எனது நூல்கள்.

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

சீர்மிகு சிங்கப்பூர் :- பாகம் 5 . சிங்கைத் தமிழும் தமிழர்களும் தமிழ்ப்புத்தாண்டும். :-சீர்மிகு சிங்கப்பூர் :- பாகம் - 5. சிங்கைத் தமிழும் தமிழர்களும் தமிழ்ப்புத்தாண்டும். :-

தமிழ்ப் புத்தாண்டு தையிலா அல்லது சித்திரையிலா என்று இங்கே குழப்பத்தோடு  கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்க சிங்கப்பூரிலோ வருடா வருடம் ஜோராகத் தமிழர்கள் இணைந்து தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடுகின்றார்கள். சில நூற்றாண்டுகளுக்கு முன்பு மலேயாவின் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்யச் சென்ற நம் முன்னோர்கள் நம் தமிழையும் திருவிழாக்களையும் செம்மையாகக் கொண்டாடுகிறார்கள். வீடுகளில் தமிழில் உரையாடுகிறார்கள். அது செம்மொழி போல் செந்தமிழாக இருக்கிறது.


ஏப்ரல் 12 அன்று சிங்கை சென்ற நாங்கள் சுவா சூ காங் கில் இருக்கும் எங்கள் உறவினர்கள் வீட்டில் தங்கியிருந்தோம். ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டை அங்கே (ஏப்ரல் 17 சனிக்கிழமை வீக் எண்ட் ) சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடுகள் நடப்பதாக உறவினர் கூறினார். ஆச்சர்யமாக இருந்தது. ஏனெனில் அங்கே சைனீஸ் (மாண்டரின்) , மலாய் , ஆங்கில மொழிகளுடன் தமிழும் ஆட்சி மொழியாக கௌரவிக்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்வில் வைத்திருந்த அறிவிப்புப் பலகையில் கூட தமிழும் ஆங்கிலமும் இடம் பெற்றிருந்தது.  அதே போல் தமிழர்கள் திருவிழாக்கள் (தைப்பூசம்) , பண்டிகைகள் ( தீபாவளி ), புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் ஆகியவற்றுக்கும் பார்லிமெண்ட் மெம்பர்கள் வந்து கௌரவிக்கின்றார்கள்.அந்த ஹாலில் வாழை மரம் தோரணம் எல்லாம் கட்டி செம சவுத் இந்தியன் லுக். சீனர், தமிழர், மலேஷியர் என்று கலந்து கட்டி ஃப்ளாட்வாசிகள் கூட்டம்.

அந்தப் புத்தாண்டில் பி ஏ பி யின் ( பீப்பிள் ஆக்‌ஷன் பார்ட்டி ) ஹாங்க் காஹ் ஜிஆர்சி ( க்ரூப் ரெப்ரசண்டேஷன் கான்ஸ்டிடியுயன்சி ) யின் பாரளுமன்ற அங்கத்தினர் ஷாகி அஹமத் வந்து சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். விழா ஆரம்பிக்கும் முன்பே வந்துவிட்டார் போலே. நாங்கள் ஏதோ ஒரு திசையில் சைரன் ஒலிக்க காரில் வந்து இறங்குவார் என்று காத்திருக்க. மிக எளிமையாக அரங்கின் முன் அமர்ந்த அவர் கலை நிகழ்ச்சிகளைக் கண்டு களித்து, ரங்கோலிப் போட்டி இன்னபிற போட்டிகளுக்குப் பரிசு வழங்கி, மாஜிக் ஷோவையும் பார்த்துவிட்டு மேடையில் ஏறி மைக்கில் உரையாற்றும்போதுதான் அவர் மெம்பர் ஆஃப் பார்லிமெண்ட் என்றே அறிந்தோம். அவ்வளவு எளிமை.

ஒரு அழகான பெண் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க ஒவ்வொருவருக்கும் ( இரண்டு டாலர் கட்டணம் வசூலிக்கப்பட்டிருந்தது குடும்ப அங்கத்தினருக்கு – நாம் பார்வையாளர்களாகத்தான் கலந்து கொண்டோம். ) ஸ்வீட்ஸ், ஸ்நாக்ஸ், கூல்ட்ரிங்ஸ் அடங்கிய குட்டீ பேக் ( GOODIE BAG )  வழங்கப்பட்டிருந்தது. இந்த டிக்கெட் வாங்கியவர்களுக்கு கடைசியில் லக்கி ட்ரா நடத்தப்பட்டு குலுக்கலில் எல் சி டி டிவி போன்ற பரிசுகள் கிடைத்தன. ஒரு மாஜிஷியன் குழந்தைகளைக் கூப்பிட்டு மாஜிக் ஷோ செய்து காட்டினார். இந்த ஊரில் அனைவருமே ஹெல்த் கான்ஷியஸோடு இருப்பதால் ஃபிட்னெஸ்ஸில் நமக்குத் தம்பி தங்கை மாதிரி தோற்றமளிக்கிறார்கள்.

