வியாழன், 27 ஆகஸ்ட், 2015

ஹைதராபாத் - ஹைடெக் சாலைச் சிற்பங்கள் & மேம்பால ஓவியங்கள். HYDERABAD SCULPTURES & MURALS.

ஹைதராபாத்தில் நான் வியந்த ஒரு விஷயம் அழகழகான சாலை சிற்பங்கள்தான் . அவை நம்மூரு போல் சிமிண்டால் மட்டுமல்ல இரும்பாலும் ( வேஸ்ட் உலோகங்களாலும்) ப்ராஸ் போன்றவற்றாலும் அமைக்கப்பட்டிருக்கு 


 மாபெரும் தலைவர்களின் சிலைகள் மட்டுமல்ல. ஆர்ட்டிஸ்டுகளின் கைவண்ணத்தில் டைனோசர், சுதந்திரத்தை உணரும் பெண், தவளை,

அண்டபேரண்டப் பட்சி, அங்கங்கே மனிதர் சிற்பங்கள். !

மயில், புலி  இன்னும் டிசைன் டிசைனாக சிற்பங்கள் கண்டு களிக்கலாம்.

ஏதோ மாத்தமாட்டிகல்  மற்றும் புவியியல் வடிவங்களில் சில சிற்பங்கள்.

 வெய்யிலுக்கு இதமாய் ஃபவுண்டன்.

முக்கிய தலைவர் ஒருவரது சிலை செம்பாலேயே செய்யப்பட்டுள்ளது. அதுவும் குடை வைக்கப்பட்டு ஒரு மகாராஜா ஸ்டைலில் உடை உடுத்தியபடி வடிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் & பெங்களூருவில் வீரர்கள் சிலை மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் ஹைதையில் மாடர்ன் ஆர்ட் சிற்பங்கள் பார்த்து வியந்தேன்.

ஹை டெக் சிட்டியின் நுழைவாயிலே ஒரு மினி சார்மினார் போல வடிவமைக்கப்பட்டிருப்பது அழகு. அதன் எதிரில்தான் சைபர் டவர்ஸ். ( சந்திரபாபு நாயுடு ஆரம்பித்தது என்று ஒரு ஆட்டோக்காரர் மிகுந்த பெருமைப்பட்டுக் கொண்டார் ) . அங்கே என் பெரிய மகன் வேலை பார்க்கிறார் என்று நானும் அக்கட்டிடத்தைப் பெருமிதத்துடன் பார்த்தேன். :)
எனக்கு மிக மிகப் பிடித்த இந்திராம்மா :)

ஹைதையில் உள்ள சாலைச் சிற்பங்கள் அநேகம். நான் கண்ணில் பட்டதை மட்டும் சுட்டுள்ளேன். அநேகமாக மாதாப்பூர், கொண்டாப்பூர், ஜூப்ளிஹில்ஸ், அல்லது பஞ்சாரா ஹில்ஸ், மெஹ்திப்பட்ணம், நாராயண குடா, நாம் பள்ளி ரயில்வே ஸ்டேஷன் இந்த மார்க்கமாகத்தான் இருக்கும். சில சமயம் ஷாம்ஷாபாத் ( ஏர்ப்போர்ட் ) மார்க்கமா இருக்கும். இது ஹைதை சில்பாராமம்.கச்சிபௌலி, நானாக்ரம்குடா, காந்திபேட் , ஆந்திரப் ப்ரதேஷ் போலீஸ் அகாடமி, ( APPA ) ஆகிய இடங்களிலும் புதுமையான வகையில் வடிவமைக்கப்பட்ட சிலைகள் இருக்கு. எது எங்கே இருக்குன்னு  சரியா ஞாபகம் வரலை..மொத்தமா  புகைப்படம் போட்டிருக்கேன். ஹை டெக் சிட்டிக்கு ஏத்த ஹைடெக் சிற்பங்கள்.

அதே போல மேம்பாலங்களின் அருகில் உள்ள சிற்பங்களும் , மேம்பாலங்களைத் தாங்கும் தூணில் உள்ள வண்ணச் சிற்பங்களும், வண்ண ஓவியங்களும் அருமை. ஹைதராபாத் மெட்ரோபாலிடன் டெவலப்மெண்ட் அதாரிட்டி ( HMDA ) நெக்லஸ் ரோட்டிலும் பேகம்பேட் ஃப்ளைஓவரிலும் இதுபோன்ற சுவர் ஓவியங்களை உருவாக்கி வர்றாங்க.

முழு நகரையும் அலங்கரிக்க அங்கங்கே சுவர் ஓவியங்களும் வரையப்பட்டு வருகின்றன. சென்னையைப் போல. அவுட்டர் ரிங் ரோட்டில் இதேபோன்ற சிற்பங்களும் சுவர் ஓவியங்களும் அழகாக நிறுவப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.

இதுல முக்கியம் என்னன்னா ஒவ்வொரு சிற்பமும் ஒரு தீம்ல உருவாக்கப்படுது. பறவைகள், சூரியன், பூக்கள் வரையப்படுது. மேம்பாலத்தையும் இன்னோவேட்டிவ்வா பயன்படுத்தினவங்க இவங்கதான்னு சொல்லலாம்.

இது இன்னொரு மேம்பாலத்துல வாத்தியங்கள் ஓவியம். நாதஸ்வரம், வயலின், கிடார், வீணை, தம்புரா, ட்ரெம்பெட், சாக்ஸஃபோன். ஃப்ளூட், தவில் நு எத்தனை வாத்தியங்கள்.
மேலும் இயற்கையை சீரழிக்காம சுழற்சி முறைல பழைய பொருட்கள்ல உருவாக்கப்படுது. வசீகரமா, தகவல் நிறைந்ததா, ( படிக்கும் வயதில் உள்ள குழந்தைகளுக்கும் தெளிவா புரியும்படியா ) சுற்றுச்சூழலைக்காக்கவேண்டியதன் அவசியத்தையும், மேம்பால சிற்பங்கள்ல விளையாட்டுகளில் ஈடுபடும் குழந்தை உருவங்களையும் அழகுற சமைத்திருக்கின்றார்கள்.

எல்லா சூழலையும் தாங்குமாறு ( வெய்யில், மழை, பனி, புயல் ) இதுக்கெல்லாம் ஈடு கொடுக்குமாறு  இரும்பு, பாறை, ( ! ) சிமிண்ட், மணல், ஃபைபர்  இதுல சிற்பங்கள் செய்யப்பட்டு வெளிப்புறம் வெதர் ரெசிஸ்டென்ஸ் கோட்டிங்க் கொடுக்கப்பட்டிருக்கு.

யார் செய்தாங்கன்னு ஆட்டோக்காரர்கள் & கால் டாக்ஸிக்காரர்களிடம்  கேட்டால் வோ நஹிங் மாலும் என்கிறார்கள். நாம் கவனித்த பின்புதான் அவர்களே அவற்றைக் கவனிக்கின்றார்கள்.பெயர்கள் தெலுங்கில் இருப்பதால் நமக்கு தெலுசுலேது.

சிங்காரச் சென்னை என்கிறோம். ஆனால் இயற்கையோடு இணைந்த சிற்பங்களால் ஹைடெக் ஹைதை மயக்குது ஆளை. :)


1 கருத்து :

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...