எனது நூல்கள்.

புதன், 21 அக்டோபர், 2015

மனம் கவரும் மலேஷியா – பாகம் 2. பெட்ரோனாஸ் ட்வின் டவர்ஸும் நேஷனல் ( மஸ்ஜித் நெகாரா ), ஜேமெக் மசூதிகளும். -MALAYSIA - PETRONAS, MASJID NEGARA, JAMEK MOSQUE.

மனம் கவரும் மலேஷியா – பாகம் 2. பெட்ரோனாஸ் ட்வின் டவர்ஸும் நேஷனல் ( மஸ்ஜித் நெகாரா ), ஜேமெக் மசூதிகளும். 

ஹனீஃபா ட்ரேட் செண்டரில் ஷாப்பிங் முடித்துவிட்டு சாவகாசமாக ட்வின் டவர்ஸுக்கு டிக்கெட் புக் செய்யப் போனால் காலையில்தான் செய்வார்கள். அதுவும் புக் செய்து அவர்கள் மறுநாள் குறிப்பிட்ட டைம் கொடுத்தபின் அந்த நேரத்துக்குத்தான் சென்று பார்க்கலாம் என்று சொன்னார்கள்.

எண்ட்ராப்மெண்ட் என்ற ஹாலிவுட் படத்தில் மிக உயரமான இந்த டவர்ஸைப் பார்த்துவிட்டு இதை நேரில் பார்க்கும் நாளுக்காகக் காத்திருந்தேன். மாலை நேர வெய்யிலில் சில்வர் க்ரே கலரில் இரட்டைக் கோபுரங்களும் வெள்ளிச் சிலைகள் போல மின்னின. ஊரைச் சுற்றிச் சுற்றி நாம் வந்தாலும் நம்மை இந்த டவர்கள் கண்காணித்துக் கொண்டிருப்பது போலவே இருக்கும். மிக கம்பீரமாக நின்றிருந்த இந்த பெட்ரோனாஸ் டவர்ஸைக் கண்டதும் மயங்கினேன் என்றுதான் சொல்லணும். அவ்வளவு நேர்த்தியான வடிவமைப்பு.


மாலை நேரம் என்பதால் கொஞ்சம் கூட்டம் அதிகம்தான். வேலை முடித்து செல்வோரும் சுற்றுலாப் பயணிகளுமாக நிறைந்து இருந்தது சூர்யா கே எல் சி சி செண்டர். இது பெட்ரோனாஸ் டவர்ஸின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள மால். இங்கே எல்லாம் கடைகள் பிரம்மாண்டம் மற்றும் விலை ரொம்ப காஸ்ட்லி. ஸ்டோர்சில் ஷாப்பிங்க் செய்த நாம் இதை சுற்றிப் பார்க்கவே போனோம். ஷூக்களும் மேக்கப் பொருள் கடைகளும் உணவகங்களும் அணிமணி ஆடையகமுமாக ஜொலித்துக் கொண்டிருந்தது இந்த இரட்டைக் கோபுரம்.

இதை நகரின் எங்கிருந்தும் பார்க்கலாம். தட்டுப்படாமல் போகவே போகாது. எமிரேட்ஸின் புர்ஜ் கலிஃபா போல் போகுமிடமெல்லாம் தொடரும். இது மலேஷியாவில் பெரிய இரட்டைக் கோபுரம். மற்றும் ஆசிய அளவில் புர்ஜ் கலீஃபா, சியர்ஸ் டவர்ஸ், தாய்பே என்ற வரிசையில் ஐந்தாவது இடம்.

1992 இல் ஆரம்பிச்சு 1996 இல் முடிச்சு 1997 இல் இதன் ஊழியர்கள் ( பெட்ரோனாஸ் என்ற பெட்ரோலிய நிறுவன ஊழியர்கள் ) இதில் அமைக்கப்பட்ட அலுவலகத்தில் வேலை செய்ய ஆரம்பிச்சுட்டாலும் இது முறைப்படி அப்போதைய மலேஷிய பிரதமர் மகாதீர் பின் முகம்மதுவால திறந்து வைக்கப்பட்டிருக்கு.

