திங்கள், 7 செப்டம்பர், 2015

கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :-

கேரளா திருவனந்தபுரத்தில் சங்குமுகம், கோவளம் கொச்சுவெளி ஆகிய கடற்கரைகள் இருக்கின்றன. இதில் கோவளம், கொச்சுவெளி இரண்டுக்கும் சென்று வந்தோம் ( கணவரின் நண்பர் தனது காரில் அழைத்துச் சென்றார் . ) இரண்டு நாட்கள் பல இடங்களைப் பார்த்தோம்.

அதில் என்னைக் கவர்ந்ததில் கொச்சுவெளி கடற்கரையும் ஒன்று. மிக அமைதியாக ஆரவாரமில்லாமல் இருக்கு. முன்புறம் பூங்கா. அங்கேதான் பள்ளிப்பிள்ளைகள் விஜயம். ஏதோ பொடானிகல் கார்டன் போல பூக்கள். அவை இன்னொரு இடுகையில் பகிர்வேன்.


இங்கே கற்சிற்பங்களும் ஸ்பெஷல். அதை முன்னொரு இடுகையில் பகிர்ந்திருக்கிறேன். மிக விஸ்தாரமான இந்த பீச்சில் போட்டிங்கும் ( கொச்சுவெளி லாகூனில் ) ,

மிதக்கும் ஹோட்டலும் இருக்கு. இரண்டும் ஸ்பெஷல். அதை இங்கே இருக்கும் படங்களில் பகிர்ந்திருக்கிறேன்.
இந்த ஹோட்டல்தான் சைட் போஸ் :)
இதுதான் அந்த ஹோட்டல்.

பூங்காவிலிருந்து பீச்சுக்கு செல்லும் வழியின் இந்த மிதக்கும் ஹோட்டல் இருக்கு. அந்த மரப்பாலத்தில் இருந்து பார்த்தா தூரத்தில் ஒரு அழகான வீடு. ஆனா என்ன லேக் பூரா வெங்காயத்தாமரைகள் ஆக்கிரமிப்பு.

கடற்கரைக்குரிய இலக்கணத்தோட பீச் சுத்தமா இருக்கு. குடைகள் சேர் எல்லாம் போட்டு பிக்னிக் ஸ்பாட் போல இருக்கு. அங்கே விக்கிறத எல்லாம் வாங்கினா சாப்பிட அங்கே உக்காரலாம். அதர்வைஸ் நாட் அலவ்ட் . :)

பாட்மேன்,  ஸ்பர் மிக்கி மவுஸ், கொத்துக் கொத்தாக கட்டித் தொங்குகிறார்கள் கயிற்றில் அழகாக முறைத்தபடி. :)

பழம்பொரி வாங்கி சாப்பிட்டோம். கொஞ்சம் அசட்டுத் தித்திப்புத்தான் ஆனாலும் ஏதோ ஒரு ருசி. :)

அலைகள் ஏதோ சேதி சொல்வது போல் மாறி மாறி அடித்துக்கொண்டிருந்தன. அசந்தர்ப்பமாய் சுனாமி ஞாபகம் வந்தது. :)

கொஞ்சம் நனைந்துவிட்டு மதிய சாப்பாடுக்கு ஹோட்டல் சோழா திரும்பினோம். சென்னை மெரினா அளவு கூட்டமில்லை.

கேரளக்கரை மக்களையும் அவர்கள் அன்பையும் கடற்கரையையும் மறக்கவே முடியாது அவ்வளவு அழகான இடங்கள்.

6 கருத்துகள் :

கரிகாலன் சொன்னது…

வணக்கம் சகோதரி .
உங்கள் பயணம் மிக இனிதாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .அழகான கடற்கரைகள் ,காட்சிகள் .புகைப் படக்கலை தெரிந்த உங்கள் கைவண்ணத்தில் மிக அருமையாக காட்சி அளிக்கிறது
.இங்கு கனடாவில் நாங்கள் இருக்கும் இடத்தில எல்லாம் ஏரிகள் தான் அதைதான்
இங்கு பீச் என்பார்கள் ,நன் நீர் ஏரிகள் மிகப்பெரிதானவை ,கடலைப்போல அலைகள் இருக்கும்
உண்மையான கடற்கரை பார்க்கவேண்டும் நீண்ட தூரம் போகவேண்டும் .
கோவளம் என்னும் இடம், கடற்கரை சென்னைக்கு கிட்ட உண்டல்லவா ?
நன்றி

Thenammai Lakshmanan சொன்னது…

நாங்கள் சென்ற கோவளம் பீச் திருவனந்தபுரத்துக்கு அருகில் இருக்கிறது கரிகாலன் சகோ :)

சென்னையிலும் ஒரு கோவளம் பீச் இருக்கிறது என்று நினைக்கிறேன். :)

G.M Balasubramaniam சொன்னது…

பயணங்கள் நல்ல படிப்பினைகள் அனுபவங்கள் பெற்றுத்தரும்

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அருமையான இடம் இது. திருவ்னந்தபுரத்தில் நாங்கள் 8 வருடம் இருந்ததால் அப்போது உறவினர்கள் வந்தால் இது போன்ற இடங்கள்தான் அருகில் இருப்பதால்...

அதுவும் மான் சூர் சீசனின்ல் லாகூன் கடலோடு இணைந்து அழகாக இருக்கும் இல்லை என்றால் மணல் திட்டு மற்ற சீசனில்...கேரளத்தில் யாரும் கடற்கரையை டாய்லெட் போல் உபயோகிப்பது இல்லாததால் சுத்தமாகத்தான் இருக்கும்......கோவளமும் அழகு....இரு இடங்களுமே இப்போது நல்ல டூரிஸ்ட் ஸ்பாட்டாக ஆகிவிட்டன...வர்கலா பீச் சென்றிருக்கின்றீர்களா? தேனு? கீழே கடல்....நாம் மேலே க்ளிஃப் லிருந்து பார்க்கலாம்...அலை வந்து அடிக்கும் ..அழகாக இருக்கும்..மற்றபடி பீச்சும் உண்டு...

இது கொச்சு வேளி ....வெளி அல்ல...அதுவும் இந்த ளி நமது ளி அல்ல...லி க்கும் ளிக்கும் இடைப்பட்ட ஒலி . பயணமே ஆனந்தம்தான்...

கீதா

Anuradha Prem சொன்னது…

அழகான இடமும் ,படங்களும் .......அருமை

Thenammai Lakshmanan சொன்னது…

கருத்துக்கு நன்றி கரிகாலன் சகோ

ஆம் பாலா சார்

திருத்தங்கள் கொடுத்தமைக்கு நன்றி துளசி சகோ & கீத்ஸ் :) வர்க்கலா சென்றதில்லை. வாய்ப்பு கிடைத்தால் செல்கிறேன் :)

நன்றி அனுராதா ப்ரேம்

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...