எனது நூல்கள்.

செவ்வாய், 3 நவம்பர், 2015

சீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 3. :- மெர்லயன் சிலையும் மெரினா பே ரெசார்ட்டும். SINGAPORE - MERLION STATUE & MARINA BAY SANDS.சீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 3.  :- மெர்லயன் சிலையும் மெரினா பே ரெசார்ட்டும்.  

சிங்கப்பூரைச் சுற்றிப் பார்க்க ஒரு நாள் மாலை சென்றிருந்தோம். முதலில் ஸ்ரீ தண்டாயுதபாணி கோயில் சென்று தரிசித்துவிட்டு  மெர்லயன் சிலையைப் பார்த்துவிட்டு அங்கே கொஞ்சம் ஷாப்பிங்க் செய்துவிட்டு வந்தோம்.

டாங்க் ரோடில் இருக்கும் இந்தக் கோயில் செட்டியார் கோயில் என்று அழைக்கப்படுகிறது. 1959 இல் கட்டப்பட்ட இது சிங்கப்பூரின் நேஷனல் மான்யுமெண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கே கொண்டு விக்கச் சென்ற நாட்டுக் கோட்டைச் செட்டியார் எனப்படும் நகரத்தார் பெருமக்கள் தமது இறைவனை வணங்கக் கட்டிய கோயில் இது. கிட்டங்களில் பணி புரிந்த நகரத்தார்கள் கூட்டமாகக் கூடி முடிவு செய்து வருடந்தோறும் தைப்பூசம் , நவராத்திரி, லட்சார்ச்சனை, ஸ்கந்தர் சஷ்டி, திருக்கார்த்திகை, வெள்ளி ரதம் இழுத்தல், காவடி பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் என நிகழ்த்துகிறார்கள்.

நாங்கள் போயிருந்தபோது சில மாதங்களுக்கு முன்னால்தான் கும்பாபிஷேகமும் தைப்பூசமும் கோலாகலமாக முடிந்திருந்தது. எனவே கோயில் முழுதும் பளிச் பளிச்சென்றிருந்தது. இது இந்தியக் கட்டடக் கலையைப் பின்பற்றியும் நகரத்தார் வீடுகளில் உள்ள கட்டடக் கலையைப் பின்பற்றியும் கட்டப்பட்டுள்ளது. உள் மேங்கோப்புகளில் மர சீலிங்க் இழைக்கப்பட்டு நல்ல கட்டுமானம்.

மெரினா பே ரெசார்ட்.

சிங்கப்பூர் என்ற பேர் சிங்கபுரா என்ற சமஸ்கிருத சொல்லிலிருந்து மலாயில் உருவானதுதான். சிங்கம் + புரம். சேர்த்து சிங்கப்பூர் ஆகிவிட்டது .அதனால் இதன் தேசியச் சின்னம் ஆகிவிட்டது.. இங்கே இரண்டு மெர்லயன்கள் சிலை உண்டு. ஒன்று எட்டரை மீட்டர் உயரமும் 70 டன் எடையும் கொண்டது இன்னொன்று இரண்டு மீட்டர் உயரம் கொண்ட குட்டி மெர்லயன். இவற்றைச் சுற்றிப் பூங்கா அமைக்கப்பட்டு அழகாகப் பராமரிக்கப்படுது. எதிரில் கடலும் அதன் பின் மெரினா பே சாண்ட்ஸும் இன்னும் பல கட்டிடங்களும் அழகூட்டுகின்றன. 1972 இல் இந்தச் சிலையை வடிவமைச்சவர் சிங்கப்பூர் சிற்பி லிம் நாங் செங். 2009  இல் இது மின்னல் தாக்கப்பட்டு சேதமானதால் திரும்ப வடிவமைச்சிருக்காங்க.

நேராக கடலைப் பார்த்தபடி செங்குத்தாக அமர்ந்திருக்கும் தோற்றத்தில் ஃபுல்லர்டன் ஹோட்டலின் முன் நிறுவப்பட்டுள்ள வெண்மையான சிலையின் வாயிலிருந்து நீர் வீழ்ச்சி கொட்டுவது இரவு விளக்கொளியில் மிக அழகு இதன் எதிரில் நின்று புகைப்படம் எடுக்காதவர்களோ அல்லது அங்கே கைவினைப் பொருட்கள் கடையில் மெர்லயன் சிலையை சிங்கை வந்ததற்கு அடையாள நினைவுச் சின்னமாக ( பேப்பர் வெயிட், கீ செயின், ஃப்ரிஜ்ஜில் ஒட்டும் மேக்னெட், வால் ஹாங்கர், பொம்மைகள், ஃப்ரேமிடப்பட்ட படங்கள், சிற்பம் போன்ற சிலைகள் ) வாங்கிச் செல்லாதவர்களோ குறைவு எனலாம்.