இங்கே இரு பல்கலைக் கழகங்கள் உள்ளன. நன்யாங் டெக்னாலாஜிக்கல் யூனிவர்சிட்டி & என் யூ எஸ் - நேஷனல் யூனிவர்சிட்டி ஆஃப் சிங்கப்பூர்.  பல்கலைக் கழகங்கள் தமிழ்நாட்டிலும் தேர்வு வைத்து மாணவர்களைத் தேர்ந்தெடுத்து ஸ்காலர்ஷிப் அளிக்கின்றன. இங்கே எனது உறவினர் ஒருவர் விசிட்டிங் ப்ரொஃபசராக இருக்கிறார். இங்கே பள்ளிக் கல்வியே கல்லூரிக் கல்வி போலக் கடினமான சிலபஸ் உடையது. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தமிழைச் சிறப்புப் பாடமாக எடுத்தும் படிக்கலாம். தமிழிலேயே முனைவர் பட்டமும் பெறலாம். அதற்கான வசதிகளையும் வாய்ப்புகளையும் சிங்கப்பூர் அரசாங்கமும் பல்கலைக் கழகங்களும் செய்துள்ளன.

சிங்கைத் தமிழ் பற்றிப் பேசும் போது தமிழ்வேள் கோ சா அவர்களின் தமிழ்ப் பணி பற்றியும் சிங்கைத் தமிழ் முரசு பற்றியும் சொல்லியே ஆக வேண்டும். தமிழ்ப் பத்ரிக்கைகள், தமிழ் இசை ( கோயில்களில் கச்சேரி ) , தமிழிசை நடனம், ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். முன்னேற்றம், சீர்திருத்தம், தமிழ் முரசு, இளையர் முரசு, மாணவர் முரசு, சிங்கைச் சுடர், தெ செராங்கூன் டைம்ஸ், ஆகிய பத்ரிக்கைகளைக் கொண்டுவந்தது மட்டுமல்ல. தமிழர் பிரதிநிதுத்துவ சபையும் அமைத்து அரசியலிலும் ஆட்சிப் பொறுப்பிலும்  இடம் பெற்றுள்ளார்கள்.

தமிழ் வானொலி, தமிழ்த் தொலைக்காட்சி, தமிழ்ச் சங்கங்கள், தமிழ் அமைப்புகளின் செயல்பாடுகள் பிரமிக்க வைக்கின்றன. பல தெருக்களின் பெயரும் தமிழில் சூட்டப்பட்டுள்ளது. பிழைப்பதற்காக வலசை சென்ற நம் மக்களின் வாழ்வு வளமையுற்று இருக்கிறது. பல பெருமைகளையும் அடைந்துள்ளார்கள்.

சிங்கப்பூர் தமிழ் வலைப்பதிவர் குழுமம் என்ற ஒன்று இருக்கிறது. அது மணற்கேணி என்ற இலக்கியப் போட்டி எல்லாம் நடத்தியது. அதில் முதல் பரிசு பெற்றவர் என் சாதனை அரசிகள் புத்தகத்தில் இடம்பெற்ற சினிமா பாடலாசிரியர் மற்றும் பொறியியல் வல்லுநர் பத்மாவதி ஆவார். சிங்கப்பூர் வலைப்பதிவர் குழுமம் போட்டியில் வென்றமைக்காக சிங்கப்பூருக்கு ஒரு வார சுற்றுலாவாக இவரையும் இவரது தந்தையாரையும் அழைத்துச் சிறப்பித்தார்கள். இணையத்தில் தமிழுக்காக சேவை செய்யும் சிங்கப்பூர் தமிழர்களைப் பற்றியும் கூறவேண்டும்.

