எனது நூல்கள்.

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

சீர் மிகு சிங்கப்பூர். பாகம் - 1. ஆமையும் முயலாமையும்.

சிங்கப்பூர் என்றாலே பல வருடங்களுக்கு முன்பு அங்கேயிருந்து என் மாமா அனுப்பும் க்ரீட்டிங்க் கார்டுகள்தான் ஞாபகம் வரும். கிட்டத்தட்ட 78 - 80 களில் பகோடா அமைப்பு கட்டிடங்களின் முன் தோட்டங்களில் பெல்ஸ் , டாப்ஸ் போட்ட சீன மலேஷிய நங்கையரில் எழில் உருவங்கள்தான் ஞாபகம் வரும்.

ட்ரேட் கேம், ஸ்நேக்ஸ் அண்ட் லாடர்ஸ், சிங்கப்பூரின் அழி ரப்பர்கள், வாசனை க்ரேயான்கள், மடக்கி விரித்து பென்சில் சீவும் கத்திகள், பேனாக்கள், தந்தக் கலரில் சீப்புகள், ஆல்பங்கள், ஜெர்சி, சாட்டின், டபிள் நெட்டட் துணிகள், மல்லிகைப்பூ செண்ட், செட்டியார் கதம்பம் எனப்படும் மரிக்கொழுந்து செண்ட், பாடி ஸ்ப்ரே, பேப்பருடனே சாப்பிடக்கூடிய வெள்ளை மில்க் சாக்லெட்டுகள் , வெஜிடபிள் கட்டர்ஸ், வித்யாசமான பீங்கான் சாமான்கள், பொம்மைகள், பாட்டரியால் ஓடும் ஆடும் பாடும் பொம்மைகள், பறக்கும் தட்டுகள், உயர்தர ஜ்யார்ஜெட், ஷிபான், கிளியோபாட்ரா புடவைகள், மிக்கி மவுஸின் இரு கைகளும் சின்ன முள் பெரிய முள்ளாய்ச் சுற்றிவர மிக்கி மவுஸ் பொம்மை பதித்த கைக்கெடிகாரங்கள் என்று ஒரு சொர்க்க லோகமே மாமாவுடன் வந்து இறங்கி இருக்கும். பெட்டி பெட்டியாய் சாமான்களைப் பிரித்து ஒவ்வொருவருக்கும் வாசனையான பாலிதீன் பைகளில் போட்டுக் கொடுக்கும்போது அவர் முகமும் நம் முகமும் ஒருங்கே மலர்வது உறவின் பெருமை. 


சிங்கப்பூரின் சுத்தம், அழகுணர்ச்சி அந்த ஊரை அவர்கள் பராமரிக்கும் முறை ஆகியவற்றையும் ஆசிரியர்களை அவர்கள் மதிக்கும் விதம் பற்றியும் , அம்மக்களின் நட்புணர்வையும் பற்றிக் கேட்கக் கேட்க நாமும் செல்ல வேண்டும். அந்த இந்திர லோகத்தை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டதுண்டு.

ஓரிரு வருடங்களுக்கு முன் நாங்களும் சிங்கப்பூர் செல்ல நேர்ந்தது. அங்கே ஜப்பானீஸ் சைனீஸ் கார்டன்., சிங்கப்பூர் ஆமை பார்க், , ஜுராங்க் பேர்ட் பார்க், பல்கலைக் கழகங்கள், ஆர்கிட் பார்க், மெர்லயன் பார்க், மேக்ரிட்சி ரிசர்வாயர், ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில் , மாரியம்மன் கோயில், லிட்டில் இந்தியா, முஸ்தபா ட்ரேட் செண்டர், அஞ்சப்பர், சாங்கி ஏர்போர்ட், மாஸ் ராபிட் ட்ரான்ஸ்போர்ட் ( MRT) & ( SMRT ), ட்ரெயின் சர்வீஸ் மோனோ ரெயில் சர்வீஸ் , பட்டர்ஃப்ளை பார்க் ,சந்தோசா பீச், பலாவன் பீச், சிலோசோ பீச், டான் ஜோங் பீச், அண்டர் வாட்டர் வேர்ல்டு, டால்ஃபின் ஷோ  எல்லாம் குறிப்பிடத்தக்கன. இவை எல்லாம் மனிதர் உருவாக்கிய தீம் பீச்சுகள் போல. சாங்கி பீச் தான் இயற்கை கடற்கரை.