மெர்லயன் என்பதற்கு நீர்ச் சிங்கம் என்று பேர். சிங்க முகமும் மீன் உடலும் கொண்டதனால் இது கடல் சூழ் சிங்கையைக் காப்பாற்றும் கடல் சிங்கமாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.  இரண்டு முறை இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  

 மிக பிரம்மாண்டமாக மயக்கும் அழகோடு கம்பீரமாக கர்ஜனை செய்வது போல் இருக்கிறது இது.

இதே போல் செந்தோசா பீச்சிலும் ஒரு மெர்லயன் இருக்கு. மோனோ ரயிலில் போகும்போது அது இன்னும் பிரம்மாண்டமா தெரியும்.

மெரினா பே ஸாண்ட்ஸ் – இந்த ரெசார்ட்தான்  விலையுயர்ந்த கட்டுமானத்துக்காக உலகத்துலேயே இரண்டாவது இடத்தைப் பெற்றது. 

நாங்க சுவா சூ காங் லேருந்து எஸ் பி எஸ் ( சிங்கப்பூர் பஸ் சர்வீஸ் ) எஸ் எம் ஆர் டி பஸ் மூலமா க்கிட் பஞ்சாங் ரயில்வே ஸ்டேஷனை அடைஞ்சு எம் ஆர் டி மூலமா ( மாஸ் ரேபிட் ட்ரான்ஸிட் ) – எல் ஆர் டில ( லைட் ரெயில் ட்ரான்சிட் ) மூலமா மெரினா பேக்கு வந்தோம். 23 கிலோமீட்டரை 25 நிமிஷத்தில் கடந்து வந்தோம். இரண்டு பக்கமும் சீட்டுகள் நடுவில் ஸ்டாண்டிங். இந்த எண்டிலிருந்து அந்த எண்ட் வரைக்கும் பார்க்கலாம் போகலாம் வரலாம். ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ட்ரெயின் நிற்கும்போது கதவு திறக்குது. அதேபோல் தானே மூடிக்குது. ரொம்ப சிஸ்டமேட்டிக். எல்லாரும் செல்ஃபோனில் ெட்ஃபோன் மாட்டி பாட்டுக் கேட்டபடியேதான் வருகின்றார்கள். இஸ்லாம் மக்கள் அதிகம் என்பதால் தலையை ஸ்கார்ஃபால் அழகாக கவர் செய்து பின் செய்திருப்பார்கள்.

இங்கே ஒரு ட்ராவல் கார்ட் வாங்கி பஸ்ஸிலும் ட்ரெயினிலும் அதையே ஸ்வைப் செய்து உபயோகித்துக் கொள்ளலாம். பஸ் ஏறும்போது முன்பக்கம் இருக்கும் ஒரு மெஷினில் ஸ்வைப் செய்தால் அது காசை பிடித்துக்கொண்டு விடும். அதன் பின் ட்ரெயினில் போகணும் என்றாலும் ஸ்டேஷனிலேயே அதற்கு வழியில் ஸ்வைப் செய்துவிட்டுப் போக வேண்டும். காசு தீர்ந்துவிட்டால் ஒவ்வொரு ஸ்டேஷனிலும் இருக்கும் ஆஃபிசில் திரும்ப ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.

எங்கள் உறவினர் ஓரிரு நாள் வந்தபின் எங்களுக்கு டிக்கெட் வாங்கித் தந்துவிட்டதால் நாங்களே அதை அங்கங்கே ஸ்வைப் செய்தபடி பஸ்ஸிலும் ட்ரெயினிலும் போய் வந்தோம். மிக வித்யாசமான எக்ஸ்பீரியன்ஸ். டாக்ஸி எடுத்துப் போவதை விட இம்மாதிரி பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்டுகளில் செல்வது பலவகை அனுபவம் கிடைக்க உதவும் பர்சும் மிச்சமாகும்.

அங்கே கம்பீரமா மூன்று கட்டிடங்களா நின்று அவை மூன்றின் மேலும் ஒரு ப்ரம்மாண்டமான படகை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி வைச்சது மாதிரி இருந்தது. இதுல 2561 ரூம்கள் இருக்காம். ஸ்கை பார்க்,  கடைகள், பிரம்மாண்டமான நீச்சல் குளம், சூதாட்ட விடுதிகள்,கன்வென்ஷன் செண்டர், க்ளப், ஆர்ட் & சயின்ஸ் ம்யூசியம் எல்லாம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதுக்குள்ளே எல்லாம் போனா ஆயிரக்கணக்குல செலவாகும்கிறதாலயும் உறவினர் வீடு இருந்ததாலயும் பார்த்துவிட்டுத் திரும்பி விட்டோம். இங்கே ஒன்றும் வாங்கலை. எல்லாம் காஸ்ட்லி. இன் மேல் த்ில் இருக்கும் எண்ட்லெஸ் நீச்சல் குளத்துல நீந்திக் களிக்கவே வெளிநாட்டு டூரிஸ்டுகள் குவிகின்றார்களாம்..

