எனது நூல்கள்.

வியாழன், 29 அக்டோபர், 2015

சீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 2. ஜூராங்க் பறவைப் பூங்காவும் ஃப்ளெம்மிங்கோக்களின் நடனமும். SINGAPORE - JURONG BIRD PARK.

சீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 2. ஜூராங்க் பறவைப் பூங்காவும் ஃப்ளெம்மிங்கோக்களின் நடனமும்.

சிங்கப்பூரின் பெருமைகளில் ஒன்று அங்கே இருக்கும் விதம்விதமான பூங்காக்கள். ஜுராங்க் பேர்ட் பார்க் அவற்றில் ஒன்று. இதில் விதம் விதமான பறவைகள். பல வண்ணங்களில் பல அளவுகளில் கண்ணைக் கவர்கின்றன. 1971 இல் 3.5 மில்லியன் டாலர் செலவில் அமைக்கப்பட்ட இதில் 380 ஸ்பீஸிசை சேர்ந்த 5000 விலங்குகள் பறவைகள் இருக்குது.

அங்கே டூரிஸ்டுகளைக் கவர பறவை மனிதர் ( BIRD MAN ) ஒருவரையும் உலவ விட்டிருக்கின்றார்கள். முதலில் ஹை ஃப்ளையர்ஸ் ஷோ என்ற பறவை ஷோ ஒன்று நடைபெறுகிறது. மிகப் பெரும் காலரியில் மக்கள் அமர்ந்திருக்க கீழே போல்ஸ் ஆம்பித்யேட்டர் ( POOLS AMPHITHEATRE ) என்ற இடத்தில் பறவைப் பயிற்சியாளர்கள் சொன்னபடி பறவைகள் பறக்கின்றன. மொத்தக் கூட்டத்தையும் முருகன் மயில்மேல் உலகைச் சுற்றி வந்தது போலச் சுற்றி வந்து அவர்கள் கைகளிலேயே அமர்கின்றன. அவர்கள் இடும் கட்டளைகளை நிறைவேற்றி கம்பி வளையத்துக்குள் புகுகின்றன. அடுத்து நாரைகளும் ஃப்ளெம்மிங்கோக்களும் அலகு பெருத்த இருவாட்சிகளும் – ஹார்ன்பில்ஸும் இசைக்கப்படும் இசைக்கேற்ப விதம் விதமாய் பாடி ஆடிப் பறந்து  நம்மைக் களிப்புறச் செய்கின்றன.

மக்கள் அமரும் பகுதியில் மிகப் பெரும் ராட்சசக் குடைகளை நிறுவி இருக்கிறார்கள். அவற்றினூடாக நம் தலை மேல் பறவைகள் பறந்து சுற்றிச் செல்வது த்ரில் கூட்டம் அழகு. காலரியில் நான்கு இடங்களில் வெள்ளை மஞ்சள் க்ரே நீலக் கலர் வளையத்தை நால்வர்  பிடித்திருக்க அந்தப் பறவை பயிற்சியாளரின் கையிலிருந்து வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போலப் பறந்து வந்து ஒவ்வொரு வளையமாகப் புகுந்து புறப்பட்டு வெளியேறிச் செல்கிறது. இதுபோல் அடுத்தடுத்துப் பறவைகள் வளையத்துள் பாய மக்கள் கூட்டத்தில் இதைப் பார்த்து ஹோ என்று ஒரே சந்தோஷ இரைச்சல். ஒரே எக்கோ ஆகுது.மிக அருமையான பயிற்சி.

இங்கே மோனோ ரயிலும் செயற்கை நீர் வீழ்ச்சியும் ஏரிகளும் செயற்கைக் குளங்களும் இருக்கின்றன. 


கூண்டுகளிலும் விதம் விதமான வண்ணங்களில் பஞ்சவர்ணக் கிளிகளும் குருவிகளும்  இரட்டை வால் குருவிகளும், துடுப்பு வாயன்கள் எனப்படும் ஸ்பூன்பில்களும்,வெண் கழுத்து நாரைகளும்,மலை மைனாக்களும் செம்போத்துகளும், வெண்புறாக்களும், மணிப்புறாக்களும் , தூங்கணாங்குருவிகளும், கதிர்க் குருவிகளும், குயில்களும், வாத்துகளும், கிளிகளும், மாடப்புறாக்களும், தேன் சிட்டுக்களும் ராபினும் ரெயின்போ லோரிகீட்டுகளும்,ஹம்போல்ட், ராக் ஹோப்பர், மேக்கரோனி,  கானம் பாடிக்கொண்டிருக்கின்றன. 