மலேஷியாவில் ஜோஹூர் பாருவில் கோட்டா டிங்கி வாட்டர்ஃபால்ஸ், செண்டுல் முருகன் கோயில், பத்துமலை முருகன் கோயில், ஹனீஃபா ட்ரேட் செண்டர், ட்வின் டவர்ஸ், ஜெண்டிங் ஹைலாண்ட்ஸ், கேபிள் கார் பயணம், சூதாட்ட விடுதிகள், இஸ்டானா நிகாரா ( ஸ்டேட் பேலஸ் – ராயல் மியூசியம் ), தெ நேஷனல் மாஸ்க் ( மசூதி ) , ஜேமெக் மாஸ்க் ( மசூதி ), ஆகியன குறிப்பிடத்தக்கன.

பெரும்பாலும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த மக்களே அதிகம். சைனீஸ், தமிழர், மலேஷிய யூரேஷியன் (யூரோப் ஏஷியன் )மக்களில் பார்க்கும் அனைவருமே ஏதோ ஒரு வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருக்கிறார்கள்.  பெண்களும் ஆண்களும் சம அளவில் உத்யோகம் பார்க்கிறார்கள். அதிலும் வெளிநாட்டில் இருந்து கம்ப்யூட்டர் மென் துறைக்குப் பணியாற்றவரும் வெளிநாட்டவரை இங்குள்ள பெண்கள் சிலர் மணந்து கொண்டிருக்கிறார்கள். அதிகப்படியான இம்மாதிரி ஜோடிகளைக் காண முடிகிறது. 5.5 மில்லியன் மக்களில் 2 மில்லியன் மக்கள் வெளிநாட்டினர்தான்.

மலேஷியாவின் ட்வின் டவர்ஸில் ஏறிப்பார்க்க டிக்கெட் முன் பதிவு செய்ய வேண்டும். அதற்காகக் க்யூவில் காத்திருந்தபோது இம்மாதிரி ஜோடிகளைச் சந்தித்தோம். அங்கேயே பக்கத்தில் ரெஸ்டாரெண்ட் இருக்கிறது. அதில் அங்கே பணிபுரிபவர்கள் ஆண்களும் பெண்களும் காத்திருப்பவர்களும் கூட அங்கே டப்பாக்களில் அடைக்கப்பட்டிருக்கும் நூடுல்ஸ் அவித்த முட்டை, ஃப்ரைட் ரைஸ் , சாப்சூயி போன்றவைகளை வாங்கிக் கொண்டிருந்தார்கள். இந்த ஊர்களில் இன்னும் சிக்கன் சம்பல், சிக்கன் ரைஸ், வாண்டன், மீன் ஸ்வீட், எக் ஃப்ரைட் நூடுல்ஸ், ஃபிஷ் ஹெட் சூப், சில்லி க்ராப் ( CRAB ), ஆயிஸ்டர் ஆம்லெட், ரொஜக், ஹொக்கியன் மீ ( இறால் போட்டு செய்யும் பொறித்த நூடுல்ஸ் ), சிக்கன் விங்ஸ், ஃபிஷ் ஹெட் கறி, ஆகியன அங்கே ப்ரசித்தம். கடல் வாழ் உயிரின சமையலான நண்டுத் திருவிழா இங்கே ஃபேமஸ்,

2015 பிப்ரவரி 19 இங்கே சீனப் புத்தாண்டு பிறக்கிறது. நம்மூரில் ஒரு வகையான பேர் என்றால் இங்கே ஆடு, குரங்கு, குதிரை, சேவல், என்று பெயர் உண்டு. இந்த வருடத்துக்குப் பெயர் ஆடு. 

