்ட்டும். SINGAPORE - MERLION STATUE & MARINA BAY SANDS.  

சீர்மிகு சிங்கப்பூர் :- பாகம் 4. கோடையைக் கொண்டாட கோட்டா டிங்கி வாங்க. 

சீர்மிகு சிங்கப்பூர் :- பாகம் 5 . சிங்கைத் தமிழும் தமிழர்களும் தமிழ்ப்புத்தாண்டும். :- 

சீர்மிகு சிங்கப்பூர் – பாகம் 6. சிங்கப்பூர் ஆர்க்கிட் பார்க்கில் அன்னாசி. SINGAPORE - ORCHID PARK.

சீர்மிகு சிங்கப்பூர் - 7. செந்தோசாவும் ஆழ்கடல் உலகமும் டால்ஃபின் லாகூனும். SENTHOSA & DOLPHIN LAGOON SINGAPORE.

 சீர் மிகு சிங்கப்பூர் – பாகம் 8. மேக்ரிட்சி ரிசர்வாயர்.. SINGAPORE MACRITCHIE RESERVOIR PARK.


7 கருத்துகள் :

Dr B Jambulingam சொன்னது…

சிங்கப்பூருக்கு அழைத்துச்சென்றமைக்கு நன்றி. அழகான புகைப்படங்கள், செய்திகள்.

S.P. Senthil Kumar சொன்னது…

பயணக் கட்டுரையும் படங்களும் சிங்கப்பூர் சென்ற உணர்வைக் கொண்டு வந்தன.
த ம 1

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கூடவே சென்று வந்த உணர்வு... நன்றி சகோதரி...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

சிங்கப்பூரைச் சுற்றிக் காட்டியமைக்கு மிக்க நன்றி! இலவசமாக!!! ஹஹ படங்களும் அருமை. செந்தோசா பற்றிக் கேட்டதுண்டு. சிங்கப்பூர் பற்றியும்....இப்போது தங்கள் பதிவுகள் மூலம் ப்டங்களுடன் அறிய முடிகின்றது. நன்றி சகோ..

திருப்பதி மஹேஷ் சொன்னது…

சீர்மிகு சிங்கப்பூர் பயணத் தொடர் அருமை மேடம்.

இன்றுதான் பார்த்தேன்.
அனைத்து பகுதியும் படித்துவிட்டேன்.

அடுத்து மனம் கவரும் மலேஷியா தொடரை வாசிக்க வேண்டும்.

நன்றி.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஜம்பு சார்

நன்றி செந்தில் சகோ

நன்றி டிடி சகோ

நன்றி துளசி சகோ & கீத்ஸ்

நன்றி திருப்பதி மஹேஷ். உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. உங்களைப் பற்றி அறிந்த பின்பு இன்னும் பிரமிப்பு அதிகரிக்கிறது. !!!

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...