இன்னும் கழுகு, ராஜாளி, வல்லூறுகள் , கருடன் போன்ற பறவைகளையும் அவை வேட்டையாடுவதையும் காணலாம்.

இரவுப் பறவைகளுக்கு என்று செயற்கை இருளில் கூண்டுகள் வடிவமைக்கப்பட்டிருக்கு. இதில் ஆந்தைகள், கூகைகள், கோட்டான்கள், வவ்வால்கள், மீன் ஆந்தைகள், ஸ்னோவி ஆந்தைகள், நைட் ஹெரான்ஸ், ஆகியன இருக்கின்றன.

செயற்கையா வடிவமைக்கப்பட்ட ஆஃப்ரிகன் வாட்டர் ஃபால் பக்கமுள்ள ஏரிகளில் நாரைகளும் ஃப்ளெமிங்கோக்களும் வெண்ணிற மற்றும் கறுப்பு அன்னங்களும்  அரசாட்சி செலுத்துகின்றன. 


இன்னும் டைனோசர்களின் வழித் தோன்றல்கள்னு சொல்லப்படக்கூடிய வான்கோழி, கினிக் கோழி, ஈமு கோழி, ரியா கோழி, நெருப்புக் கோழி ஆகியனவும் இருக்கின்றன. கிங் பெங்குயின் ஆஃப்ரிகன் பெங்குயின்
ஆகியன வளர்க்கப்படுது.

இங்கே குறிப்பிட்ட பறவைகளுக்கு படமெடுக்கும் இடத்தில் சிறிது பணம் செலுத்தி நாமே உணவளிக்கலாம். மேலும் பறவை மனிதனோடு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். சிறப்பா பறவைகளைக் கையில் ஏந்தி அல்லது தோளில் ஏந்தி அல்லது ஒரு குச்சியில் நாலைந்து பறவைகள் நிற்க கையில் பிடித்தபடி ஃபோட்டோ எடுத்துக் கொள்ளலாம். உடம்பில் மஞ்சள் வர்ணமும். இறக்கையில் ஆகாய நீலமும் வெண்முகமும் சாம்பல் கண்ணும் கறுப்பு அலகும் தாடையும் கொண்ட கிளிகள் கொள்ளை அழகு.பறவைச் சிலைகளும் அங்கங்கே அமைக்கப்பட்டிருக்கு. 


வேஸ்டைப் போடும் குப்பைத் தொட்டி கூட பறவை அமைப்புல இருக்கு.

ஆதிவாசிகளின் உருவம் சிலைகளா வடிக்கப்பட்டிருக்கு. சிறுவர்கள், கவசமணிந்த வீரர்கள், வீட்டில் அமர்ந்திருக்கும் பெண்கள், மரத்தில் ஏறி இருக்கும் சிறுவன், மிகப் பெரும் ஈட்டியை ஏந்தி இருக்கும் வீரன் என்று சிலைகள் வடிவமைக்கப்பட்டிருக்கு.

சுருள்சுருளா வாழைமரம் காய்ச்சுத் தொங்குறதும். லோப்ஸ்டர் க்ளா ( loabster’s claw ) – நண்டு நகம்னு சொல்லப்படக்கூடிய ஹெலிகோனியா பூக்களையும் இலைகளே மஞ்சளாகவும் பீட்ரூட் கலரிலும் பூக்கக்கூடிய க்ரோட்டன்ஸுகளையும் இன்ன பிற பாதுகாக்கப்பட்ட செடி வகைகளையும் பார்த்தோம்.

 7 வகையான நாரைகளும் டால்மேஷியன் பெலிக்கன்ஸ் எனப்படும் நாரைகளும் இங்கே வளர்க்கப்படுது. 

அதில் அவை நீரில் துளைந்தாடுவதும் அலகை உப்பியபடி அமர்ந்திருப்பதும் மேலும் கீழும் உலவுவதும் அழகு. 


தண்ணீருக்குள் அவை இரை பிடித்துண்ணுவதையும் கண்ணாடியால் அமைக்கப்பட்டிருக்கும் செயற்கை நீர்த் தேக்கத்தில் கண்டு ரசிக்கலாம்.


அவற்றின் எதிரே உணவுக்கூடம் இருக்கு. அங்கே அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டே ரசிக்கலாம்.

வெய்யில் சுட்டெரிக்க நீர் வீழ்ச்சியின் அருகில் ஒன்றே போல கழுத்தை வளைத்துத் தலையைச் சாய்த்து நின்றிருக்கும் கரீபியன் ஃப்ளெமிங்கோக்களையும் தங்கள் உயரமான கால்களை மாற்றிப் பாவியபடி அவை நடந்து செல்வதே அவற்றின் நடனம் போலிருக்கும் அழகையும்  கண்டு களிக்கலாம். 