ஜப்பானீஸ் கார்டனில் கன்ஃப்யூசியஸ் ( கி. மு.. 470 – 561 ) என்ற சீன தத்துவஞானியின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதன் வாயிலில் இருந்து உள்ளே செல்லும் தூரம் வரை மிக அழகான மூங்கில் செடிகள் வைக்கப்பட்டுள்ளன. முதலில் ஏழடுக்கு கொண்ட ஒரு பகோடாவும் அடுத்து அதன் ஜுராங்க் லேக்கை ஒட்டி  மூன்றடுக்கு உள்ள இரு பகோடாக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பகோடாக்கள் அறுகோண அமைப்பும் மேலே உச்சியில் செவ்வோடு பதிக்கப்பட்டபடியும் உள்ளன. கண்ணுக்கு அழகு அதோடு வெய்யிலும் புகமுடியா குளிர்ச்சியாக இருக்கிறது. இந்தப் பூங்காக்கள் ஜப்பானியப் பேரரசர்களான முரோமசி மற்றும் அசுசி மொமொயாமா காலகட்டத்தின் கலையைப் பின்பற்றி அமைக்கப்பட்டவை.

அதன் பின் சிங்கப்பூர் ஆமைப் பூங்கா சென்றோம். இங்கே விதம் விதமான ஆமைகள் பராமரிக்கப்படுகின்றன.  


இந்தியாவில் ஆமை புகுந்த வீடும் ஆமினா புகுந்த வீடு போலக் கெடும் என்பது பழமொழி.  

ஆனால் சீனர்கள் ஆமையை அதிர்ஷ்டமாகக் கருதுகிறார்கள். ஆமை என்பது நீண்ட ஆயுளை வழங்கக் கூடிய ஒன்றாகக் கருதுகிறார்கள்.  

அவற்றில் 60 வயதான ஆசிய ஆமை மிகுந்த அதிர்ஷடத்தைக் கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.  

மதா மதா, எலாங்கேட்டா டார்ட்டாய்ஸ், சல்கேட்டா டார்ட்டாய்ஸ் ( அதிர்ஷ்டத்துக்கு ).தாய்லாந்து கோல்டன் டெம்பிள் டார்ட்டாய்ஸ் ( செல்வச்செழிப்புக்கு ) பான்கேக் டார்ட்டாய்ஸ், கோல்டன் டெரப்பெய்ன், ஆறு கால் உள்ள ஆமை, இந்திய ஸ்டார் ஆமை ஆகியன அவற்றில் சில.

இவ்வளவு அதிர்ஷ்டத்தையும் கொண்டு வர்ற ஆமைகள் சுற்றுச் சூழல் பாதுகாப்பிலும் பங்கு வகிக்கின்றன. அழிந்து வரும் ஆமை இனத்தைப் பாதுகாத்துவரும் சிங்கப்பூர் அரசின் செயல் பாராட்டுக்குரியது.  


இங்கே  50 விதமாத ஸ்பீஸிசில் இல் 800 வகை ஆமைகள் பராமரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆமையின் அமைப்பும் காலும் ஏன் மொத்த அமைப்புமே வித்யாசமா இருக்கு. நடுவில் அதிர்ஷ்டம் வழங்கும் சீன நவகுபேரன்கள் சிலையும் இருக்கு.

நாம் எதையும் முயலாமல் ஆமையைக் காரணம் சொல்லிக்கிட்டு இருக்கோம். உழைத்து உயர்ந்த நாடு சிங்கப்பூர். ஆமை எல்லாம் காரணமில்ல என்பதை உணரணும். ஆமையைப் பராமரிப்பதால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுது. மேலும் அழிந்து வரும் ஆமைகள் இனம் இங்கே பாதுகாத்து வைக்கப்படுது.----- ஜுராங்க் பேர்ட் பார்க், பல்கலைக் கழகங்கள், ஆர்கிட் பார்க், மெர்லயன் பார்க், மேக்ரிட்சி ரிசர்வாயர், ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில் , மாரியம்மன் கோயில், லிட்டில் இந்தியா, முஸ்தபா ட்ரேட் செண்டர், அஞ்சப்பர், சாங்கி ஏர்போர்ட், மாஸ் ராபிட் ட்ரான்ஸ்போர்ட் ( MRT) & ( SMRT ), ட்ரெயின் சர்வீஸ் மோனோ ரெயில் சர்வீஸ் , பட்டர்ஃப்ளை பார்க் ,சந்தோசா பீச், பலாவன் பீச், சிலோசோ பீச், டான் ஜோங் பீச், அண்டர் வாட்டர் வேர்ல்டு, டால்ஃபின் ஷோ ,மலேஷியாவில் ஜோஹூர் பாருவில் கோட்டா டிங்கி வாட்டர்ஃபால்ஸ், செண்டுல் முருகன் கோயில், பத்துமலை முருகன் கோயில், ஹனீஃபா ட்ரேட் செண்டர், ட்வின் டவர்ஸ், ஜெண்டிங் ஹைலாண்ட்ஸ், கேபிள் கார் பயணம், சூதாட்ட விடுதிகள், இஸ்டானா நிகாரா ( ஸ்டேட் பேலஸ்ராயல் மியூசியம் ), தெ நேஷனல் மாஸ்க் ( மசூதி ) , ஜேமெக் மாஸ்க் ( மசூதி ), ஆகியன பற்றி அடுத்த அடுத்த கட்டுரைகளில் தொடர்கிறேன்