மிக அழகான கட்டுமானம் கொண்ட மெரினா பே ரிசார்ட்  இரவு நேரத்தில் மிக அழகாக ஜொலிப்பதையும் மெர்லயன் பூங்காவிலிருந்து எடுத்து வந்தோம். மெர்லயன் பூங்காவும் மெரினா பே ரிசார்ட்டும் சிங்கப்பூரில் பார்க்க வேண்டிய இடங்கள். தவறாம பார்த்துடுங்க. 

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க. 

1. மனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும் பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும். MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.

2. மனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும் பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும். ( தொடர்ச்சி ) MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.

3. மனம் கவரும் மலேஷியா – பாகம் 2. பெட்ரோனாஸ் ட்வின் டவர்ஸும் நேஷனல் ( மஸ்ஜித் நெகாரா ), ஜேமெக் மசூதிகளும். -MALAYSIA - PETRONAS, MASJID NEGARA, JAMEK MOSQUE.
 
4. மனம் கவரும் மலேஷியா பாகம் 3 கெந்திங் ஹைலாண்ட்ஸ். MALAYSIA - GENTING HIGHLANDS. 


இவற்றையும் பாருங்க :-

இன நல்லிணக்கம்.

சிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.

எங்க ராமு மாமாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

சல்கேட்டா ஆமையும் சிங்கப்பூரின் அதிர்ஷ்டமும். 

சீர் மிகு சிங்கப்பூர். பாகம் - 1. ஆமையும் முயலாமையும். 

சீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 2. ஜூராங்க் பறவைப் பூங்காவும் ஃப்ளெம்மிங்கோக்களின் நடனமும். SINGAPORE - JURONG BIRD PARK. 

சீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 3. :- மெர்லயன் சிலையும் மெரினா பே ரெசார்ட்டும். SINGAPORE - MERLION STATUE & MARINA BAY SANDS.  

சீர்மிகு சிங்கப்பூர் :- பாகம் 4. கோடையைக் கொண்டாட கோட்டா டிங்கி வாங்க. 

சீர்மிகு சிங்கப்பூர் :- பாகம் 5 . சிங்கைத் தமிழும் தமிழர்களும் தமிழ்ப்புத்தாண்டும். :- 

சீர்மிகு சிங்கப்பூர் – பாகம் 6. சிங்கப்பூர் ஆர்க்கிட் பார்க்கில் அன்னாசி. SINGAPORE - ORCHID PARK.

சீர்மிகு சிங்கப்பூர் - 7. செந்தோசாவும் ஆழ்கடல் உலகமும் டால்ஃபின் லாகூனும். SENTHOSA & DOLPHIN LAGOON SINGAPORE.

 சீர் மிகு சிங்கப்பூர் – பாகம் 8. மேக்ரிட்சி ரிசர்வாயர்.. SINGAPORE MACRITCHIE RESERVOIR PARK.


10 கருத்துகள் :

துளசி கோபால் சொன்னது…

நல்ல சுத்தல்தான்! மாலை நேரங்களில் ஸான்ட்ஸ் ஹொட்டேலில் இருந்து ஒரு லைட்டிங் ஷோ நடக்கும். மெர்லயன் படிக்கட்டுகளில் உக்காந்து பார்க்கலாம். ஜோர்!

ரூபன் சொன்னது…

வணக்கம்
தங்களின் பயண அனுபவத்தை மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள். அதுவும் சிங்கப்பூர்... அழகிய தேசம்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி துள்சி :) அதெல்லாம் பார்த்தமான்னு தெரில. ஏன்னா எங்க பார்த்தாலும் லைட் வெளிச்சம்தான்.

நன்றி ரூபன் :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

‘தளிர்’ சுரேஷ் சொன்னது…

அருமையான தகவல்கள்! அழகான படங்கள்! பகிர்வுக்கு நன்றி!

ஆரூர் பாஸ்கர் சொன்னது…

அருமையான விவரங்கள்,..எனக்கு பழைய நினைவுகள் வந்தன.. நன்றி!

துளசி கோபால் சொன்னது…

தேனே... இங்கே கொஞ்சம் எட்டிப்பாருங்க. லைட் ஷோ வருது:-)

http://thulasidhalam.blogspot.com/2013/10/5.html

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இனிதான சுற்றுலா..... எங்களையும் அழைத்துப்போனதற்கு நன்றி.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சுரேஷ் சகோ

நன்றி ஆரூர் பாஸ்கர் சகோ

நன்றி துள்சி பார்த்தேன் :) படித்தேன் ரசித்தேன் :)

நன்றி வெங்கட் சகோ :)

Thenammai Lakshmanan சொன்னது…


வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...