சனி, 8 ஆகஸ்ட், 2015

மனித உருவிலும் பசுமைச் சிற்பங்கள்.

ரோடு ஓரங்களில் அடர்ந்து வளர்ந்து காடாய்க் கிடப்பதைக் குத்துப் புதர்ச் செடி என்போம்.

அந்தக் குத்துப்புதராக வளரும் செடிகளை அலங்காரமாக வெட்டி அழகழகாய் பசுமைச்சிற்பம் சமைத்திருக்கிறார்கள் லால்பாகில்.


இவை பெரும்பாலும் அழகுக்காக செவ்வக வடிவில் வெட்டிவிடப்படும். வீட்டின் முன்புறத்தில் அல்லது பக்கவாட்டில் உள்ள தோட்டத்தில் புல்வெளிக்கு பார்டர் கட்டியது போல இருக்கும். பூங்காக்களிலும் அப்படித்தான் இருக்கும். சில இடங்களில் டெண்ட்ரில் க்ளைம்பர்ஸ் எனப்படும் தொற்றிப் படரும் தாவரங்களை மாடியில் வளர்த்துத் தொங்கும் அதையும் வீட்டின் முகப்புக்கான  கிராப் போல வெட்டி இருப்பார்கள். 

புதர்செடிகள் அதிகமாக வளர்ந்துவிட்டால் அதைக் கவாத்து செய்தல் என்ற முறைப்படி வெட்டி விடுவார்கள். அதையே சிறிது மாற்றி அலங்காரமாக வெட்டி விட்டால் அதுதான் சிற்பம். சில சிற்பங்களுக்கு கம்பிகள் கட்டி வைத்துக் கிளையை வளைத்தே வளர்க்கிறார்கள். விருப்பப்பட்ட உருவம் சமைக்க.

இதில் என்ன தேவை என்றால் அந்தக் குத்துப்புதர் அடர்த்தியாக வளரவேண்டும்.  கீழிருந்து மேல் வரை ஒரே மாதிரியாக நேராக வளரணும். அது மட்டும் போதும். சிற்பம் சமைத்துவிடலாம். அதுக்காக பார்டர்களில் நெருக்கமா செடிகளை ஊன்றுகிறாங்க. உருவங்கள் சமைக்க ஒரே செடி அடர்த்தியா இலை கொண்டதா இருக்கணும். பொதுவா பார்டர்களில் அகாலிபா,மருதாணி, காட்டுக் கருவேப்பிலை, சவுக்கு, காகிதப்பூ ( போகன் வில்லா ), செம்பருத்தி  போன்ற செடிகளை வளர்க்கிறாங்க.

இங்கே லால்பாகில் விதம் விதமான உருவங்களில் சிற்பங்களைப் பார்த்தேன்.  இவ்வகைச் செடிகளில் இலைகள் பெரும்பாலும் சவுக்குச் செடி போல குச்சி குச்சியாதான் இருக்கும் ஆனா அடர்த்தியா தண்டையும் கிளையையும் மறைச்சிட்டு இருக்கும். அப்பிடி இருந்தா அதுல யானை, டைனோசர்,  முயல், ஆமை, கிளி, பறவைகள் எல்லாம் செதுக்குறாங்க. சில சமயம் உருவத்தை சமைச்சுக் கம்பி அமைச்சு அதில் கொடிகளைப் படரவிடுறாங்க. அத இலைகள் உருவத்தில் படிஞ்சு அதை அழகாக்குது.

உலக அளவுல இந்தக் கலை 16 ஆம் நூற்றாண்டிலேயே காணப்பட்டிருக்காம். பாபிலோனியத் தொங்கும் தோட்டங்கள் எல்லாம் இந்த வகையில் டெரஸில் வளர்க்கப்பட்டு டிசைன் செய்யப்பட்டவை போலிருக்கு.

பெரிய பெரிய அரண்மனைகளிலும் கோட்டை கொத்தளங்களிலும் இது போன்ற பூங்காக்களிலும் இப்படி சிற்பங்களைச் செதுக்கி வளர்த்து அழகுபார்த்து மகிழ்ந்திருக்காங்க.  டோபியரி ஹவுஸ்னே சிலது அமைக்கப்பட்டிருக்கு.

நெதர்லாண்ட், ஆஸ்த்ரேலியா, நார்தம்பர்லாண்ட், லண்டன், ஃப்ரான்ஸ், ஆக்ஸ்ஃபோர்ட்ஷையர் , சௌத் கொரியா, போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் பல நூற்றாண்டுகளா இந்தப் பசுமைச் சிற்பங்கள் இடம் பெற்றிருக்கு.

லண்டனில் உள்ள கிங்ஸ்டன் லாசி என்ற  கோட்டையில் மனிதர்களின் முக உருவச் சிற்பங்களை செதுக்கி இருக்காங்க. அதேபோல லால்பாகிலும் மனித உருவத்துல செடிகளைச் செதுக்கி இருக்காங்க. அம்மா குழந்தை அப்பா ந்னு ஒரு குடும்பமே நிக்குது பாருங்க. :)

டிஸ்கி:- இவற்றையும் பெங்களூருவில் பாருங்க.

1.  மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.

2.குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)
.
3. லால்பாகில் கோடையைத் தணிக்கும் கீரைகள். 

4. நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. பாகம் 1

5. இன்னும் சில ஒற்றையர்கள். பாகம் 2

6. மஞ்சள் முகமே வருக. (LAL BAGH )

7. குடியரசு/சுதந்திர தினத்தில் லால்பாக்.

8. இன்னும் சில ஒற்றையர்கள் பாகம் 3

9.  காதல் ரோஜாவே. -- பாகம் 4

10. காதல் ரோஜாவே..-- பாகம் 5

11. கோடையைக் குளுமையாக்கும் ஒரு கூடைப் பூக்கள்.

12. கழிவுநீரிலும் உயிர்க்கும் கல்வாழைகள்.

13. பிருந்தாவனத்தில் இசை நீரூற்றின் வண்ண நடனம். மைசூரில் வண்ணமயமான கோடை.

14. பணம் கொழிக்கும் பனசங்கரி – சாகம்பரி.

15. என் தோட்டத்தில் எத்தனை ரோஜா. இருவர்

16.கொள்ளை லாபம் தரும் கோழிக்கொண்டைப்பூ

17. நான்கு வாயில்கள். லால் பாக்.

18. சந்தனம் பூசும் மஞ்சள் நிலாக்கள்.


3 கருத்துகள் :

Kathir Velu சொன்னது…

அனைத்தும் அருமை கண் கொள்ளா காட்சிகள் ,மனத்தைக் கவரும் இயற்கை வண்ணங்கள்.பார்க்க பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கதிர் சார்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...