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க. 

1. மனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும் பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும். MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.

2. மனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும் பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும். ( தொடர்ச்சி ) MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.

3. மனம் கவரும் மலேஷியா – பாகம் 2. பெட்ரோனாஸ் ட்வின் டவர்ஸும் நேஷனல் ( மஸ்ஜித் நெகாரா ), ஜேமெக் மசூதிகளும். -MALAYSIA - PETRONAS, MASJID NEGARA, JAMEK MOSQUE.
 
4. மனம் கவரும் மலேஷியா பாகம் 3 கெந்திங் ஹைலாண்ட்ஸ். MALAYSIA - GENTING HIGHLANDS. 


இவற்றையும் பாருங்க :-

இன நல்லிணக்கம்.

சிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.

எங்க ராமு மாமாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

சல்கேட்டா ஆமையும் சிங்கப்பூரின் அதிர்ஷ்டமும். 

சீர் மிகு சிங்கப்பூர். பாகம் - 1. ஆமையும் முயலாமையும். 

சீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 2. ஜூராங்க் பறவைப் பூங்காவும் ஃப்ளெம்மிங்கோக்களின் நடனமும். SINGAPORE - JURONG BIRD PARK. 

சீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 3. :- மெர்லயன் சிலையும் மெரினா பே ரெசார்ட்டும். SINGAPORE - MERLION STATUE & MARINA BAY SANDS.  

சீர்மிகு சிங்கப்பூர் :- பாகம் 4. கோடையைக் கொண்டாட கோட்டா டிங்கி வாங்க. 

சீர்மிகு சிங்கப்பூர் :- பாகம் 5 . சிங்கைத் தமிழும் தமிழர்களும் தமிழ்ப்புத்தாண்டும். :- 

சீர்மிகு சிங்கப்பூர் – பாகம் 6. சிங்கப்பூர் ஆர்க்கிட் பார்க்கில் அன்னாசி. SINGAPORE - ORCHID PARK.

சீர்மிகு சிங்கப்பூர் - 7. செந்தோசாவும் ஆழ்கடல் உலகமும் டால்ஃபின் லாகூனும். SENTHOSA & DOLPHIN LAGOON SINGAPORE.

 சீர் மிகு சிங்கப்பூர் – பாகம் 8. மேக்ரிட்சி ரிசர்வாயர்.. SINGAPORE MACRITCHIE RESERVOIR PARK.


6 கருத்துகள் :

சரஸ்வதி ராஜேந்திரன் சொன்னது…

சிங்கப்பூர் எல்லரும்தான் போறாங்க ஆனால் இப்படி யார் விவரமா போட்டோ எடுத்து விளக்கம் சொல்றாங்க,?யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெற என்று ..கிரேட் தேன் --
சரஸ்வதிராசேந்திரன் ,புகைப்படம் ரொம்ப துல்லியமா இருக்கு