குடும்பத்தைப் பிரிந்து இருக்கும் நம் மக்கள் பலரை வாராந்திர விடுமுறை நாட்களில் லிட்டில் இந்தியாவில் பார்க்கலாம். பெருங்கொண்ட கூட்டமாகத் தமிழ் இளைஞர்கள் தென்படுவார்கள். அங்கே மாரியம்மன் கோயிலும் இருப்பதாலும் வாராந்திர ஷாப்பிங்குக்காகவும் மக்கள் கூட்டம் அலைமோதும். அந்நியநாட்டுச் செலாவணியை மாற்றிக் கொள்ளும் கவுண்டர்கள் முஸ்தபா ட்ரேட் செண்டரிலும் முக்கிய கடைகளின் அருகிலும் இருப்பதால் அங்கேயும் கூட்டமான கூட்டம்தான்.

முஸ்தபா ட்ரேட் செண்டரில் செண்ட் வாங்கிக் குவிக்காத கூட்டத்தைக் காண்பது அரிது. அதை விட அரிது ஊரிலிருக்கும் சொந்தக்காரர்களுக்கு வழங்க அங்கேயிருந்து சாக்லெட் டின்கள், வேஃபர்ஸுகளை அள்ளி வராதவர்களைப் பார்ப்பது. குண்டூசியிலிருந்து வெள்ளி தங்கம் வைரம் வரை இங்கேயே ஷாப்பிங் செய்யலாம். சுத்தமான 24 காரட் தங்கம் கிடைக்குமென்பதால் பிஸ்கட்டுகளாகவும் பார்களாகவும் வாங்குகிறார்கள்.

ஷாப்பிங்க் முடித்து விட்டு மாரியம்மன்கோயிலுக்கும் இன்னும் சில கோயில்களுக்கும் மக்கள் படையெடுக்கிறார்கள். அதே போலத்தான் அங்கே அஞ்சப்பருக்கும் ஆனந்த பவனுக்கும், காப்பர் சிம்னிக்கும், வனபோஜனுக்கும். ஷாப்பிங்க் மால்களில் நம்மூர் காய்கறிகள் அனைத்தும் கிடைக்கின்றன. பூச்செண்டுகள் பூமாலைகள் கறிவேப்பிலை, சுண்டைக்காய், வாழைப்பூ அனைத்துமே. 

அங்கே எனக்கு ஷாப்பிங் மால்களில் பிடித்தது வேபில்ஸ் எனப்படும் மென்மையான பஞ்சு போன்ற செவ்வக வடிவ அச்சுமுறுக்கு டைப்பிலான ரொட்டிகள். இதில் வனிலா ஐஸ்க்ரீம், விதம் விதமான - சாக்லேட் , ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி சிரப்/சாஸ் – தடவித் தர்றாங்க. சிலவற்றில் பழங்கள் போட்டுத் தர்றாங்க. இனிப்பா இருக்கு.

சிங்கப்பூரைச் சுற்றிப்பார்க்க கார் அல்லது டாக்ஸியில் செல்வதை விட மாஸ் ராபிட் ட்ரான்ஸ்போர்ட் (MRT ) & (SMRT )  ஆகியவற்றைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது. ட்ரெயின் சர்வீஸிலும் மெட்ரோ ரயிலும் மோனோ ரயிலும் சீக்கிரம் கொண்டு சேர்த்துவிடும்.

சாங்கி ஏர்ப்போர்ட் மிக பிரம்மாண்டமானது. வைஃபை, டெலிஃபோன்ஸ், ஸ்வீட்ஸ், பர்கர்ஸ், கேஎஃப் சி, ஸ்டார்பக்ஸ் ,பிஸ்ஸாஸ் என்று எல்லா வசதிகளும் சர்வதேச தரமும் கொண்டது. அந்த ஊர்ப் பெண்கள் அடிக்கடி பாத்ரூம் சென்று மேக்கப் செய்து கொள்வார்கள். நம்ம ஊர்ப் பெண்கள் நம்மைப் போலவே புடவை உடுத்திக் கொண்டிருக்கிறார்கள். சில இளையவர்கள் மட்டும் டாப்ஸ் & பாண்டில் வலம் வருகிறார்கள். தமிழர்கள் அநேகம் இருப்பதால் ஆங்கிலம் அல்லது தமிழ் போதும் ஊர் சுற்றிப் பார்க்க. பார்க்கும் 50 பேரில் ஒரு தமிழராவது தட்டுப் படுவாங்க. மொத்தத்தில் பட்ஜெட்டைக் கடிக்காத ஒரு சம்மர் ட்ரிப் போகணும்னா பக்கத்துல இருக்க சிங்கப்பூருக்கு ஒரு எட்டு போயிட்டு வரலாம். 