இந்த சம்மர்ல இதுபோல குளிர்ச்சியான பறவைப் பூங்காவுக்குப் போய் பறவை நடனத்தைக் கண்டு களிச்சு கூலாக்கிக்கலாம். சிங்கப்பூருக்கு ஒரு ட்ரிப் அடிங்க. ஜுராங்க் பேர்ட் பார்க்கை பார்த்துட்டு வாங்க. 

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க. 

1. மனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும் பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும். MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.

2. மனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும் பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும். ( தொடர்ச்சி ) MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.

3. மனம் கவரும் மலேஷியா – பாகம் 2. பெட்ரோனாஸ் ட்வின் டவர்ஸும் நேஷனல் ( மஸ்ஜித் நெகாரா ), ஜேமெக் மசூதிகளும். -MALAYSIA - PETRONAS, MASJID NEGARA, JAMEK MOSQUE.
 
4. மனம் கவரும் மலேஷியா பாகம் 3 கெந்திங் ஹைலாண்ட்ஸ். MALAYSIA - GENTING HIGHLANDS. 


இவற்றையும் பாருங்க :-

இன நல்லிணக்கம்.

சிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.

எங்க ராமு மாமாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

சல்கேட்டா ஆமையும் சிங்கப்பூரின் அதிர்ஷ்டமும். 

சீர் மிகு சிங்கப்பூர். பாகம் - 1. ஆமையும் முயலாமையும். 

சீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 2. ஜூராங்க் பறவைப் பூங்காவும் ஃப்ளெம்மிங்கோக்களின் நடனமும். SINGAPORE - JURONG BIRD PARK. 

சீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 3. :- மெர்லயன் சிலையும் மெரினா பே ரெசார்ட்டும். SINGAPORE - MERLION STATUE & MARINA BAY SANDS.  

சீர்மிகு சிங்கப்பூர் :- பாகம் 4. கோடையைக் கொண்டாட கோட்டா டிங்கி வாங்க. 

சீர்மிகு சிங்கப்பூர் :- பாகம் 5 . சிங்கைத் தமிழும் தமிழர்களும் தமிழ்ப்புத்தாண்டும். :- 

சீர்மிகு சிங்கப்பூர் – பாகம் 6. சிங்கப்பூர் ஆர்க்கிட் பார்க்கில் அன்னாசி. SINGAPORE - ORCHID PARK.

சீர்மிகு சிங்கப்பூர் - 7. செந்தோசாவும் ஆழ்கடல் உலகமும் டால்ஃபின் லாகூனும். SENTHOSA & DOLPHIN LAGOON SINGAPORE.

 சீர் மிகு சிங்கப்பூர் – பாகம் 8. மேக்ரிட்சி ரிசர்வாயர்.. SINGAPORE MACRITCHIE RESERVOIR PARK.


9 கருத்துகள் :

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

உண்மையான நபர்களா சிலைகளா என்று வித்தியாசம் தெரியாத அளவு உள்ளன. புகைப்படங்கள் மிகவும் அருமை. நன்றி.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

மிக அழகாக எடுக்கப்பட்ட படங்களுடன் பயணப்பகிர்வு சிறப்பாக அமைந்தது! நன்றி!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

படங்கள் மிக அழகு சகோ! தகவல்களும்...அந்த காட்டுவாசி மனிதச் சிலைகள் தத்ரூபமாக இருக்கிறது...பகிர்வுக்கு மிக்க நன்றி...

துளசி கோபால் சொன்னது…

படங்கள் எல்லாம் அட்டகாசம்! நாங்க போய் கால் நூற்றாண்டு ஆச்சு. இப்போ இன்னும் ரொம்ப அழகா இருக்கே! இன்னொருக்காப் போகத்தான் வேணும்!

ராமலக்ஷ்மி சொன்னது…

சிங்கப்பூரில் எனக்கு மிகப் பிடித்தமான இடம்:). நான்கு மணி நேரங்கள் இருந்தும் படம் எடுக்க எனக்கு நேரம் போதுமானதாய் இல்லை.

பகிர்வு அருமை.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஜம்பு சார்

நன்றி சுரேஷ் சகோ

நன்றி துளசி சகோ & கீத்ஸ்.

கட்டாயம் போய் வாங்க துளசி :)

ஆம் ராமலெக்ஷ்மி . எவ்ளோ நேரம் இருந்தாலும் அங்கே பத்தாதுதான். அவ்ளோ பெரிசா இருக்கு :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அழகான படங்கள். உங்கள் மூலம் நானும் இவ்விடங்களுக்குச் சென்ற உணர்வு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி வெங்கட் சகோ

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...