சரஸ்வதி ராஜேந்திரன் சொன்னது…

புகைப்படங்களும் விரிவான விளக்கமும் அருமை --சரஸ்வதிராசேந்திரன்

மு.கோபி சரபோஜி சொன்னது…

ஆச்சி...உள்ளூர்காரனுக்கு அவன் ஊர் அதிசயம் தெரியாதுங்கிற கதையா இங்கே வந்து சில வருடமாகியும் பொழுது போக்கு இடங்களுக்கும், பார்க்க வேண்டிய இடங்களுக்கும் செல்லவும், போகிற போக்கில் அப்படியான இடங்களைக் கடக்கும் போது புகைப்படங்கள் எடுக்கவும் முயன்றதே இல்லை. உங்கள் பக்கம் வாசித்த பின் கொஞ்சமேனும் அந்த இடங்களை இரசிக்கும் மனநிலையோடு போய் வர வேண்டும் எனத் தோன்றுகிறது. இதுக்காக இனிமேல் பணம் செலவு பண்ணிக்கிட்டு வரனும்னு நினைச்சா அது கனவாத்தான் இருக்குங்கிறதால இந்த வருடத்தில் இருந்தாவது செய்யனும்

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அழகான புகைப்படங்களுடன் சிங்கைபயணத் தொடர்....தகவல்களுடன்....தொடர்கின்றோம் சகோதரி..

கீதா: இங்கு சென்னையில் ஆமை பாதுகாப்பு ஆமை, சுற்றுப்புறச் சூழ ஆர்வலர்களால் மேற்கொள்ளப்படுகின்றது. ஆமை முட்டை இடும் காலமாகிய நவம்பர் டிசம்பர் ஏப்ரல் வரை அவை சென்னை கடற்கரை-திருவான்மியூர் டு நீலாங்கரை வரை உள்ள பகுதிகளில் வந்து முட்டை இட அதை இந்த ஆர்வலர்கள் பாதுகாத்து அந்த முட்டைகளை நீலாங்கரையில் அவர்கள் அமைத்துள்ள ஆமை ஹேச்சிங்க் வளாகத்தில் (ஆமை குழி தோண்டி அழகாக ரூம் வைத்துக் கூடு அமைப்பது போல அங்கும் அமைத்து அதற்குள் அந்த முட்டைகளை வைத்துப் பாதுகாத்து அவை பொரியும் போது அந்தக் குன்சுகளை கடலில் கொண்டு விடுகின்றார்கள். நானும் எனது மகனும் -மகன் வெட்னரியன் - அப்படி ஒரு இரவு அந்த ஆர்வலர்களுடன் இரவு 11 மணிக்கு திருவான்மியூரிலிருந்து ஆரம்பித்து கடலை ஒட்டியே நட்ந்து குழிகளில் இருந்து முட்டைகள் சேகரித்து ஆமை 90-120 வரை இடும். நீலாங்கரை வரை நடந்து சென்றோம்..காலை 4.30க்கு சென்றடைந்தோம். அப்போது ஒரு ஆமை முட்டை போட்டுவிட்டுக் கடலுக்குச் சென்றதையும் காண நேர்ந்தது. தொட்டும் பார்த்தோம் பெரிய ஆமை. பின்னர் நீலாங்கரையில் ஒரு சிறிய தட்டில் குட்டி ஆமைகளை வைத்து கையிலும் எடுத்து கடலில் விட்டோம். அவை அந்த அலைகளில் நீந்திச் சென்றதைக் கண்ட போது மிக மிக ஆனந்தமாகவும், அழகாகவும் இருந்தது. அப்போது காமெரா எல்லாம் இல்லாததால் பதிவுலகில் இல்லாததல் புகைப்படம் எடுத்துப் பதிய இயலவில்லை...தேனு..

G.M Balasubramaniam சொன்னது…

மீன்களைத் தொட்டியில் வளர்ப்பது போல் ஆமைகளையும் வளர்ப்பார்களாமே

Thenammai Lakshmanan சொன்னது…

அஹா மிக அழகான கருத்துக்கு நன்றி சரஸ் மேம். :)

சீக்கிரம் எல்லா இடமும் பார்த்துட்டு வாங்க கோபி சரபோஜி :)

அஹா அட்டகாசம் கீத்ஸ். கண்முன்னே காட்சிகள் விரிகின்றன. நள்ளிரவு நேரம். கடற்கரை ஓரம். கடல் மணல், ஆமைகள் முட்டை, அலைகள், ஆமைக்குஞ்சுகள் என டிஸ்கவரி சேனல் போல காட்சிகள் விரிகின்றன. :)

அதுபற்றி சரியா தெரில பாலா சார்.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!


கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...