டிஸ்கி :- ஏப்ரல் 12, 2015, ஷெனாய் நகர் டைம்ஸில் வெளியானது.  

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க. 

1. மனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும் பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும். MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.

2. மனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும் பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும். ( தொடர்ச்சி ) MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.

3. மனம் கவரும் மலேஷியா – பாகம் 2. பெட்ரோனாஸ் ட்வின் டவர்ஸும் நேஷனல் ( மஸ்ஜித் நெகாரா ), ஜேமெக் மசூதிகளும். -MALAYSIA - PETRONAS, MASJID NEGARA, JAMEK MOSQUE.
 
4. மனம் கவரும் மலேஷியா பாகம் 3 கெந்திங் ஹைலாண்ட்ஸ். MALAYSIA - GENTING HIGHLANDS. 


இவற்றையும் பாருங்க :-

இன நல்லிணக்கம்.

சிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.

எங்க ராமு மாமாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

சல்கேட்டா ஆமையும் சிங்கப்பூரின் அதிர்ஷ்டமும். 

சீர் மிகு சிங்கப்பூர். பாகம் - 1. ஆமையும் முயலாமையும். 

சீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 2. ஜூராங்க் பறவைப் பூங்காவும் ஃப்ளெம்மிங்கோக்களின் நடனமும். SINGAPORE - JURONG BIRD PARK. 

சீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 3. :- மெர்லயன் சிலையும் மெரினா பே ரெசார்ட்டும். SINGAPORE - MERLION STATUE & MARINA BAY SANDS.  

சீர்மிகு சிங்கப்பூர் :- பாகம் 4. கோடையைக் கொண்டாட கோட்டா டிங்கி வாங்க. 

சீர்மிகு சிங்கப்பூர் :- பாகம் 5 . சிங்கைத் தமிழும் தமிழர்களும் தமிழ்ப்புத்தாண்டும். :- 

சீர்மிகு சிங்கப்பூர் – பாகம் 6. சிங்கப்பூர் ஆர்க்கிட் பார்க்கில் அன்னாசி. SINGAPORE - ORCHID PARK.

சீர்மிகு சிங்கப்பூர் - 7. செந்தோசாவும் ஆழ்கடல் உலகமும் டால்ஃபின் லாகூனும். SENTHOSA & DOLPHIN LAGOON SINGAPORE.

 சீர் மிகு சிங்கப்பூர் – பாகம் 8. மேக்ரிட்சி ரிசர்வாயர்.. SINGAPORE MACRITCHIE RESERVOIR PARK.


12 கருத்துகள் :

Ramani S சொன்னது…

வருகிற மாதம் சிங்கப்பூர் செல்லும்
உத்தேசமிருப்பதால் தங்கள் பதிவுகள்
மிக்க பயனுள்ளதாக இருக்கிறது
அருமையான பகிர்வுக்கும்
தொடரவும் நல்வாழ்த்துக்கள்

Thenammai Lakshmanan சொன்னது…

ரமணி சகோ மெயில் ஐடி அனுப்புங்க. இன்னும் உள்ள ( சிங்கை - 6 , மலேஷியா 4 ) 10 கட்டுரைகளையும் அனுப்பி வைக்கிறேன். இன்னும் வலைத்தளத்தில் பகிரவில்லை. :)

Gopal Uttam Ho சொன்னது…

வாழ்த்துக்கள், ஒரு முறை சுற்றிப்பார்த்ததில் இத்தனை விவரங்கள் செகரித்திருப்பதும், சீரிய சிந்தனையில் முழு முனைப்புடன் செயல்பட்டிருக்கிறீர்கள். இதிலிருந்து உங்களது ஆர்வம் மற்றும் திறமை, தெள்ளத்தெளிவாக தெரிகிறது. சிங்கையில் சித்திரை தமிழ் மாதத்தை ஆங்கில மாதம் ஏப்பரல் முதல் மே மாதம் வரை சிங்கையின் தமிழ் மாதமாக, ஒவொரு நாளும் பல சிறப்பு தமிழ் நிகழ்சிகளோடு, மாதம் முழுவதும் கொண்டாடுகிறார்கள். சிங்கை வாழ் தமிழ் மக்களின் ஆர்வம் எல்லையில்லாதது, அவர்கள் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் செலவு செய்ய தயங்குவதில்லை. அதற்க்கு முக்கியக்காரணம் அனைவரும் ஏதாவது ஒருவகையில் பொருளீட்டுபவர்கள், சம்பாதிக்கிறார்கள், 90வயதுடைய மூதாட்டி ஒருவர், பொருள் விற்கும் கடை கடையாக சென்று, கடைக்காரர்களுக்கு தேவையில்லாத காகித அட்டைப்பெட்டியை சேகரித்து, அவற்றை விற்பனை செய்து சம்பாதிக்கிறார். இவரை இன்றளவும் லிட்டில் இந்தியப் பகுதியில் காணலாம். ஆகவே சிங்கையில் எவரும் சம்பாதிக்காமல் சும்மா இருப்பதில்லை. அங்கு பொருளாதார வாய்ப்பும் வளமும் நிறைந்திருப்பதால் கொண்டாட்டத்திற்கு குறைவில்லை. நன்றிகளுடன் கோகி.

