எனது நூல்கள்.

வியாழன், 12 நவம்பர், 2015

சீர்மிகு சிங்கப்பூர் – பாகம் 6. சிங்கப்பூர் ஆர்க்கிட் பார்க்கில் அன்னாசி. SINGAPORE - ORCHID PARK.

சிங்கப்பூரே குடியிருப்புகளுக்கு அடுத்து பூங்காக்கள் நிரம்பியதுதான். வீவகப் பேட்டை என்னும் வீடுகள் ஒரு காம்ளெக்ஸ் என்றால் பக்கத்திலேயே ஷாப்பிங் மால் ஒன்றும் அந்த வீவகப் பேட்டை வீடுகளைச் சுற்றிப் பூங்காக்களும் மரங்கள் சூழ்ந்த ஆனால் தெளிவான ரோடுகளும் இருக்கும்.

பலமாடிக் கட்டிடங்களில் குப்பையைக் கூட தனியான ஒரு குப்பை போடும் அறையில் சென்று மேலிருந்து தரைத்தளத்தில் இருக்கும் குப்பை சேகரிப்பு இடத்துக்குப் போட்டு விடலாம். பஞ்சதந்திரம் படத்தில் சலவைத் துணிகளை ஒரு கதவைத் திறந்து மேலிருந்து கீழாகப் போடுவார்கள் இல்லையா அதைப் போன்றது இது. கார்கள் நிறுத்தவும் தனிக் கட்டிடம்தான். ஒவ்வொரு வீவகப் பேட்டை வீடுகளுக்கும் பக்கத்திலேயே பல மாடிகள் கொண்ட கார் நிறுத்தும் தளங்கள் இருக்கின்றன. அதன் பக்கத்திலேயே பெட்ரோல் பங்கும் கூட இருக்கு. அங்கே நிரந்தரமான பணியும் கையில கொஞ்சம் காசும் இருந்தா போதும் ராஜ வாழ்க்கை வாழலாம்.

மலேஷியாவோட தேசிய மலரா செம்பருத்தி இருக்கமாதிரி சிங்கப்பூரின் தேசிய மலர் வண்டா மிஸ் ஜோகும் என்ற ஆர்க்கிட் மலர்தான். சிங்கப்பூரின் தேசிய ஆர்க்கிட் பூங்காவுக்கு ஒரு பொன்னான மாலை நேரத்தில் விசிட் பண்ணோம். மிக மென்மையான வாசனையோடு குளிர்ச்சியான மிகப் பெரும் ஆர்க்கிட் தோட்டம் அது. எண்டரன்ஸ் ஒரு நபருக்கு 5 வெள்ளி.


நம்மூரில் மிகப்பெரும் பணக்காரர்களின் இல்லத் திருமணங்களில் ஆர்க்கிட் மலரைக் கொடுத்து வரவேற்பார்கள். மிக காஸ்ட்லியும் கூட. ஆனால் நாம் அங்கே காணாத பல வகைகளும் இங்கே கொட்டிக் கிடந்தன, கிட்டத்தட்ட இங்கே 50 வகை இனத்தைக் சார்ந்த 226 வகையான ஆர்க்கிட் பூக்கள் இருக்கின்றன. முக்கால் வாசி கொடி வகைகள் மற்றவை தரையில் படர்ந்தவை.

நீளமான பற்றிப் படரும் கொடி. வெண்ணிலா க்ரிகிதி,  உலகத்திலேயே மிகப் பெரிய ஆர்க்கிட் க்ராமடோஃபைலம் ஸ்பீஷியோஸம், இலையில்லாத ஒரு வகை டானியோஃபைலம், ஜ்வெல்ஸ் என்று குறிப்பிடப்படுகின்ற அனொக்டாக்கிலஸ் நெஃபிலாஃபிலம், பல்போஃபைலம் வஜினேட்டம், பல்போஃபைலம் மெடுஸா, பல்போஃபைலம் லோபி, ஸ்பாதோக்ளோடீஸ் ப்ளிகாட்டா, எரியா பன்னே, எரியா புல்செலா, பேலனோசிஸ் கொனு சர்வி, இவற்றினூடே வண்டா மிஸ் ஜோகும் என்ற தேசிய மலரும் இடம் பெற்றிருந்தது. இந்த வகையை ஏக்னஸ் ஜோகும் என்ற ஒரு தாவர இயலாளர் கண்டுபிடித்ததாகவும் அதனால் அவர் பெயர் இடப்பட்டதாகவும் சொல்றாங்க.

1890 களில் இந்தப் பூக்கள் தேசிய அளவிலும் உலக அளவிலும் மிக அதிக அளவில் விரும்பப்பட்டதாம். அதுனால இத கட் பண்ணி எடுத்துட்டுப் போயி மலேயா, டச் ஈஸ்ட் இண்டீஸ், ஹவாய், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள்ல வளர்த்தாங்களாம். இத சைல்ட் ஆஃப் சிங்கப்பூர்னும் சொல்றாங்க.

இங்கே ஜிஞ்சர் பார்க் என்ற ஒரு பார்க்கும் ஆர்க்கிட் பூங்காவும் மிகப் பெரிய பரந்த புல்வெளியும் ஆர்ட்டிஃபிஷியல் ஓவல் சைஸ் குளத்தின் நடுவே அமைந்த ஓவல் ஸ்டேஜும் இருக்கின்றன. இந்தக் குளத்தைச் சுற்றி மாலை வேளையில் வெண்மையான நிறத்தில் ட்ரவுசர்களும் கையில்லாத பனியன்களும் அணிந்த சிங்கப்பூர் ஆண்கள் மற்றும் பெண்கள் கான்வாஸ் ஷூ அணிந்து வாக்கிங் போகின்றார்கள்.