இதை வடிவமைச்சவர் சீசர் பெலி என்ற அமெரிக்க பொறியாளர். இஸ்லாமியக் கட்டடக் கலையின்படி கட்டப்பட்டுள்ளது. இதன் அஸ்திவாரத்தை பாஞ்சி சொலெதாஞ்சி என்ற பிரிட்டிஷ் கம்பெனி செய்து கொடுத்துருக்கு. சுமார் 100 அடி ஆழம் தோண்டி டன் டன்னா மண் அள்ளி டன் டன்னா கான்க்ரீட் ஊத்தி அஸ்திவாரத்தை பலப்படுத்தி இருக்கு. அதன் பின் மேற்கு கோபுரத்தை ஹசாமா கார்ப்பரேஷனும் கிழக்கு கோபுரத்தை சாம்சங் & குக்டாங் என்னும் நிறுவனங்களும் ஏற்று கட்டியுள்ளன. 
இரண்டு டவர்ஸும் ரப் எல் ஹிசப் ( RUB EL HIZB ) என்ற குறியீட்டின் படி கட்டப்பட்டிருக்கு. வானளாவி நிற்கும் இது பூமியின் நிலையா இருக்கவும் காற்றை எதிர்த்தும் சமாளித்தும் இருக்கும் வகையில் இப்படி அமைக்கப்பட்டிருக்கு.

கோலாலம்பூரின் மிகப் பெரும் டவரான சென்ரல் பிசினஸ் டிஸ்ட்ரிக்ட் எனப்படும் டவரை விட இது உயரமா அமைஞ்சிருக்கு. அதிலும் மேற்கு கோபுரத்தை விட கிழக்கு கோபுரம் சீக்கிரம் எழும்பி இருக்கு.

இதோட ஸ்பெஷல் என்னன்னா இங்கே மற்ற டவர்ஸில் இல்லாத ஒரு சிறப்பு இருக்கு அதுதான் வான் பாலம்.- ஸ்கை ப்ரிட்ஜ் இது இந்த இரண்டு டவர்ஸையும் 41, 42 ஆவது மாடிகள்ல இணைக்குது. இது எதுக்குன்னா காத்து அதிகமா அசைக்கும் சமையங்களில் இந்த இரண்டு டவர்ஸுக்கும் சப்போர்ட் போல அமைஞ்சிருக்கு. மேலும் ஒரு கட்டிடத்துல பாதிப்புன்னா அடுத்த கட்டிடத்துக்கு இதன் வழியா போகலாம். 

இதப் பார்க்கவரும் சுற்றுலாப் பயணிகள் தனியா கட்டணம் கட்டினா அதுல நடந்து கோலாலம்பூரின் முழு அழகையும் கண்டு களிக்கலாம். அதுக்குத்தான் ஏகப்பட்ட க்யூ, வரிசை கூட்டம். அதுவும் மறுநாள் பார்க்க முதல்நாளே க்யூவில் பலமணி நேரம் நின்று பதிவு செய்துக்கணும். யார் போறாங்களோ அவங்களோட ஐடி எல்லாம் எடுத்துட்டுப் போகணும். வேறு யாரும் அவங்களுக்குப் பதிலா நிக்க முடியாது. முதலில் வரும் 1000 பேருக்குத்தான் அனுமதி. ஃபர்ஸ்ட் கம்ஸ் ஃபர்ஸ்ட் சர்வ்ட் பேசிஸ்ல கிடைக்கும். இல்லாட்டி கிடைக்காது.

அங்கே பதிவு செய்யக் காத்திருந்த நேரத்துல பக்கத்துல சில உணவங்கள் இருந்தன. மற்ற ஃப்ளோர்களில் வேலை செய்பவர்களும் காத்திருந்தவர்களுமே அந்த டப்பாக்களில் அடைக்கப்பட்டிருந்த மலேஷிய காலை உணவான ஃப்ரைட் சைனீஸ் நூடுல்ஸையும் முர்தாபாக் என்ற ஸ்டஃப்ட் பராத்தாக்களையும்,  ( ஆயிஸ்டர் ஆம்லெட், ஃபிஷ் ஹெட் கறி எல்லாம் இந்தூர்ல நல்லா இருக்கும்னு சொன்னாங்க ஆனா ட்ரை பண்ணல. ) நாஸி லெமாக் நு சொல்லப்படக்கூடிய தேங்காய்ப் பாலில் வேகவைத்த சாதம் முட்டை, வறுத்த சிக்கன் விங்ஸை வாங்கி சாப்பிட்டார்கள். சிலர் குளிர்பானங்களையும் சாண்ட்விச்சுகளையும் சாப்பிட்டார்கள்.

பார்த்துக் கொண்டிருக்கும்போதே மறுநாள் காலைக்கான இடம் முடிந்துவிட்டதால் மறுநாள் மாலை அல்லது அதற்கு அடுத்த நாள் காலைதான் பார்க்க முடியும் என்று சொல்லி விட்டார்கள். நமக்கோ மறுநாள் மதியம் ஃப்ளைட். பாதி கும்பல் ஏமாற்றத்துடன் கலைய நாமும் அடடா தெரிந்திருந்தால் முன்பே காலையில் வந்து இங்கே புக் செய்துவிட்டு ஜெண்டிங் சென்றிருக்கலாமே என்று நினைத்தோம்.