G.M Balasubramaniam சொன்னது…

ஆட்சேபணை இல்லையென்றால் உங்கள் மின் அஞ்சல் முகவரி ப்லீஸ்.

பழனி. கந்தசாமி சொன்னது…

வருகிற மாதம் சிங்கப்பூர் செல்லும் உத்தேசமிருப்பதால் தங்கள் பதிவுகள்
மிக்க பயனுள்ளதாக இருக்கிறது - Ramani S சொன்னது…

குரூப்பில் சேராமல் தனியாக சிங்கப்பூர் சென்று வர முடியுமா? ஏர்போர்ட்டிலிருந்து ஒரு லாட்ஜ்ஜிற்கு பொது போக்குவரத்துகளில் போய் தங்கி ஊர் சுற்றிப் பார்ப்பது எப்படி, எவ்வளவு செலவாகும், என்ற விவரங்களை யாராவது பதிவிட்டால் நன்றாக இருக்கும்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிங்கப்பூர் தமிழ் வலைப்பதிவர் குழுமம் பற்றி முழு விவரங்கள் கிடைக்குமா...?

Thenammai Lakshmanan சொன்னது…

கோபால் கண்ணன், த. ஞான சேகரன் ஆகியோர் சிங்கைப் பதிவர்கள்.

Thenammai Lakshmanan சொன்னது…

வானம்பாடிகள் சாரைக் கேட்டால் அனைவரைப் பற்றியும் அறியலாம்.

கேபிள் சங்கர் இரு வருடங்களுக்கு முன் சிங்கை சென்று வந்தார் . அவரது அம்மையப்பன் ப்லாகைப் பாருங்கள் டி டி சகோ

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அட சிங்கப்பூர்! சிங்கை பற்றிச் சொல்லி மாளாது..அருமையான ஊர்..அங்கு சென்றால் பல வளங்கள், நலங்கள், ஆனாலிந்தியாவில் இருப்பது போன்ற உணர்வும் வரும்...அருமையான ஊர்....பிடித்த ஊர்...சுத்தம் சுத்தம்...பல வசதிகள்...ம்ம் என் நினைவலைகள் எழுந்தன உங்கள் பதிவு படித்ததும்....முஸ்தபா புகழ்வாயந்த ஒன்று....செரங்கூன்...லிட்டில் இந்தியா...மரியம்மன் கோயில், பெருமாள் கோயில்...அதன் அருகில் கோமளாஸ்....இப்போது சரவணபவனும் வந்தாயிற்றே....

கீதா

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அருமையான கட்டுரை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. அங்கே இப்படி நிகழ்ச்சிகள் நடப்பது அறிந்து மகிழ்ச்சி.

Thenammai Lakshmanan சொன்னது…

சரியாக சொன்னீர்கள் கோபால் உத்தம் சகோ. ஏனெனில் பொருளாதார வசதிகளுடன் மனமும் விசாலமடைந்துவிடுகிறது உண்மைதான். :)

பாலா சார் உங்களுக்கு மின்னஞ்சல் முகவரி அனுப்பி உள்ளேன்.

பழனி கந்தசாமி சார் அம்மையப்பன் வலைப்பதிவு பாருங்கள். கேபிள்ஜி இரு வருடங்களுக்குமுன் சிங்கை சென்று பதிவர்களைச் சந்தித்து வந்தார்.

ஆம் துளசி சகோ & கீத்ஸ். அங்கே இருக்கும்வரை இந்தியாவை மிஸ் செய்கிறோம் என்றே தோன்றவில்லை. வசதியான மேம்பட்ட சென்னை போல் இருந்தது. :)

நன்றி வெங்கட் சகோ :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...