எனது பதிமூன்று நூல்கள்

சனி, 17 அக்டோபர், 2015

திருவேங்கடநாதனின் தமிழ் சுப்ரபாதம்.

திருமலையில் குடிகொண்டிருக்கும் பெருமாளுக்கும் மகான் ராகவேந்திரருக்கும் பூர்வீகத்தில் திருவேங்கடநாதன் என்னும் திருப்பெயர் உண்டு. இருவருமே என் வணக்கத்துக்கும் ப்ரார்த்தனைக்கும் உரியவர்கள்.

எப்போது சுப்ரபாதத்தைக் கேட்டாலும் ஒரு பரவசம் ஏற்படும். ஆனால் அது முழுக்க முழுக்க சமஸ்கிருதத்தில் சொல்லப்படுவதால் முழுமையாகப் புரியாது. ஆனால் 98 ஆம் வருடம் என் அம்மா எம் எஸ் அம்மாவின் குரலில் தமிழில் ஒலிப்பதிவு செய்த இந்த சுப்ர பாதத்தை வழங்கினார்கள்.

அதைக் கேட்டதும் திருவேங்கடநாதனின் பேரழகும் பெருமாட்சியும் கவர டேப் ரெக்கார்டரை நிறுத்தி நிறுத்தி இதைக் கேட்டு பேப்பரில் எழுதி வைத்துக் கொண்டேன். டேப் ரெக்கார்டரில் தினம் காலை சுப்ரபாதம் போடும் போது கூடவே சொல்லியும் பழகிக் கொண்டேன்.

கிட்டத்தட்ட 18 வருடங்களாக மனப்பாடமாக தன்னையறியாமல் கடகடவென்று நான் சொல்லி வந்த ( அவ்வப்போது சில மாதங்கள் சொல்ல விட்டுப் போவதும் உண்டு ). சுப்ரபாதத்தை இந்த மாத பக்தி ஸ்பெஷல் இணைப்பாகப் பார்த்ததும் மகிழ்ந்தேன்.நான் ஒரு வேங்கடேச அடிமை :) சொந்தக்காரர்களுக்கு எல்லாம் நான் படி எடுத்ததை ஜெராக்ஸ் எடுத்துக் கொடுத்தேன்.

இந்த தமிழ் சுப்ரபாதம் பாடவும் கேட்டவும் இனிமை மிக மிக இனிமை. இன்பத் தமிழில் தேனும் பாலும் பாய்வது போல இருக்கும்.
இது முதன்முதலில் படி எடுத்தது. ரஃப் காப்பி.
பக்தி ஸ்பெஷலில் கோலங்கள் நிவேதனக் குறிப்புகள் எழுதி வருவதால் எனக்கு ஒரு காப்பி அனுப்பி வைப்பார்கள். ஆனால் நான் வெளியூர் பயணங்களில் இருந்ததால் அந்த இஷ்யூ மட்டும் (  கீழே போஸ்ட் பாக்ஸில் கிடந்ததை யாராவது சுட்டுட்டாங்களா தெரியலை :)  கிடைக்கலை. நவராத்திரி இதழ் மட்டும் கிடைத்தது. எனவே குமுதம் திரு. ஜெயப்ப்ரியன் நாகராஜன்,  அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது உடனே கூரியரில் அலுவலகத்தில் இருந்து அனுப்பச் செய்திருக்கிறார்கள்.

பார்த்தால் அதில் ஸ்பெஷல் இணைப்பாக வேங்கடேச சுப்ரபாதம். பின் என்ன  இந்தப் புரட்டாசி கடைசி சனிக்கிழமையில் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்னு உங்களுக்கும் பகிர்ந்திருக்கேன்.

தமிழ் சுப்ரபாதத்தைப் படிச்சுப் பாருங்க. ஆழ்வார்களைப் போல ஆண்டாளைப் போல வேங்கடேச மகிமையில் (ப்ரேமையில் ) ஆழ்ந்து வாழ்க வளமுடன். :)


7 கருத்துகள்:

 1. வாய்ப்பு கிடைக்கும்போது மகாமகத் தீர்த்தவாரி கோயில்களைக் காண அழைக்கிறேன்.
  http://drbjambulingam.blogspot.com/2015/10/2016.html

  பதிலளிநீக்கு
 2. வாய்ப்பு கிடைக்கும்போது மகாமகத் தீர்த்தவாரி கோயில்களைக் காண அழைக்கிறேன்.
  http://drbjambulingam.blogspot.com/2015/10/2016.html

  பதிலளிநீக்கு
 3. நன்றி ஜம்பு சார் படித்தேன் அருமை

  நன்றி ஜெயக்குமார் சகோ

  நன்றி ஸ்ரீராம். !

  பதிலளிநீக்கு
 4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...