சரி சென்றதற்கு ட்வின் டவர்ஸில் காலையாவது பதித்தோமே என்று நினைத்துக் கொண்டு அதன் மற்ற அம்சங்களை புகைப்படம் எடுத்துக் கொண்டு கீழே இருக்கும் சூர்யா கே எல் சிசி பார்க்கை ரசித்தபடி இறங்கினோம்.

ஒரு விதமான எலிமெண்ட்ஸ் அல்லது பாண்ட்ஸ் அடிப்படையில் இதன் மேல் இதன் லிப்ட்ஸும் அமைக்கப்பட்டிருக்கு. அதாவது டபுள் டெக்கர் லிஃப்ட். கீழ்த்தளம் & மேல்தளம் இரண்டிலும் ஒற்றைப் படை அல்லது இரட்டைப் படை எண் கொண்ட தளத்தில் இறங்கிக்கலாம். அடுத்த ஃப்ளோருக்கு போகணுமா நடந்து போயிக்கலாம். செம ஸ்மார்ட் இல்ல.

மலேஷியாவில் இஸ்டானா நிகாரா ( ஸ்டேட் பேலஸ் – ராயல் மியூசியம் ), தெ நேஷனல் மாஸ்க் ( மஸ்ஜித் நெகாரா மசூதி ) , ஜேமெக் மாஸ்க் ( மசூதி ), ஆகியன குறிப்பிடத்தக்கன.

இந்த மாஸ்குகளில் வெள்ளிக்கிழமைகளில் மதியத் தொழுகை நடைபெறும் சமயம் கடந்தேன். இஸ்லாமிய தேசம் என்பதாலும் இஸ்லாமியப் பெருமக்கள் நிறைந்திருப்பதாலும் கடை கண்ணிகள் எல்லா இடத்திலும் வெள்ளிக்கிழமை மதியத் தொழுகை சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. நாம் மோனோ ரயிலில் மற்றும் பேருந்தில் சென்றபோது அவர்களின் தொழுகையையும் அந்த பிரசித்தி பெற்ற மசூதிகளையும் காண முடிந்தது.

முதல் நாள் இரவு மலேஷியாவின் தேசிய சின்னமான பெரிங்கேடன் ( NATIONAL MONUMENT – TUGU PERINGATAN NEGARA MALAYSIA ) நெகரா  வைப் பார்த்துவிட்டு அதன் பக்கத்திலிருந்த நேஷனல் மாஸ்கைப் ( மஸ்ஜித் நெகாரா ) பார்த்தோம். இரண்டுமே மிக அழகான கட்டிடக் கலை அமைப்பு. தேசியச் சின்னமான பெரிங்கேடன் நெகாரா ஒரு டோம் அமைப்பில் உள்ள கட்டிடமாக இருக்கு அதன் வெளிப்புறம் இரு புலிகள் அந்த சின்னத்தைக் காத்துக் கொண்டு இருக்கு.

நெகாரா மஸ்ஜித் ஒரு மாதிரி தாமரை மலர்களைக் கவிழ்த்த ஷேப்பில் இருக்கு அதன் கோபுரம். அதோட இதழ்கள் இரவில் விளக்கொளியில் மின்னியதைப் படம் பிடித்தேன். மறுநாள் மலேஷியாவின் மிகப் புராதனமான ( சுல்தான் இப்ராஹிம் ஜேமெக் ) ஜேமெக் மசூதியில் மக்கள் தொழுது கொண்டிருந்ததைப் படம் பிடித்தேன். ரோட்டோரத்தில் அமைந்திருக்கும் வண்ணக்குடைகளாலான கடைவாசிகள் முக்கால்வாசிப் பேர் தலையில் குல்லா அணிந்து தொழுத காட்சி விவரிக்கவொண்ணா அழகாக இருந்தது.

பசுமையான ஊர் மலேஷியா. பசிய ரப்பர் தோட்டங்களும் அமைந்த ஊர். அந்த ஊரில் போன நூற்றாண்டில் பிழைக்கச் சென்ற பல இந்திய முகங்களைக் காண முடிந்தது. தமிழிலும் பேச முடிந்தது. மிக அழகான அருமையான ட்ரிப்பாக அமைந்தது ட்வின் டவர்ஸில் ஏறியும் நடந்து பார்க்கவில்லையே என்ற குறையைத் தவிர வேறொன்றும் குறை இல்லை. அடுத்தமுறை சென்றால் முன்பே புக் செய்துவிட்டுப் பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு ப்ளைட் ஏறினோம். 


டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க. 

1. மனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும் பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும். MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.

2. மனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும் பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும். ( தொடர்ச்சி ) MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.

3. மனம் கவரும் மலேஷியா – பாகம் 2. பெட்ரோனாஸ் ட்வின் டவர்ஸும் நேஷனல் ( மஸ்ஜித் நெகாரா ), ஜேமெக் மசூதிகளும். -MALAYSIA - PETRONAS, MASJID NEGARA, JAMEK MOSQUE.
 
4. மனம் கவரும் மலேஷியா பாகம் 3 கெந்திங் ஹைலாண்ட்ஸ். MALAYSIA - GENTING HIGHLANDS. 


இவற்றையும் பாருங்க :-

இன நல்லிணக்கம்.

சிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.

எங்க ராமு மாமாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

சல்கேட்டா ஆமையும் சிங்கப்பூரின் அதிர்ஷ்டமும். 

சீர் மிகு சிங்கப்பூர். பாகம் - 1. ஆமையும் முயலாமையும். 

சீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 2. ஜூராங்க் பறவைப் பூங்காவும் ஃப்ளெம்மிங்கோக்களின் நடனமும். SINGAPORE - JURONG BIRD PARK. 

சீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 3. :- மெர்லயன் சிலையும் மெரினா பே ரெசார்ட்டும். SINGAPORE - MERLION STATUE & MARINA BAY SANDS.  

சீர்மிகு சிங்கப்பூர் :- பாகம் 4. கோடையைக் கொண்டாட கோட்டா டிங்கி வாங்க. 

சீர்மிகு சிங்கப்பூர் :- பாகம் 5 . சிங்கைத் தமிழும் தமிழர்களும் தமிழ்ப்புத்தாண்டும். :- 

சீர்மிகு சிங்கப்பூர் – பாகம் 6. சிங்கப்பூர் ஆர்க்கிட் பார்க்கில் அன்னாசி. SINGAPORE - ORCHID PARK.

சீர்மிகு சிங்கப்பூர் - 7. செந்தோசாவும் ஆழ்கடல் உலகமும் டால்ஃபின் லாகூனும். SENTHOSA & DOLPHIN LAGOON SINGAPORE.

 சீர் மிகு சிங்கப்பூர் – பாகம் 8. மேக்ரிட்சி ரிசர்வாயர்.. SINGAPORE MACRITCHIE RESERVOIR PARK.

9 கருத்துகள் :

Ramani S சொன்னது…

நானும் குடும்பத்துடன் சமீபத்தில்தான்
சென்று வந்ததால் இரசித்துப் படிக்க முடிந்தது
படங்களுடன் அருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள்
பகிர்வுக்குக் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

Dr B Jambulingam சொன்னது…

நல்ல பயணம். அருமையான பகிர்வு. நன்றி.

துளசி கோபால் சொன்னது…

இரவு நேர மசூதி ஃபோட்டோ சூப்பர்! நாங்க பகலில் போனோம்.

இரட்டை கோபுர அனுபவமும் மசூதி அனுபவமும் இங்கே. பார்த்துட்டுச் சொல்லுங்க.

http://thulasidhalam.blogspot.co.nz/2013/08/5.html

http://thulasidhalam.blogspot.co.nz/2013/09/13.html

சரஸ்வதி ராஜேந்திரன் சொன்னது…

நேர்த்தியான படபிடிப்பு ,மலேஷியாவை சுற்றிப்பார்த்த உணர்வு ..சூப்பர்

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தங்களால் மலேசிய நினைவுகள் மீண்டும் உள்ளத்தில் வலம் வருகின்றன
நன்றி சகோதரியாரே

ஆரூர் பாஸ்கர் சொன்னது…

அருமை, பகிர்வுக்கு நன்றி!! . அனைவருக்கும் உங்கள போல பயண அனுபங்கள பகிர்ந்து கொள்ள வேண்டும். :)

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ரமணி சார்

நன்றி ஜம்பு சார்

நன்றி துளசி. நெட் ரொம்ப ஸ்லோ . ஒவ்வொரு ப்லாகும் ஓபன் செய்றதுக்குள்ள கடுப்பேத்துறார் மை லார்ட். டைம் கிடைக்கும்போது வர்றேன். கட்டாயமா.நான் இப்போ அப்லோட் செய்ற 99 % போஸ்ட் எல்லாம் ஷெட்யூல்ட் போஸ்ட்.

நன்றி சரஸ் மேம்

நன்றி ஜெயக்குமார் சகோ

நன்றி பாஸ்கர் சகோ :)


Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

பெயரில்லா சொன்னது…

நான் அந்த ட்வின் டவர் ல தான் வேல செய்றே . ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம் .. வாழ்த்துக்கள்

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...