ஸ்ப்ரிங்க் சீஸன் என்று ஒரு பகுதியில் க்ரீம், மஞ்சள் தங்கக் கலர் பூக்களும், சம்மர் சீஸன் என்று இன்னொரு பகுதியில் சிவப்பு பிங்க் பூக்களும், இலையுதிர்கால சீஸன் என்று வயலட் போன்ற நிறங்களும், குளிர் சீஸன் என்று வெள்ளை நீலப் பூக்களுமாக பகுதி பிரித்து வளர்க்கிறார்கள். 


மிகப் பெரும் விசிறி வாழைகளும் ஆலமரம்போல அதிகம் விழுதுகள் உள்ள மிகப் பெரும் மரமும் இருக்கு. குத்துச்செடிகளும் புதர்களும் கொடிகளும் அதிகம் இருக்கு. ஓடும் தண்ணீரில் கல் தாமரைகளும் அல்லிகளும் மலர்ந்திருக்க குழந்தை ஒன்று குனிந்து அமர்ந்திருப்பது போன்ற சிற்பம் அழகூட்டுகிறது.


பாதையின் ஆரம்பத்தில் இரு கொக்குகள் சிலைளாய் நிற்க நீர் வடியும்இடமும் ஒவ்வொரு இடமும் செல்ல நம் கடக்கும் அழகான பூச்செடி ஆர்ச்சுகளும் அவற்றின் வாசனையும் மாலை நேரத்தில் ஏதோ மாயலோக எஃபெக்டை உண்டு செய்கின்றன. செல்லும் பாதைஎல்லாம் எங்கு நோக்கினும் பூக்கள் பூக்கள் பூக்கள்தான். அதிலும் அங்கே இரு அன்னாசிகளும் கூட பூத்து இருந்தன அங்கே. அன்னாசியும் ஆர்க்கிட் வகை போலும். சில செடிகளில் நுனி சிவப்பாய்ப் பூத்துக்கொண்டே போக அதுவே கீழே பச்சை இலையாய் உருமாறி இருந்த காட்சிகளும் அற்புதம்.


அவற்றை எல்லாம் கண்டு களித்துவிட்டு கொஞ்சநேரம் அந்தப் பரந்த ( கோல்ஃப் மைதானம் போன்ற ) புல்வெளியில் அமர்ந்துவிட்டு முஸ்தபாவுக்கு வந்து பொருட்கள் வாங்கிக்கொண்டு வீடு வந்தோம்.

சிங்கப்பூருக்குச் சென்றிருந்த போது அங்கு செந்தோசா பீச், பட்டர்ஃப்ளை பார்க், அண்டர் வாட்டர் வேர்ல்டு, ஆர்க்கிட் பார்க், டார்ட்டாய்ஸ் பார்க் , ஜூராங்க் பேர்டு பார்க் எல்லாம் சென்று வந்தோம்.

ஆர்க்கிட் பார்க்கில் எடுத்த இன்னும் சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.
வண்டா மிஸ் ஜோகும். !
ஆமா அன்னாசி ஆர்க்கிட் வகையை சார்ந்ததா.

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க. 

1. மனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும் பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும். MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.

2. மனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும் பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும். ( தொடர்ச்சி ) MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.

3. மனம் கவரும் மலேஷியா – பாகம் 2. பெட்ரோனாஸ் ட்வின் டவர்ஸும் நேஷனல் ( மஸ்ஜித் நெகாரா ), ஜேமெக் மசூதிகளும். -MALAYSIA - PETRONAS, MASJID NEGARA, JAMEK MOSQUE.
 
4. மனம் கவரும் மலேஷியா பாகம் 3 கெந்திங் ஹைலாண்ட்ஸ். MALAYSIA - GENTING HIGHLANDS. 


இவற்றையும் பாருங்க :-

இன நல்லிணக்கம்.

சிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.

எங்க ராமு மாமாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

சல்கேட்டா ஆமையும் சிங்கப்பூரின் அதிர்ஷ்டமும். 

சீர் மிகு சிங்கப்பூர். பாகம் - 1. ஆமையும் முயலாமையும். 

சீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 2. ஜூராங்க் பறவைப் பூங்காவும் ஃப்ளெம்மிங்கோக்களின் நடனமும். SINGAPORE - JURONG BIRD PARK. 

சீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 3. :- மெர்லயன் சிலையும் மெரினா பே ரெசார்ட்டும். SINGAPORE - MERLION STATUE & MARINA BAY SANDS.  

சீர்மிகு சிங்கப்பூர் :- பாகம் 4. கோடையைக் கொண்டாட கோட்டா டிங்கி வாங்க. 

சீர்மிகு சிங்கப்பூர் :- பாகம் 5 . சிங்கைத் தமிழும் தமிழர்களும் தமிழ்ப்புத்தாண்டும். :- 

சீர்மிகு சிங்கப்பூர் – பாகம் 6. சிங்கப்பூர் ஆர்க்கிட் பார்க்கில் அன்னாசி. SINGAPORE - ORCHID PARK.

சீர்மிகு சிங்கப்பூர் - 7. செந்தோசாவும் ஆழ்கடல் உலகமும் டால்ஃபின் லாகூனும். SENTHOSA & DOLPHIN LAGOON SINGAPORE.

 சீர் மிகு சிங்கப்பூர் – பாகம் 8. மேக்ரிட்சி ரிசர்வாயர்.. SINGAPORE MACRITCHIE RESERVOIR PARK.

3 கருத்துகள் :

இராஜராஜேஸ்வரி சொன்னது…

சீர்மிகு சிங்கப்பூரின் அழகு மலர்களின்
சிறப்பான படங்களும் பகிர்வுகளும் அருமை..பாராட்டுக்கள்..!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ராஜி

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...